அரசியல் மற்றும் அரசாங்கப் பிரமுகர்கள்

"நாம் ஐக்கிய நாடுகளில் இன்று பரமஹம்ஸ யோகானந்தரைப் போன்ற ஒரு மனிதரைப் பெற்றிருந்தால், அனேகமாக இந்த உலகம், இப்போது இருப்பதைக் காட்டிலும் நல்ல இடமாக இருக்கும்."

— டாக்டர் பினய் ஆர்.சென், அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர்.

"நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் .... நான் பல வருடங்களாக யோகானந்தருடன் கடிதப் போக்குவரத்தைத் தொடர்ந்து செய்து, பல்வேறு விஷயங்களில் கண்ணோட்டங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தேன். அவரது கடிதங்கள் எனக்கு பெரும் உத்வேகத்தையும் உதவியையும் அளித்தன. அவரது மரணம் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும்."

— மேதகு எமிலியோ போர்டெஸ் கில், மெக்சிகோவின் முன்னாள் ஜனாதிபதி

"அவரை அறியும் பாக்கியம் பெற்ற அனைவருக்கும் அவரது அன்பான ஆளுமையும் கனிவான புரிதலும் மிகப்பெரிய இழப்பாக இருக்கும்."

— குட்வின் ஜே. நைட், கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னர்

"அவர் உண்மையில் ஒரு சிறந்த நபர், இப்பூவுலக மக்களிடையே அமைதி மற்றும் புரிதலுக்காக அர்ப்பணித்துக் கொண்டார். அவர் அப்பணியில் இருந்து இவ்வுலகைச் சிறிது மேம்படுத்தி விட்டு வெளியேறினார் என்று உண்மையிலேயே கூறலாம்...".

— நீதிபதி ஸ்டான்லி மாஸ்க், கலிபோர்னியா மாநிலத்தின் உச்ச நீதிமன்றம்

"பரமஹம்ஸ யோகானந்தரின் விஞ்ஞான முறை போதனைகளும் கலந்துரையாடல்களும் மனித நாகரிக முன்னேற்றத்தின் அடையாளங்கள் ஆகும்."

— ஜி.என்.வைத்யா, உயர் நீதிமன்ற நீதிபதி, பம்பாய்,

"நீங்கள் சமீபத்தில் பிட்ஸ்பர்க்கில் இருந்தபோது உங்கள் போதனைச் சொற்பொழிவுகளிலிருந்து நான் பெற்ற நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். இந்த நாட்டில் நீங்கள் ஒரு சிறந்த ஆக்கப்பூர்வமான அறிவுரைப் பணியைச் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், மேலும் ஒவ்வொரு உதவியும் ஊக்கமும் உங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த நாட்டு மக்கள் நீங்கள் போதித்த கோட்பாடுகளுக்கு ஏற்ப வாழ்ந்தால், அறநெறி நீதிமன்றத்தின் தேவை குறைவாகவே இருக்கும் அல்லது முற்றிலும் இராது."

— A. D. பிராண்டன், அறநெறி நீதிமன்ற நீதிபதி, பிட்ஸ்பர்க்,PA

"வாஷிங்டன் தனது பங்கிற்கு பல உளவியலாளர்களைப் பெற்றுள்ளது. ஆனால் [உங்கள்] தத்துவமும் அமைப்பும் முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது என்பது கிட்டத்தட்ட உலகளாவிய சான்றாகும்....உங்கள் விரிவுரைகளும் வகுப்புகளும் என் மனைவிக்கும் எனக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்குப் பயனளித்துள்ளன. பதட்டங்கள், கவலைகள் மற்றும் நவீன அமெரிக்க வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை, அத்துடன் நடைமுறை வாழ்க்கையின் கடினமான யதார்த்தங்களுடன் நமது பாரம்பரிய கிறிஸ்தவ நம்பிக்கையை இசைவுறச் செய்யக் கூடிய ஒரு ஆன்மீகப் புரிதலுக்கான வேட்கை ஆகியவை உங்களை நாடுமாறு எங்களைத் தூண்டின. உங்கள் உன்னதமான மற்றும் நடைமுறை தத்துவத்தைக் கேட்பது எங்களுக்கு அமைதியையும் ஆறுதலையும் அளித்துள்ளது.

— லூயிஸ் ஈ. வான் நார்மன், ஆசிரியர், "தி நேஷன்ஸ் பிசினஸ்"; வணிக அதிகாரி, வணிகத் துறை

"அவரது ஆன்மாவின் குறியீடாக, அவரது ஸ்தூல உடலின் வசீகரமும், பொலிவும் தவிர, பரமஹம்ஸரின் ஆழ்ந்த பாசமும் மனிதகுலத்தின் மீதான அன்பும்—நட்பற்றவர்கள் மற்றும் அவரது விசுவாசத்தை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுபவர்கள் உட்பட — அவரது சக மனிதர்களிடையே, ஈடு செய்யக் கடினமான ஓர் அந்தஸ்தை அவருக்கு வழங்கியது.

"அவர் பிறந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஆன்மாவின் அமைதியையும், வாழ்க்கையின் மனித மற்றும் ஆன்மீக மதிப்புகளைப் பற்றிய புரிதலையும் கொண்டு வந்தார், இது நவீன சமூகத்தில் மன அமைதியைப் பெற உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலையிலுள்ள பல மனிதர்களுக்கு உதவியது மட்டுமல்லாமல், இந்திய மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையிலான புரிதலுக்கும் உதவியது.

"சமாதானத்தின் தூதராக, மனித சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராக, யோகானந்தர் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான புரிதல் மற்றும் நட்புறவின் நோக்கத்திற்காக தனது வாழ்க்கையை மற்றும் தன்வசமிருந்த முழுச் சக்தியையும் வழிமுறைகளையும் அர்ப்பணித்தார்”.

— முல்க் ராஜ் அஹுஜா,இந்திய துணைத் தூதர்

இதைப் பகிர