கோபத்தை வெல்வது எப்படி

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துகளில் இருந்து சில பகுதிகள்

கோபம் இல்லாமல் இருப்பது என்பது மன அமைதிக்கான விரைவான வழியாகும். ஒருவருடைய ஆசைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் கோபம் ஏற்படுகிறது. மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத, ஆனால் எல்லா நிறைவுகளுக்காகவும் கடவுளை நோக்கும் ஒருவர் தனது சக மனிதர்களிடம் கோபத்தை உணரவோ அல்லது அவர்களால் ஏற்படும் ஏமாற்றத்தை உணரவோ முடியாது.ஒரு முனிவர், இறைவன் பிரபஞ்சத்தை இயக்குகிறார் என்று அறிவில் திருப்தி அடைகிறார். அவர் ஆத்திரம் விரோதம் மற்றும் மனக்கசப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறார்.

கோபம் எந்த நோக்கத்திற்காக தூண்டப்படுகிறதோ அதை தோற்கடிக்கும். கோபத்திற்கு ஒரு மாற்று மருந்து கோபம் அல்ல. ஒரு வலுவான கோபம் மற்றொருவரின் பலவீனமான கோபத்தை அடக்குவதற்கு காரணமாக இருக்கலாம், ஆனால் அது ஒரு போதும் அந்த பலவீனமான கோபத்தை வெல்லாது. நீங்கள் கோபமாக இருக்கும் போது எதுவும் சொல்லாதீர்கள். கோபம் ஜலதோஷத்தைப் போல ஒரு நோய் என்பதை அறிந்து..யாரிடம், அவர்கள் என்ன செய்தாலும், உங்களால் கோபப்பட முடியாதோ அவர்களை எண்ணி கோபத்தை மானசீகமாக உடைத்து எறியுங்கள். உங்கள் உணர்ச்சிகள் மிகுந்த வன்முறை தன்மையுடன் இருந்தால் குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்யுங்கள். அல்லது முகுளம் மற்றும் நெற்றியில்குறிப்பாக புருவங்களுக்கு இடையில் மற்றும் தலையின் மேற்புறத்தில் ஒரு பனிக்கட்டி வைத்து ஒற்றி எடுங்கள்.

கோபம் – பொறாமை, வெறுப்பு, துவேஷம், பழிவாங்குதல், அழிவுகரமான உள்ளுணர்வு, கட்டுப்பாடில்லாத சிந்தனைகள், மூளை முடக்கம் மற்றும் தற்காலிக மனநிலை பாதிப்பு ஆகியவற்றிற்கு பிறப்பிடமாக அமைகிறது – இவைகளில் எவையேனும் பயங்கர குற்றங்களுக்கு வழி வகுக்கும். இவை அமைதி சார்ந்த தன்மைக்கு விஷமானது. இவை புரிந்துகொள்ளும் தன்மைக்கும் எதிரானது. தவறான புரிதலுக்கு கோபம் வழிவகுக்கும். கோபத்தால் மற்றவர்களை வெல்வது முட்டாள்களின் முறையாகும், ஏனென்றால் இது எதிரிக்கு அதீத கோபத்தை உண்டாக்குகிறது மேலும், இதனால் அவரை ஒரு வலிமையான மற்றும் சக்தி வாய்ந்த எதிரியாக ஆக்குகிறது. கோபத்தை, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் தீமையை தவிர்ப்பதற்காக, நல்ல முறையாக கையாளுபவர்களுக்கு நல்ல பலனைத் தரும். குருட்டுத்தனமான மற்றும் கட்டுப்பாடு இல்லாத கோபம் பழிவாங்குதல் மற்றும் துவேஷ உணர்ச்சிக்கு வழிவகுக்கும். இது நீங்கள் அழிக்க விரும்பும் தீமையை மட்டுமே அதிகரிக்கும். உங்களைக் கோபப்படுத்தி ரசிப்பவர்களிடம் அக்கறையற்று இருங்கள்.

கோபம் வரும்போது கோபத்தைத் தடுக்க கூடிய மாற்று மருந்துகளான அமைதி, அன்பு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைத் தயாரிக்க உங்கள் அமைதி இயந்திரத்தை இயக்குங்கள். அன்பைப்பற்றி யோசித்து இனிபாருங்கள்- எப்படி மற்றவர்கள் உங்களிடம் கோபப்படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்களோ அதே போல உங்களின் அசிங்கமான கோபத்தை மற்றவர்கள் உணரவும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பது புலப்படும். நீங்கள் கிறிஸ்து தன்மைக்கு உயர்ந்து, மனிதகுலத்தை ஒருவருக்கொருவர் புண்படுத்திக்கொள்ளும் சிறிய சகோதரர்களாக பார்க்கும் பொழுது, (அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது) நீங்கள் யாரிடமும் கோபப்பட முடியாது. அறியாமை என்பது எல்லா கோபத்திற்கும் தாய்.

மனோதத்துவ காரணத்தை வளர்த்து கோபத்தை அழிக்கவும். கடவுளின் குழந்தையாகக் கோபத்தை தூண்டும் முகவரை பாருங்கள்; ஒரு சிறிய 5 வயது குழந்தை சகோதரனாக அவரை நினைத்துப் பாருங்கள், அவர் அறியாமல் உங்களைக் குத்தி இருக்கலாம். பதிலுக்கு இந்த சிறிய சகோதரனை குத்தவிரும்பும் விருப்பத்தை நீங்கள் உணரக் கூடாது. “நான் கோபத்தினால் என் அமைதியை விஷமாக்க மாட்டேன். பேரானந்தம் தரும் அமைதியை கோபத்தைக் கொண்டு தொந்தரவு செய்ய மாட்டேன்” எனக்கூறி மனதளவில் கோபத்தை அழியுங்கள்.

ஏறக்குறைய இரண்டு வகையாக மக்கள் உள்ளனர்: உலகில் என்னென்ன தவறு நடக்கிறது என்று தொடர்ந்து புலம்புவோர், மற்றும் எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் வாழ்க்கையின் சிரமங்களை சிரித்தவாறே கடக்கிறவர்கள். எல்லாவற்றையும் ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? எல்லாரும் அதிக நேர்மறை சிந்தனை உடையவர்களாகவும் இணக்கமானவர்களாகவும் இருந்தால் இந்த உலகம் எவ்வளவு அருமையாக இருக்கும!

நாகரீகக் காட்டில், நவீன வாழ்க்கையின் அழுத்தத்தில், சோதனை உள்ளது. நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அது உங்களிடம் திரும்பி வரும். வெறுப்பைக் கொடுத்தால், பதிலுக்கு நீங்கள் வெறுப்பை பெறுவீர்கள். நீங்கள் இணக்கமற்ற எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளால் உங்களை நிரப்பும்போது, உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள். யாரையும் வெறுப்பது அல்லது கோபப்படுவது ஏன்? உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள். கோபத்தின் வெப்பத்தில் ஏன் வெந்து போகிறீர்கள்? கோபத்தினால் கிளர்ந்து எழுந்தீர்கள் என்றால், அதிலிருந்து உடனடியாக மீண்டு வாருங்கள். நடந்து செல்லுங்கள், 10 அல்லது 15 வரை எண்ணுங்கள், அல்லது உங்கள் மனதை இனிமையான ஒன்றுக்கு திசை திருப்புங்கள். பழிவாங்கும் ஆசையை விடுங்கள். நீங்கள் கோபமாக இருக்கும் போது உங்கள் மூளை அதிக வெப்பமடைகிறது, உங்கள் இதய வால்வு பிரச்சனை உள்ளது, உங்கள் முழு உடலும் சிதைந்து போகிறது. அமைதியையும் நன்மையையும் வெளிப்படுத்துங்கள். ஏனென்றால் அது உங்களுக்குள் இருக்கும் கடவுள் தன்மையின் இயல்பு – உங்கள் உண்மையான இயல்பு. பிறகு உங்களை யாரும் தொந்தரவு செய்ய முடியாது.

நீங்கள் ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்கவோ அல்லது கெட்ட பழக்கத்தை அழிக்கவோ விரும்பும்போது, பழக்கவழக்கங்களின் களஞ்சியமான மூளை செல்களில் கவனம் செலுத்துங்கள். ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்க, தியானம் செய்யுங்கள்; அதன்பின்னர் புருவங்களுக்கு இடையே உள்ள இச்சா சக்தியின் மையமான கிறிஸ்து மையத்தில் மனதை ஒருமுகப்படுத்தி நிலைநிறுத்தி நீங்கள் நிறுவ விரும்பும் நல்ல பழக்கத்தை ஆழமாக உறுதிப்படுத்தவும். நீங்கள் கெட்ட பழக்கத்தை அழிக்க விரும்பும்போது கிறிஸ்து மையத்தில் கவனம் செலுத்தி, கெட்ட பழக்கங்களின் அனைத்து வடுக்களும் அழிக்கப்படுகின்றன என்பதை ஆழமாக உறுதிப்படுத்துதவும்.

இந்த உத்தியின் செயல்திறன் பற்றிய ஒரு உண்மையான கதையை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியாவில், எளிதில் கோபம் கொள்ளும் சுபாவம் கொண்ட ஒருவர் என்னிடம் வந்தார். அவர் பொறுமை இழந்த போது தனது முதலாளிகளை அறைவதில் ஒரு நிபுணராக இருந்தார், இதனால் தனது வேலையை ஒன்றன்பின் ஒன்றாக இழந்தார். அவருடைய கோபம் எவ்வளவு கட்டுக்கடங்காமல் இருக்கும் என்றால் தன்னை தொந்தரவு செய்பவர்களை நோக்கி கையில் கிடைத்ததை தூக்கி எறியும் சுபாவம் கொண்டவராக இருந்தார். அவர் என்னிடம் உதவி கேட்டார். நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன், “அடுத்த முறை நீங்கள் கோபப்படும்போது, நீங்கள் செயல்படுவதற்கு முன் நூறு வரை எண்ணுங்கள்”. அவர் அதை முயற்சித்தார், ஆனால் என்னிடம் திரும்பிவந்து, “நான் அதை செய்யும்போது எனக்கு அதிகம் கோபம் வருகிறது. நான் எண்ணும் போது இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்று கோபத்தால் நான் குருடன் ஆகிறேன்” என்றார். அவரது நிலைமை நம்பிக்கை அற்றதாகத் தோன்றியது.

அதன் பின்னர் நான் அவரை கிரியா யோகா பயிற்சி செய்யச் சொன்னேன். மேலும் இவ்வாறாக அவரை அறிவுறுத்தினேன்: “உங்கள் கிரியா பயிற்சி செய்தபிறகு, தெய்வீக ஒளி உங்கள் மூளைக்குள் ஊடுருவி, அதை அமைதிப்படுத்தி, உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தி, உங்கள் உணர்ச்சிகளை அமைதிப்படுத்தி, உங்கள் அனைத்து கோபங்களையும் துடைத்து எடுப்பது போன்று எண்ணுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் கோபங்கள் அனைத்தும் விலகிவிடும்.” சிறிது நாள் கழித்து, அவர் மீண்டும் என்னிடம் வந்தார். இந்த முறை அவர் கூறினார், “நான் கோபத்தின் பழக்கத்தில் இருந்து விடுபட்டேன். நான் மிகவும் நன்றி உள்ளவனாக உங்களுக்கு இருப்பேன்”.

“என்னைப் புண்படுத்திய அனைவரையும் இன்று நான் மன்னிக்கிறேன் என்னை நேசிப்பவர்களுக்கு என்னை நேசிக்க அவர்களுக்கும் தாகம் நிறைந்த இதயங்களுக்கும் என் அன்பை அளிக்கிறேன்”

நான் அவரை சோதிக்க முடிவு செய்தேன். அவருடன் சண்டையிட சில சிறுவர்களை ஏற்பாடு செய்தேன். அவரைக் கண்காணிப்பதற்காக அவர் வாடிக்கையாக கடந்து செல்லும் வழியில் உள்ள பூங்காவில் நான் ஒளிந்து கொண்டேன். சிறுவர்கள் மீண்டும் மீண்டும் அவரைச் சண்டைக்கு இழுக்க முயன்றனர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. அவர் அமைதியாக இருந்தார்.

உறுதி மொழி

உறுதிப்படுத்தும் கோட்பாடு மற்றும் அறிவுறுத்தல்கள்

“என்னை ஆசீர்வதியுங்கள், நான் கோபத்தைக் குணப்படுத்துகிறேன், சுயமரியாதையின் இரட்சிப்பால் என்னுள் வலிக்கிறது, மற்றும் கோபமானது மற்றவர்களிடம் தயவின் பால் வலிக்கிறது.”

மேலும் ஆய்வு

இதைப் பகிர