பாரதம் திரும்புதல் (1935-36)

Swami Sri Yukteswar and Yogananda at Kolkata in 1935. 1935-ம் ஆண்டில், யோகானந்தர் தனது உன்னத குருவினிடம் (இடது) இறுதி வருகை புரிவதற்காக இந்தியா திரும்பினார். (ஸ்ரீ யுக்தேஸ்வர் 1936 மார்ச் 9 அன்று மறைந்தார்). ஐரோப்பா, பாலஸ்தீனம் மற்றும் எகிப்து வழியாக கப்பல் மற்றும் மோட்டார்வாகனம் மூலம் பயணம் செய்த அவர் 1935 கோடையில் மும்பையை வந்தடைந்தார்.

Yogananda and Mahatma Gandhi at Wardha.

யோகானந்தர் தனது தாய்நாட்டில் ஒரு முழு ஆண்டு தங்கியிருந்த போது, துணைக்கண்டம் முழுவதும் உள்ள நகரங்களில் வகுப்புகள் நடத்தினார் மற்றும் கிரியா யோக தீட்சை அளித்தார். கிரியா யோக தீட்சையை அருளுமாறு கேட்டுக் கொண்ட மகாத்மா காந்தி; நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சர் சி.வி.ராமன்; இந்தியாவின் பிரபலமான ஆன்மீக பெருந்தகைகளான ரமண மகரிஷி மற்றும் ஆனந்தமயிமா உள்ளிட்ட சிலருடனான சந்திப்புகளில் மகிழ்ச்சி அடைந்தார். இந்த ஆண்டின் போதுதான் ஸ்ரீ யுக்தேஸ்வர் அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த ஆன்மீகப் பட்டமான  பரமஹம்ஸர் என்ற பட்டத்தை வழங்கினார். நேரடி அர்த்தத்தில் “மிக உயர்ந்த அன்னம்” (ஆன்மீக வேறுபாட்டைக் கண்டறிவதன் சின்னம்), இந்தப் பட்டம், இறைவனுடன் ஐக்கியமான இறுதி நிலையில் நிலைபெற்றிருக்கும் ஒருவரைக் குறிக்கிறது. இந்தியாவில் இருந்தபோது, யோகானந்தர் தனது பணிக்கான நிரந்தர அடித்தளமான, ‘யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா’-வை நிறுவினார். தக்ஷினேஸ்வரத்திலுள்ள (கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள கங்கையில்) அதன் தலைமையகத்திலிருந்து (கீழ் இடது) மற்றும் ராஞ்சியில் உள்ள முதலாவதான ஆசிரமத்திலிருந்து, ஸ்தாபனம் இன்று வரை தொடர்ந்து செழித்தோங்கி வளருகிறது – பள்ளிகள், ஆசிரமங்கள், தியான மையங்கள் மற்றும் துணைக் கண்டம் முழுவதும் இலவச தொண்டுப் பணிகளுடன். Dakshineswar Ashram on the banks of river Ganga.
1936-ன் பிற்பகுதியில் அவர் அமெரிக்காவுக்குத் திரும்பினார், அங்கு அவர் தனது வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்து வந்தார்.
Paramahansa Yogananda and Ramana Maharishi in Tiruvannamalai, Tamil Nadu.
Ananda Moyi Ma, Bholanath and Yogananda in Calcutta.
Yogananda. C. Richard Wright and Madan Mohan Malaviya.

பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook
X
WhatsApp
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.
This site is registered on Toolset.com as a development site.