விவேகத்தை எவ்வாறு வாழ்க்கையாக கொள்வது

“எல்லோருக்கும் அன்பை வழங்குவது, இறைவனின் அன்பை உணருவது, எல்லோரிடமும் அவனுடைய இருப்பைப் பார்ப்பது, மற்றும் ஓர் ஆசையை—உங்கள் உணர்வுநிலை எனும் ஆலயத்தில் அவனுடைய தொடர்ச்சியான இருப்பிற்கான ஆசையை—மட்டுமே வைத்துக் கொள்வது, அதுதான் இவ்வுலகில் வாழும் வழி.”

—ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

அன்றாட வாழ்விற்கான வழிகாட்டலும் உத்வேகமும்

Cat depicting need for guidance.

யுகயுகங்களாக, மறைஞானிகள், மகான்கள், துறவிகள் மற்றும் யோகிகள் அனைவரும் ஒரே பதிலைத்தான் நமக்கு அளித்துள்ளனர்: இறைவனுடனான ஒரு தனிப்பட்ட உறவை—நமது அன்றாட வாழ்க்கைகளில் பரம்பொருளுடன் நம்மை இணைக்கும் ஒன்றை—வளர்த்துக்கொள்ள. ஆன்மீக வாழ்க்கை அந்த உறவை வளர்க்கும் ஒரு நடைமுறைக்கேற்ற அணுகுமுறை ஆகும்.

Children meditating.

ஒவ்வொரு தலைப்பையும் பற்றிய நடைமுறைக்கேற்ற ஆலோசனையுடன் சேர்த்து, ஒவ்வொரு பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள சங்கல்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளத் தவறாதீர்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வுசெய்யப்பட்ட மகிழ்ச்சி, குணமாக்குதல், அமைதி ஆகியவற்றையும் மற்ற ஆன்மீக நன்மைகளையும் நோக்கிச் செல்லும் உங்களுடைய தனிப்பட்ட பயணத்தைத் துவக்க இப்போதே உங்களால் பயிற்சி செய்ய முடியும்.

கூடுதலாக, ஒவ்வொரு தலைப்பும் அதிக ஆழ்ந்த ஆய்விற்குத் தேவையான ஆதாரங்களுக்கான இணைப்புச் சுட்டிகளையும், அத்துடன் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்டுள்ள பல புத்தகங்களில், ஒலி/ காணொலிப் பதிவுகளில், மற்றும் ஏனைய வெளியீடுகளில் அந்தத் தலைப்பின் மீது அதிகமாக எங்கே காணலாம் என்பதற்கான உதவிகரமான ஆலோசனைகளையும் உள்ளடக்கியது.

தலைப்புகள்

இதைப் பகிர