உங்கள் வாழ்க்கையை வழிநடத்த உள்ளுணர்வை ஈர்ப்பது குறித்து பரமஹம்ஸ யோகானந்தர்

20 மார்ச், 2023

நமது தகுதியான இலக்குகளை அடைய, நாம் பல முடிவுகளை எடுக்க வேண்டும். நாம் வாழ்க்கையில் முன்னேறும்போது நல்ல தேர்வுகளைச் செய்ய நாம் நம்பக்கூடிய சிறந்த ஆதாரம் எது?

ஒவ்வொரு நாளும் நம் கவனத்தை ஈர்க்கும் உணர்ச்சி கவனச்சிதறல்களின் வரிசையை நாம் எதிர்கொள்கிறோம் – நமது முன்னோக்கிய பாதையை தெளிவாகக் காணும் நமது திறனுக்கு சவால் விடுக்கிறோம் – மேலும் “மன அமைதியைக்கண்டுபிடிப்பது ஒருபுறம் இருக்க, சரியான நடவடிக்கையை நான் எவ்வாறு அறிவது?” எனக் கேட்பது இயல்பானது.

பரமஹம்ஸ யோகானந்தர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருப்பது உள்ளுணர்வின் சக்திவாய்ந்த ஒளியான “ஆறாம் அறிவு” என்று போதித்தார். “உள்ளுணர்வு ஆன்மாவுக்கு தன்னைப் பற்றிய அறிவை (ஸெல்ஃப்-ரியலைசேஷன்) அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.”உள்ளுணர்வு உலகின் குழப்பங்களுக்கு மத்தியில் உண்மையையும் கடமையையும் பற்றிய தெளிவான புரிதலை வழங்குகிறது.”

துல்லியமான உள்ளுணர்வை வளர்ப்பதற்கு நேரம் எடுக்கும் என்றாலும், YSS/SRF இன் மூன்றாவது தலைவர் ஸ்ரீ தயாமாதா, “நீங்கள் தியானத்தைப் பயிற்சி செய்யும்போது, இந்த பயிற்சியால் வழங்கப்பட்ட உள்முக அமைதி நிலையில் மேலும் வாழும்போது, உங்கள் உள்ளுணர்வு சக்தியின் வளர்ச்சியில் அதிகரித்து வரும் மேம்பாட்டைக் காண்பீர்கள்” என்று எங்களுக்கு உறுதியளித்தார்.

எனவே, நீங்கள் மேலும் அறியத் தயாராக இருந்தால், ஆழ்ந்த, அமைதியான மூச்சை இழுத்து, உள்ளுணர்வின் மூலம் உங்கள் வாழ்க்கையை வழிநடத்துவதற்கான ஆன்மா நுண்ணறிவுகளை எவ்வாறு பெறலாம், மிக முக்கியமாக உங்களுக்குள் உள்ள தெய்வத்தின் இருப்பை உணரலாம் என்பது குறித்த பரமஹம்ஸரின் ஞானத்தை உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

பரமஹம்ஸ யோகானந்தரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:

எந்த அளவுக்கு தியானம் செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் மனதை தெய்வீக உணர்வோடு இயைந்து வைத்தால், உங்கள் உள்ளுணர்வு வலுவடைகிறது. கூடுதலாக, தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியவர்கள் மற்றும் அக அமைதியுடன் இருப்பவர்கள் மிகவும் கூர்மையான உள்ளுணர்வு சக்திகளைக்கொண்டுள்ளனர்.

எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: வாழ்க்கையின் இருண்ட பாதையில் நீங்கள் நகரும்போது, அந்த உள்ளுணர்வு திறனை வளர்ப்பதே மிகப்பெரிய விஷயம். அது தியானத்தின் மூலமே முடியும்; வேறு வழியில்லை. நான் உள்ளுணர்வைப்பயன்படுத்தும்போது, அது எப்போதும் எனக்கு சரியான முடிவைக்காட்டுகிறது. அது ஒருபோதும் தோல்வியடைவதில்லை.

இந்த உள்ளுணர்வு உங்களுக்கு உள் குரலாகவோ அல்லது மென்குரலாகவோ வருகிறது. அந்த உள் வழிகாட்டுதலை ஆழ்மனதின் கற்பனைக் குரல்களிலிருந்து வேறுபடுத்துவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உள்ளுணர்வு என்பது மனிதனின் மனம் அமைதியாக இருக்கும் தருணங்களில் இயல்பாகவே தோன்றும் ஆன்ம வழிகாட்டுதல் ஆகும்…. மனதை அமைதிப்படுத்துவதே யோக அறிவியலின் குறிக்கோள், அது சிதைக்கப்படாமல் இருந்தால் உள் குரலின் பிழையற்ற ஆலோசனையை கேட்க முடியும்.

தெய்வத் தந்தையை நாம் அறிந்திருக்கும்போது, நம்முடைய சொந்த பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, உலகத்தைச் சூழ்ந்துள்ளவற்றுக்கும் நம்மிடம் பதில்கள் இருக்கும். நாம் ஏன் வாழ்கிறோம், ஏன் இறக்கிறோம்? நிகழ்கால நிகழ்வுகள் ஏன், கடந்த கால நிகழ்வுகள் ஏன்? எல்லா மனிதர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் மகான் பூமியில் வருவாரா என்பது சந்தேகமே. ஆனால் தியானம் எனும் கோயிலில் நம் உள்ளத்தை உறுத்திய வாழ்க்கையின் ஒவ்வொரு புதிர்களும் தீர்க்கப்படும். வாழ்க்கையின் புதிர்களுக்கான பதில்களைக்கற்றுக்கொள்வோம், இறைவனுடன் தொடர்பு கொண்டால், நம் எல்லா கஷ்டங்களுக்கும் தீர்வைக் கண்டுபிடிப்போம்.

[யோகதா சத்சங்கப்பாடங்களில் பிரார்த்தனை-உறுதிமொழியிலிருந்து:] அன்புள்ள தந்தையே, என் மனதின் தனிமையில் உமது பேச்சைக் கேட்க ஏங்குகிறேன். உனது மௌனத்தின் உதடுகளைத் திறந்து, என் ஆன்மாவுக்கு இடைவிடாத வழிகாட்டும் எண்ணங்களை இரகசியமாகப்பேசுவாயாக.”

பரமஹம்ஸ யோகானந்தரின் உள்ளுணர்வு குறித்த மேலும் அணுகக்கூடிய மற்றும் ஊக்கமளிக்கும் “எப்படி வாழ்வது” வழிகாட்டுதலை எங்கள் வலைத்தளத்தில் காணலாம். அவரது நித்திய புரிதலிலிருந்து அந்த உத்வேகத்தை உங்கள் தியானப்பயிற்சியுடன் இணைக்குமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

இதைப் பகிர