ஒரு யோகியின் சுயசரிதம்

பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய நீடித்து நிலைக்கும் ஆன்மீக இலக்கியத்தின் ஒரு விரிவான மேலோட்டம்.

2021 -ஆம் ஆண்டு, உலகின் மிகவும் போற்றப்படும் ஆன்மீக இலக்கியங்களின் ஒன்றான பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஒரு யோகியின் சுய சரிதம் என்ற நூலின் 75-வது ஆண்டு நிறைவடைந்த முக்கிய நிகழ்வைக் குறிக்கிறது.

பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். இந்த நூல் உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் மனங்களையும் கவர்ந்துள்ளது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த நூல் எண்ணற்ற வாசகர்களை இந்தியாவின் பழம்பெரும் யோக அறிவியலுக்கும் உலக நாகரிகத்திற்கு இந்தியாவின் தனிச்சிறப்புவாய்ந்த மற்றும் அழியாத கொடையாக விளங்கும் இறை-அனுபூதியை அடைவதற்கான அறிவியல்பூர்வ வழிமுறைகளுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

1946-ல், முதன் முதலாக அச்சிற்கு வந்த நாள்தொட்டே, தலைசிறந்த படைப்பு என்று பாராட்டப் பெற்ற இந்த சுயசரிதம் தொடர்ச்சியாக சிறப்பாக விற்பனையாகும் ஆன்மீக நூல்களின் வரிசையில் இருந்து வருகிறது மற்றும் பல்வேறு மார்க்கங்களின் ஆன்மீக ஆர்வலர்களால் வாசிக்கப்பட்டிருக்கிறது. 1999-ல், “நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில்” ஒன்றாகக் கெளரவிக்கப்பட்டது.

தொடர்ச்சியான மற்றும் பெருகும் ஆர்வத்தின் காரணமாக, இந்த நூல் 15 முக்கிய இந்தியத் துணைக்கண்ட மொழிகளிலும் உலகம் முழுவதிலும் 50க்கும் மேலான மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காகித அட்டை கொண்ட நூல், ஒலிநூல் மற்றும் மின்னூல் வடிவங்களில் கிடைக்கிறது.

இலவச ஒலிநூல்களைப் பதிவிறக்கம் செய்யுங்கள்

யோகியின் ஒரு சுயசரிதம் நூலின் ஒலிவடிவத்தைக் கீழ்க்கண்ட ஐந்து இந்திய மொழிகளில் உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கேளுங்கள்.

மின்நூலைப் பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்த மின்நூல் தொழில்சார்ந்த தரநிலை கொண்ட இபியுபி வடிவில் உள்ளது மற்றும் ஒரு தகுந்த மின்நூல் வாசிப்புச் செயலின் வாயிலாக பெரும்பாலான சாதனங்களில் இதை வாசிக்க முடியும்.

ஆங்கில ஆடியோபுக் குறுந்தகடு வாங்கவும்

“காந்தி” திரைப்படத்திற்காக அகாதமி விருது வென்ற சர் பென் கிங்ஸ்லி படித்தார்

நூலின் முன்னோட்டம்

மிகவும் உத்வேகமூட்டும் பகுதி

ஒரு தனிச்சிறப்புமிக்க ஆசிரியர், ஒரு தனிச்சிறப்புமிக்க நூல், மற்றும் ஒரு தனிச்சிறப்புமிக்க செய்தி

நெருங்கிய சீடர்களின் கதைகள்

53 உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஒரு யோகியின் சுயசரிதத்தின் உருவாக்கம்

இந்நூல் நீண்ட காலத்திற்கு முன்பே  எழுதப்படுவதைப் பற்றி தீர்க்க தரிசனமாகக் கூறப்பட்டிருந்தது. நவீன காலத்தில் யோகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான, பத்தொன்பதாவது நூற்றாண்டின் வணக்கத்திற்குரிய மகான் லாஹிரி மகாசயர் முன்கூட்டியே அறிவித்தார்: “நான் மறைந்து ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்குப் பிறகு மேற்கில் எழப்போகும் யோகத்தின் ஆழ்ந்த ஆர்வத்தின் காரணமாக, என் வாழ்க்கையின் விவரம் எழுதப்படும். யோகம் பற்றிய செய்தி இவ்வுலகைச் சூழும். அது மனித சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கு உதவி புரியும்: ஒரே பரமபிதாவைப் பற்றிய மனித இனத்தின் நேரடியாக அறியும் சக்தியின் அடிப்படையிலான ஒற்றுமை.”

பல வருடங்களுக்குப் பின்னர் லாஹிரி மகாசயரின் உயர்ந்த சீடரான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர், ஸ்ரீ யோகனந்தருக்கு இந்தத் தீர்க்க தரிசனத்தை எடுத்துரைத்தார்.

ஓர் அளவிடற்கரிய வாக்குறுதி

இந்த நூலின் இறுதி அத்தியாயத்தில், பரமஹம்ஸ யோகானந்தர் எழுதுகிறார்:

இறைவன் அன்புமயமானவன்; படைப்பிற்கான அவனுடைய திட்டம், அன்பில் மட்டுமே வேரூன்றி இருக்க முடியும். அறிவாளிகளின் பகுத்தறிவு வாதங்களுக்கு மாறாக இந்த எளிய உண்மை மனித இதயத்திற்கு ஆறுதல் அளிக்கவில்லையா? மெய்ப்பொருளின் ஆழத்தைத் துளைத்தறிந்த முனிவர்கள் அனைவரும் கூறுவது: உலக முழுவதிற்கும் ஒரு தெய்வீகத் திட்டம் இருக்கிறது. அது மிக அழகானது, ஆனந்த மயமானது.”

இந்திய முனிவர்களின் அறிவெல்லை-கடந்த சத்தியத்தில் ஓர் ஆழ்ந்த நம்பிக்கைக்கு வாயிலைத் திறக்கும் உங்களுடைய சொந்த ஆன்மாக்களை நீங்கள் காண்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்மேலும் அந்த நம்பிக்கை சோதனைகளின் ஊடாகவும் உண்மையான மகிழ்ச்சியின் மற்றும் நிறைவேற்றத்தின் முயற்சியிலும் உங்களைப் பேணிக்காக்கிறது.

இதைப் பகிர