யோகதா சத்சங்க சன்னியாசப் பரம்பரை

இறைவனை நாடுவதற்கும் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதநலப் பணிகளுக்குச் சேவை செய்வதற்கும் அர்ப்பணித்துக் கொண்ட சன்னியாசிகள் சமூகம்

YSS_Monastics_Ranchi

முகவுரை

இறைவனை மட்டுமே காண விரும்புபவர்கள், அவனை மட்டுமே, முழுமையான துறவு மார்க்கத்தை ஆனந்தமாக அரவணைத்துக் கொள்கிறார்கள்.. துறவியின் கோட்பாடுகளுக்கு ஏற்ப வாழ்பவர்களுக்கு இறைவன் தன்னை வெளிப்படுத்துவான். “இறைவன் எனது வாழ்க்கை. இறைவன் எனது அன்பு, இறைவன், இடைவிடாத வழிபாட்டுக்கு எனது இதயத்தை அழைக்கின்ற ஆலயம். இறைவன் எனது பேரிலக்கு. இறைவனிடமிருந்து இரவலாகப் பெற்ற சக்தி இல்லாமல் ஒரு கடமையையும் நிறைவேற்ற முடியாது. எனவே எனது தலையாய கடமை அவனைக் காண்பதே.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட அர்ப்பணிப்புள்ள சன்னியாசப் பரம்பரை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் (ஒய் எஸ் எஸ்) இன் அடிப்படையாக உள்ளது.

ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் சொஸைடியின் ஆன்மீக மற்றும் மனிதநலப் பணிகளுக்கு பல் வேறு திறன்களில் சேவை செய்கின்றனர் – பரமஹம்ஸர் மற்றும் அவரது நேரடி சீடர்களின் எழுத்துக்கள் மற்றும் பதிவுகளை வெளியிடுவது முதல், ஆன்மீக ஆலோசனை வழங்குவது மற்றும் சத்சங்கங்கள் நடத்துவது, ஏகாந்த வாச நிகழ்வுகள் மற்றும் விரிவுரை சுற்றுப்பயணங்களை நடத்துவது கட்டிடங்கள், தியானத் தோட்டங்கள் மற்றும் ஆசிரமங்கள் பராமரிப்பது; ஒய் எஸ் எஸ் பாடங்கள் மற்றும் புத்தகங்களின் விநியோகத்தை மேற்பார்வை செய்தல்; மற்றும் பல நிர்வாக, அலுவலகம் மற்றும் ஆன்மீக மற்றும் சேவை நிறுவனங்களின் பணியை மேற்கொள்வதற்குத் தேவையான பிற கடமைகளை நிறைவேற்றுதல் வரை.

எனினும், ஒவ்வொரு யோகதா சத்சங்க சன்னியாசியின் முக்கிய கடமை, அகந்தையின் அனைத்து குறைந்த ஆசைகளையும் இறைவனிடம் சமர்ப்பித்து, தூய அன்பிலும், இறைவனுக்கான ஏக்கத்திலும் தினசரி மேம்பட வேண்டும் என்பதாகும்– இதனால், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், முக்தியடையும் வரை இறைவனே அவரது இருப்பின், அனைத்திற்குமான ஒரே உண்மையாக மாறுகிறார்.

Paramahansa Yoganandaji with Daya Mataji

பரமஹம்ஸ யோகானந்தர், சன்னியாச சபதம் எடுத்த அவரது ஆரம்பகால சீடர்களில் ஒருவரான ஸ்ரீ தயா மாதாவுடன். 1931 இல் அவர் எஸ் ஆர் எஃப் ஆசிரமத்தில் நுழைந்தவுடன், குருதேவர் அவரிடம் கூறினார்: “நீ தான் எனது கூட்டு முட்டை. நீ என்னிடம் வந்த போது, அனேக உண்மையான மற்ற பக்தர்கள் இந்தப் பாதைக்கு ஈர்க்கப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும்.”

நூற்றாண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியம்

எல்லா யுகங்களிலும், மனித ஆன்மாவின் மிக ஆழமான உந்துதல் பூரண அன்பு, புரிதல், ஆனந்தம், பூரணத்துவம் ஆகியவற்றிற்கான ஏக்கம் – மெய்ப்பொருளுக்கேயான ஏக்கம். உலகின் அனைத்து பெரிய சமயங்களிலும், அந்த இறைத் தேடலுக்கு ஒரே நோக்கத்துடன் தங்களை அர்ப்பணிப்பதற்கு குடும்ப வாழ்க்கையையும் உலக ஆசைகளையும் துறந்துவிட முடிவு செய்தவர்கள் இருந்துள்ளனர்

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, யோகதா சத்சங்க சன்னியாசிகள் நான்கு வகை துறவு சபதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்: எளிமை, பிரம்மச்சரியம் கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசம். கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு நாடுகளின் சமய நெறிகளில், இத்தகைய சபதங்கள் சன்னியாச வாழ்க்கையின் அடித்தளமாகும்.

இந்தியாவின் பண்டைய சுவாமி பரம்பரை

பரமஹம்ஸ யோகானந்தரும் அவரது குரு, சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வரும், பண்டைய சுவாமி பரம்பரையின் ஒரு பகுதியாக உள்ளனர், இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கராச்சாரியாரால் அதன் தற்போதைய வடிவத்தில் மறுசீரமைக்கப்பட்டு, மற்றும் வணங்குதற்குரிய மகான்களின் தொடர்ச்சியான வரிசை மூலம் தற்போது வரை தொடர்கிறது. சுவாமி பரம்பரைத் துறவிகள் அனைவரும் ஆதி சங்கராச்சாரியாரிடம் தங்கள் ஆன்மீகப் பரம்பரைச் சுவடைக் காண்கிறார்கள். அவர்கள் வறுமை (உடமைகள் மீது பற்றற்று இருப்பது), பிரம்மச்சரியம் மற்றும் தலைமை அல்லது ஆன்மீக அடிப்படைகளுக்குக் கீழ்ப்படிதல் போன்ற சபதங்களை எடுத்துக்கொள்கிறார்கள். சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் ஆகியோர் இணைந்த கிரி (“மலை”) கிளை உட்பட, சுவாமி பரம்பரையில் 10 உட்பிரிவுகள் உள்ளன.

தங்கள் இறுதி சன்னியாச சபதம் எடுக்கும் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் சுவாமி பரம்பரையினர் ஆவார்கள்.

1930களின் முற்பகுதியில் ஸ்ரீ தயா மாதா (1914-2010) மற்றும் உலக வாழ்க்கையைத் துறந்து தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக றைவனுக்கு அர்ப்பணிக்க விரும்பிய பிற அர்ப்பணிப்புள்ள சீடர்களின் வருகையுடன் பரமஹம்ஸ யோகானந்தர் முதல் SRF/YSS சன்னியாச சமூகத்தை நிறுவினார். 1952 இல் பரமஹம்ஸாஜியின் மறைவுக்குப் பிறகு, SRF மற்றும் YSS இல் உள்ள சன்னியாசச் சமூகங்கள் அவரைத் தொடர்ந்து அவரது சமூகத்தின் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் பதவியேற்ற சீடர்களின் தலைமையில் தொடர்ந்து வளர்ந்தன. நீண்ட பதவிக்காலம், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள YSS/SRF ஆசிரம வசதிகளில் துறந்த பயிற்சித் திட்டத்தை மேம்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. பல தசாப்தங்களாக ஸ்ரீ மிருணாளினி மாதா (1931–2017) அவர்கள் இந்த முயற்சிகளுக்கு உதவினார், அவர் SRF இன் துணைத் தலைவராகப் பணியாற்றினார் மற்றும் ஸ்ரீ தயா மாதாவிற்குப் பிறகு YSS மற்றும் SRF இன் தலைவராக 2011 இல் பதவியேற்றார். 2017 இல் ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி தலைவராக நியமிக்கப்பட்டார். YSS/SRF இன் சன்னியாசச் சமூகங்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கடவுளைத் தேடுவதற்கும் மனித குலத்துக்குச் சேவை செய்வதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சன்னிகளால் நிரப்பப்பட்ட இந்த சமூகங்கள் இன்றும் செழித்து வளர்கின்றன.

ஆசிரமத்தில் தினசரி வாழ்க்கை

ஒரு சன்னியாசி என்ற முறையில், என் வாழ்க்கை இறைவனுக்கான முழுமையான சேவைக்கும் மற்றும் அவரது அருள்மொழியினால் அனைவரது இதயங்களிலும் ஆன்மீக எழுச்சியூட்டுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது… என் மூலமாக இறைவன், என் குரு மற்றும் பரம குருமார்கள் தொடங்கியுள்ள ஆன்மீக நிறுவனப் பணிகள் சன்னியாசம், இறைவனுக்கான அன்பு ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

— பரமஹம்ஸ யோகானந்தர்

பலதரப்பட்ட பின்னணிகளின் ஐக்கியம்

சன்னியாசிகளின் உன்னத இலட்சியம், முழு மனதுடன் இறைவனை நேசிப்பதாகும்; மற்றும் சக மனிதர்களை நேசிப்பது, புலனாகாத கோட்பாட்டில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையின் அனைத்து தொடர்புகளிலும் – ஒவ்வொரு நபரிடமும் இறைவனின் பிரதிபலிப்பைக் காண்பது மற்றும் நமது தேவைகளைப் போலவே ஒவ்வொருவரின் தேவைகளையும் உணர்வது. “ஒரு காலத்தில் நாம் அந்நியர்களாக இருந்தோம், ஆனால் நாம் இறைவனை நேசிக்கும்போது நாம் சகோதர சகோதரிகளாக மாறுகிறோம்” என்று பரமஹம்ஸர் கூறினார்.

ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் பரந்த அளவிலான பின்னணியில் இருந்து வருகிறார்கள் – பல்வேறு கலாச்சாரங்கள், சமயவழி வளர்ப்பு, கல்வி வளர்ச்சி மற்றும் வாழ்க்கைப் பணி. ஆனால் எல்லா சன்னியாசிகளுக்கும் பொதுவானது இறைவனுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்ற தீவிர ஆசை.

சுய ஒழுக்கம், சுயபரிசோதனை, ஈடுபாட்டுடனான தியானம் மற்றும் அன்பான சேவை ஆகியவற்றிற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணிப்பதன் மூலம், சன்னியாசி ஆன்மாவின் ஆழ்ந்த ஆனந்தத்தையும், இறைவன் மட்டுமே அருளக்கூடிய உயர்ந்த அன்பையும் அனுபவிக்க முற்படுகிறார்.

YSS_சன்னியாசம்_தினமும்_ஆசிரமத்தில்_வாழ்க்கை

ஆசிரமத்தில் தினசரி வாழ்க்கை

YSS_சன்னியாசம்_தினமும்_ஆசிரமத்தில்_வாழ்க்கை

‘‘ஆசிரமத்தில் வாழ்க்கை எளிமையானதாகவும், நேர்மையாகவும் இருந்து வந்துள்ளது, அதே நேரத்தில், உண்மையான நீடித்த மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் என் உள்ளார்ந்த இருப்பிற்கு பாதுகாப்பு மற்றும் ஆழ்ந்த ஊட்டமளிக்கும் உணர்வு ஆகிய பலன்கள் அளிப்பதாகவும் உள்ளது.’’

— ஆசிரமத்தில் ஒன்பது ஆண்டுகளாக இருக்கும் சன்னியாசி

சன்னியாசியின் தினசரி நடைமுறை, குறிப்பிட்ட ஆசிரமம் மற்றும் அவர் பணிபுரியும் பகுதியைப் பொறுத்து மாறுபடலாம், ஆனால் அது எப்போதும் சமநிலையான ஆன்மீக வாழ்க்கைக்கு பரமஹம்ஸர் வலியுறுத்தும் அடிப்படைக் கூறுகளை உள்ளடக்கியது: தியானம் மற்றும் பிரார்த்தனை, சேவை, ஆன்மீக ஆய்வு மற்றும் சுயபரிசோதனை, உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு, ஏகாந்தம் மற்றும் மெளனத்திற்கான நேரம்.

குருதேவரின் இலட்சியப்பணிக்கு சேவை செய்தல்

YSS சன்னியாசிகள் சமூகத்தின் ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு பல நிலைகளில் சேவை செய்கின்றனர்:

  • பரமஹம்ஸர் மற்றும் அவரது நேரடி சீடர்களின் படைப்புகள் மற்றும் பதிவுகளை (அனைத்து ஊடகங்களிலும்) வெளியிடுதல்
  • ஆன்மீக ஆலோசனை வழங்குதல்
  • சத்சங்கங்கள், ஏகாந்தவாச நிகழ்ச்சிகள் மற்றும் விரிவுரை சுற்றுப்பயணங்களை நடத்துதல்
  • இந்தியத் துணைக்கண்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளுக்கு வழிகாட்டுதல்
  • YSS கட்டிடங்கள், தியானத் தோட்டங்கள் மற்றும் ஆசிரமங்களைப் பராமரித்தல்
  • YSS பாடங்கள், புத்தகங்கள், மின்புத்தகங்கள் மற்றும் பதிவுகளின் விநியோகத்தை மேற்பார்வையிடுதல்
  • ஆன்மீக மற்றும் சேவை நிறுவனங்களின் பணியைத் தொடர தேவையான பல நிர்வாக, அலுவலக மற்றும் பிற பணிகளைச் செய்தல்
A YSS sannyasi providing Spiritual counsel to devotees

இந்த மாறுபட்ட செயல்பாடுகளில் நவீன முறைகள் பயன்படுத்தப்பட்டாலும், YSS/SRF பரம்பரை குருமார்களால் பரமஹம்ஸ யோகானந்தர் இவ்வுலகிற்கு கொண்டு வர நியமிக்கப்பட்ட சிறப்பு இறை திட்டத்தின் தூய்மையையும் உணர்வையும் பாதுகாப்பதே எப்போதும் வழிகாட்டும் கொள்கையாகும். ஒவ்வொரு YSS சன்னியாசியின் உன்னத கடன், அனைவரிடமும் புரிதலுடனும் இரக்கத்துடனும் சேவை செய்வதை சாத்தியமாக்கும் இறை இணக்கத்தில் ஒவ்வொரு நாளும் மேம்பட்டுக் கொண்டே வருவதாகும்

‘‘எனது குருதேவரின் ஆசிரமங்களில், நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆன்மாக்களால் சூழப்பட்டு வாழ்வதும், சேவை செய்வதும், சுதந்திரமாக இறைவனைத் நாடுவதும் எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை மேலும் மேலும் நான் உணர்கிறேன்.’’

— ஆசிரமத்தில் ஏழு ஆண்டுகளாக இருக்கும் சன்னியாசி

சன்னியாச வாழ்க்கையின் நான்கு நிலைகள்

இங்கே நான் உமது அடிகளில் சமர்ப்பிக்கிறேன்,
எனது உயிர், எனது உறுப்புகள், எனது எண்ணங்கள் மற்றும் எனது வாக்கு
ஏனெனில் அவை உம்முடையவை; ஏனெனில் அவை உம்முடையவை.

— பரமஹம்ஸ யோகானந்தர்

ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் சன்னியாச வாழ்க்கையில் நான்கு நிலைகள் உள்ளன, இது சன்னியாச வாழ்க்கை மற்றும் சன்னியாச சபதங்களுக்கான ஒருவரின் உறுதிப்பாடு படிப்படியாக ஆழமடைவதைக் குறிக்கிறது. இந்த நிலைகளுக்கு எந்த குறிப்பிட்ட கால அளவும் இல்லை. மாறாக, ஒவ்வொரு சன்னியாசியின் ஆன்மீக வளர்ச்சியும், அந்த சன்னியாசி இந்த வாழ்க்கைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதையும் எப்போதும் ஒரு தனிப்பட்ட அடிப்படையில் கருதப்படுகிறது.

இறை அழைப்பை உணர்ந்திருக்கிறீர்களா ?

சன்னியாசப் பணி

“என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு, என்னை ஆராதித்திடுவாய். என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு உறுதி கூறுகிறேன், எனக்கினியான் நீ! தர்மங்களை (கடமைகளை) யெல்லாம் முழுமையாக தியாகம் செய்து விட்டு, என்னையே சரணடைக!”

— பரமஹம்ஸ யோகானந்தர்

இறைவன் மற்றும் குருதேவருக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கைக்கும், அவர்களின் தெய்வீகப் பணிக்கு சேவை செய்வதற்கும் உங்கள் இதயம் ஈர்க்கப்படுகிறதா?

இறுதி இலக்கை அடைய ஒன்றாக பெருமுயற்சி செய்யும் இறைவனை நாடும் ஆன்மாக்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் ஏங்கியுள்ளீர்களா?

அப்படியானால், அந்த உள் அழைப்புக்கு விடையாக துறவற வாழ்க்கையை நீங்கள் கருதலாம்.

பொதுவான தேவைகள் (ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சூழ்நிலைகள் மற்றும் தகுதிகளுக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்படுகிறது):

  • தனி
  • நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியம்
  • குடும்பம் மற்றும் பிற கடமைகள் இல்லாதவர்
  • யோகதா சத்சங்க பாடங்களின் மாணவராகவும்
  • 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராகவும்
  • ஆங்கிலத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவும் பேசவும் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும்.

YSS ஆசிரமத்தில் வாழ்வது, பரமஹம்ஸ யோகானந்தரின் பணிகளுக்கு ஆன்மீக ரீதியில் ஆதரவளிக்கும் சமூகத்தில் சேவை செய்யும் போது கடவுளுடனான உங்கள் தனிப்பட்ட உறவை ஆழமாக்குவதற்கான ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது.

எங்களைத் தொடர்பு கொள்ள

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் சுயமுன்னேற்றம், தியானம் மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பைப் பற்றி மேலும் அறிய, எங்களைத் தொடர்புகொள்ள அழைக்கிறோம்.

சன்னியாசம் : துறவறத்திற்கும் பக்திக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி, 2019 ஆம் ஆண்டு ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் உள்ள ஸ்மிருதி மந்திரில் ஸ்வாமி வரிசையில்        புதிய சன்னியாசி தீட்சை பெற்றவர்களுடன்
ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி, 2019 ஆம் ஆண்டு ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் உள்ள ஸ்மிருதி மந்திரில் ஸ்வாமி வரிசையில் புதிய சன்னியாசி தீட்சை பெற்றவர்களுடன்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 1915இல், பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவில் செராம்பூர் நகரில் அவரது குரு சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வரிடமிருந்து சன்னியாசத்திற்கான சபதங்களை ஏற்று, இந்தியாவின் புராதன ‘சுவாமி’ சன்னியாசப் பரம்பரையில் தீட்சை பெற்றார். இந்நிகழ்ச்சி இருபத்திரெண்டு வயதே ஆன முகுந்தலால் கோஷின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை குறிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் — அப்பொழுது அவர் சுவாமி யோகானந்த கிரி ஆகியிருந்தார் — 20ம் நூற்றாண்டிலும் மற்றும் அதற்கு அப்பாலும் உலக ஆன்மீக எழுச்சியில் அவர் ஏற்படுத்த இருக்கும் தாக்கத்திற்கு முன்னறிவிப்பு செய்வதாகவும் அமைந்தது; அது அவர் ஏற்படுத்திய சன்னியாசப் பரம்பரையின் காரணத்தினால் மட்டுமல்ல.

பரமஹம்ஸ யோகானந்தர் இணைந்த புராதன சுவாமி பரம்பரை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சன்னியாசிகளைக் கொண்ட யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசச் சமூகத்தில், செழித்து வளர்கிறது. இந்தச் சன்னியாசப் பரம்பரை ஒய்.எஸ்.எஸ் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தில் யோகத்தைப் பரவலாகப் பரப்புவதற்கும் உதவுகிறது.

அழைப்பு

திருமணம் ஆகாத, குடும்பக் கடமைகளற்ற மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியாவின் சன்னியாசச் சமூகத்தில் ஒரு சன்னியாசியாக இறைவனை அடையவும் மற்றும் அவனுக்கு சேவை செய்வதற்கும் தங்களை அர்ப்பணிக்க உண்மையான விருப்பம் உள்ள ஆண்கள், மேலும் விபரங்களுக்கு ஒய் எஸ் எஸ் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.