எட்டடுக்கு (அட்டாங்க) ராஜ யோகப்பாதை


காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா
, என்ற தனது திட்டவட்டமான மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க உரையில் பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவின் மிகவும் பிரியமான யோக மறைநூலாகிய கீதை, யோக விஞ்ஞானத்தின் முழுமையை உருவகத்தில் உணர்த்துகிறது என்பதை வெளிப்படுத்தினார்.

கீதையில் பொதிந்துள்ள யோகச் செய்தியை முழுமையாகப் புரிந்து கொண்ட பதஞ்சலி முனிவர், ராஜ (“மேன்மையான”) யோகப் பாதையின் சாரத்தை தனது எளிய மற்றும் முறைப்படுத்தப்பட்ட வடிவமாக தனது குறுகிய மற்றும் தேர்ச்சிமிகு படைப்பான யோக சூத்திரத்தில் அமைத்தார்.

பரமஹம்ஸ யோகானந்தர் பதஞ்சலி, “பெரிதும் பரந்து விரிந்த மற்றும் பெரும் புதிரான இறை-ஐக்கிய விஞ்ஞானத்தின் சுருக்கப்பட்ட சாராம்சத்தை சுருக்கமான நீதி மொழித் தொடரில் வழங்கியிருக்கிறார் — வேறுபடுத்தப்படாத பரம்பொருளுடனான ஆன்ம ஐக்கியத்தின் வழிமுறையை, பல தலைமுறைசார்ந்த அறிஞர்களும் அவரின் யோக சூத்திரங்களை யோகத்தின் மீதான மிகவும் முன்னோடியான பழங்கால நூல் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் படியாக அத்துணை ஓர் நேர்த்தியான, எளிய, தெளிவான மற்றும் சுருக்கமான வகையில் அமைத்து வழங்கியிருக்கிறார்.” என்று கூறினார்.

பதஞ்சலியின் யோக அமைப்பு எட்டடுக்குப் பாதை என்று அறியப்படுகிறது; அது இறை-அனுபூதி எனும் இறுதி இலக்கிற்கு வழிநடத்திச் செல்கிறது.

யோகத்தின் எட்டடுக்கு (அட்டாங்கப்) பாதை:

  • இயமம் (ஒருவர் தவிர்க்க வேண்டிய நடத்தைகளை கோடிட்டுக் காட்டும் தார்மீக விதிகள்): மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்தல், வாய்மையற்றத் தன்மை, களவு, கட்டுப்பாடற்றிருத்தல் (பாலியல் உந்துதலின் கட்டுப்பாடு இல்லாமை), மற்றும் பேராசை
  • நியமம் (வளர்த்துக்கொள்ள வேண்டிய ஆன்மீக குணங்கள் மற்றும் நடத்தை): உடற்தூய்மை மற்றும் மனத்தூய்மை, எல்லாச் சூழல்களிலும் மனநிறைவு, சுய-கட்டுப்பாடு, சுய-ஆய்வு (ஆழ்ந்த சிந்தனை), மற்றும் இறைவனிடத்திலும் குருதேவரிடத்திலும் பக்தி.
  • ஆசனம்:: சரியான அமர்வுநிலை
  • பிராணாயாமம் : உடலில் உள்ள நுட்பமான உயிரோட்டங்கள் எனும் பிராணன் மீதான கட்டுப்பாடு
  • பிரத்தியஹாரம்: புறப் பொருட்களிலிருந்து புலன்களைப் விலக்கிக் கொள்வதன் வாயிலாக உணர்வுநிலையை அகமுகமாக்குதல்
  • தாரணை: குவிக்கப்பட்ட ஒருமுகப்பாடு; மனத்தை ஒரு சிந்தனையின் மீது அல்லது பொருளின் மீது வைத்திருத்தல்
  • தியானம்: முழுப் பிரபஞ்சத்தின் ஊடாகவும் எல்லாவற்றிலும் ஊடுறுவியிருக்கும் இறைவனின் எல்லையற்ற அம்சங்களில்—பேரின்பம், பேரமைதி, பேரண்டப் பேரொளி, பேரண்டப் பெருவொலி, பேரன்பு, ஞானம் முதலியவை—ஒன்றின் பரந்த உணர்வில் ஒன்றுதல்
  • சமாதி: பேரண்டப் பரம்பொருளுடனான தனிப்பட்ட ஆன்மாவின் ஐக்கியத்தில் பெறும் உயர்-உணர்வுநிலை அனுபவம்

பிராணாயாமம் (உயிர்-ஆற்றல் கட்டுப்பாடு, எட்டடுக்குப் (அட்டாங்க) பாதையின் நான்காவது படி) என்ற மிக உயர்ந்த பயிற்சி, ராஜ யோகத்தின் விஞ்ஞான தியான உத்திகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது, உணர்வுநிலையின் அகமுகமாக்கலை அடையும் பூர்வாங்க இலக்குடன் கூட (பிரத்தியாஹாரம்) இறுதி இலக்கான (சமாதி) பரம்பொருளுடனான ஐக்கியம்.

பொதுவாக உயிர்ஆற்றல் தொடர்ந்து நரம்பு மண்டலம் மற்றும் புலன்கள் வழியாக வெளிப்புறமாகப் பாய்கிறது, இதனால் நம்மைச் சுற்றியுள்ள உலகை நாம் அறிந்திருக்கிறோம். பிரணாயாம உத்திகள் மூலம் அதே உயிர்ஆற்றல் (பிராணன்) முதுகுத்தண்டு மற்றும் மூளையின் ஆன்மீக விழிப்புணர்வின்
உயர் மையங்களை நோக்கி உள்முகமாக இயக்கப்படுகிறது, இதனால் நமக்குள் இருக்கும் பரந்த உலகத்தை நாம் உணரமுடியும்.

யோகதா சத்சங்க பாடங்களில் ஒய் எஸ் எஸ் கற்பிக்கும் தியான உத்திகள், குறிப்பாக கிரியா யோக உத்தி, உயரிய ராஜ யோக பிராணாயாமா உத்திகள். பரமஹம்ஸ யோகானந்தர் அவற்றை, ஆன்மாவை பரம்பொருளின் பேரின்பத்துடன் மீண்டும் ஐக்கியப்படுத்துவதற்கான விரைவான வழி என்று அடிக்கடி கூறுவார்.

பிராணாயாமப் பயிற்சிகளினால், நேரடி வழியாகிய உடல் சக்தியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மூலம் வாழ்க்கையின் கவனச்சிதறல்களிலிருந்து கவனத்தை விடுவிக்கிறோம் – இல்லையெனில் அவை நமது உணர்வுநிலையை வெளிப்புறம் வைத்திருக்கும். அதன் மூலம் நமது உண்மையான சுயம், எப்போதும் பரம்பொருளுடன் ஒன்றிணைந்திருக்கும் அசைக்க முடியாத அழியாத ஆன்மா என்றுணர்வதைத் தடுக்கும் அமைதியற்ற எண்ணங்கள் மற்றும் கொந்தளிப்பான உணர்ச்சிகளை கட்டுபடுத்துகிறோம்.

இதைப் பகிர