சவாலான இந்த காலகட்டத்திற்குத் தேவையான ஆன்மீக வெளிச்சம்

இன்றைய உலகில், என்ன நடக்கும் என்று தெரியாத நிச்சயமற்ற தனிமையில் சிக்குன்று, தமக்கும் தமது குடும்பங்களுக்கும் தேவையான புரிதலையும் மார்கத்தையும் பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பரமஹம்ஸ யோகானந்தரின் அறிவார்ந்த போதனைகளில், எந்த சோதனையையும் கடந்து வருவதற்கான வழிகாட்டுதலையும் அரவணைப்பும் கிட்டுகின்றன. பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது சீடர்களின் சொற்களிலிருந்து திரட்டிய கீழ்காணும் இணைப்புகள் ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வல்லவை. இறைவனின் அழியாத அன்பின் மீதும் அவன் அளிக்கும் பாதுகாப்பின் மீதும் அவன் உங்களுக்கு அளித்துள்ள சக்தியின் மீதுமான உங்களது நம்பிக்கை இப்போது புத்துயிர் பெறும். இனி இவ்வுலகில் அவனது அழிவற்றக் குழந்தையாக, வலிமையுடன், புரிதலுடன், அனைவர் மீதும் கருணையுடன் சஞ்சரிக்க உங்களால் முடியும்.

பரமஹம்ஸாஜியிடமிருந்து நடைமுறை படுத்துவதற்கான உத்வேகம்

இனம், மதம், நிறம், வர்க்கம் மற்றும் அரசியல் பாரபட்சங்களால் நாம் பிளவுபட்டதாகத் தோன்றினாலும், ஒரே இறைவனின் குழந்தைகளாக நாம் நம் ஆன்மாவில் சகோதரத்துவத்தையும் உலக ஒற்றுமையையும் உணர முடிகிறது….நம் இதயங்களில் நாம் அனைவரும் வெறுப்பு மற்றும் சுயநலத்திலிருந்து விடுபட கற்றுக்கொள்ளலாம். தேசங்களிடையே ஒற்றுமைக்காக நாம் பிரார்த்ர்திபோம், அவர்கள் ஒரு நியாயமான புதிய நாகரிகத்தின் வாயில் வழியாக கைகோர்த்து அணிவகுத்துச் செல்ல வேண்டும்.

— பரமஹம்ஸ யோகநந்தர்

ஒரு உறுதிமொழி பயிற்சி: “நான் இறுக்கமின்றி இருந்து எல்லா மனச் சுமைகளையும் விட்டொழிக்கிறேன்; எனவே இறைவன் தனது பரிபூரண அன்பு, அமைதி, மற்றும் ஞானத்தை என் மூலம் வெளிப்படுத்த இயலும்.”

பயத்தை சமாளிப்பதற்கான ஒரு எளிய பயிற்சி: அச்சம் இதயத்தில் இருந்து வருவது. ஒரு நோய் அல்லது விபத்து ஏற்படும் என்ற அச்சம் உங்களைப் பற்றிக் கொண்டால், நீங்கள் பல முறை, ஆழமாக, மெதுவாக, ஒரே சீரான லயத்தோடு, மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். ஒவ்வொரு முறை வெளியேற்றும் போதும் ஓய்வெடுங்கள். இது இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உங்கள் இதயம் உண்மையிலேயே அமைதியாக இருக்குமானால், உங்களால் பயத்தை உணரவே முடியாது.”

Play Video

எதிர்மறை உணர்வுகளை வெளியிடுவதற்கான ஒரு

ஒய்.எஸ்.எஸ்/எஸ்.ஆர்.எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சிதானந்த கிரியின் செய்தியைப் படிக்கவும்

பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook
X
WhatsApp
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.
This site is registered on Toolset.com as a development site.