“பீஸ் அஸ் எ வே ஆஃப் லைஃப் — ஃபாலோயிங் யோகா அண்ட் எ டிவைன் எக்ஸாம்பல்” ஸ்ரீ தயா மாதா வழங்கியது

8 செப்டம்பர், 2023

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்பின் அன்புக்குரிய மூன்றாவது தலைவர் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் பின்வரும் இடுகை, பரமஹம்ஸ யோகானந்தரின் இன்னர் பீஸ்: ஹௌ டு பி காம்லி ஆக்டிவ் அண்ட் ஆக்டிவ்லி காம் என்ற நூலின் அவரது முன்னுரையிலிருந்து சில பகுதிகளைக் கொண்டுள்ளது.

சாந்தம், அமைதி, அக சமநிலை ஆகியவை நாம் சந்திக்கும் ஒருவரிடம் அவற்றின் வெளிப்பாட்டைக் காணும் வரை அல்லது அவற்றின் வெளிப்பாட்டை நம்மில் உணரும் வரை வெறும் வார்த்தைகளே.

பரமஹம்ஸ யோகானந்தருடன் நான் பழகிய இருபது வருடங்களுக்கும் மேலாக, அவரிடமிருந்து வெளிப்பட்ட விவரிக்க முடியாத அமைதி ஒளியை தினமும் அனுபவிக்கும் அருட்பேறு எனக்கு கிடைத்தது; அவரிடம் வந்த அனைவரையும் அவர்கள் ஆன்மாக்களில் ஆழமான அமைதி நீரூற்றுடன் தொடர்பு கொள்ளச் செய்யும் ஒரு அற்புதத் திறனை அது அவருக்கு அளித்தது.

நமது இந்த யுகத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆச்சரியமானவை, ஆனால் பெரும்பாலும் அவை நமது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகரிக்கும் மன அழுத்தம் மற்றும் சிக்கல்கள் இவற்றை விலையாக கொண்டே வெளிப்புற நிலைமைகளை மேம்படுத்துவதாகத் தெரிகிறது. சமநிலைக்கான தேடல் மேலும் மேலும் முன்னுரிமை பெறுவதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் மிகவும் தேவையான “புதிய” விஞ்ஞானம் என்பது ஒரு வேளை ஒரு பண்டைய ஒன்று தான் என்பதை உணர்கிறார்கள்: உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் யோகத்தின் காலத்தால் அழியாத முறைகள், அக அமைதியை அடைவதற்கு உண்மையிலேயே பயனுள்ள முறையை வழங்குகின்றன.

பரமஹம்ஸ யோகானந்தரின் ஞானக் களஞ்சியத்திலிருந்து, யோகத்தின் மிகவும் மதிப்புமிக்க “நிலைகள்” நமக்குக் கற்பிக்கப்படுகின்றன: “மோதி சிதறிக் கொண்டிருக்கும் உலகங்களின் மத்தியிலும்” அவர் அடிக்கடி சொல்வது போல், “நிலை குலையாமல் இருத்தல்”, அக பாதுகாப்பில் அசைக்கமுடியாத வகையில் நிலைத்திருப்பது, “எல்லா புரிதலையும் கடந்து செல்லும் அமைதியில்” நிலைத்திருப்பது உண்மையான ஆன்மீகம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதியாகும்.

பரமஹம்ஸ யோகானந்தர் போதித்தபடி, அமைதியான அக சாந்த நிலைக்கு, ஆற்றல்மிக்க செயல்களில் இருந்து பயந்து விலகுவது தேவையில்லை. உண்மையில், இந்தியாவின் தியான போதனைகளை வெற்றிகரமாக மேற்கில் முன்னோடியாகக் கொண்டு வர, அவரது அசாதாரண வெளிப்புற சாதனைகளுக்கு ஒரு ஆற்றல்மிக்க, ஆக்கபூர்வமான ஆளுமையே தேவைப்பட்டது.

இப்பூமியின் மிகவும் இரைச்சலான மற்றும் அமைதியற்ற நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்ஜலீஸ் போன்ற நகரங்களின் சலசலப்பில் தான் தனது வேலையை முதன்மையாக மேற்கொண்டார், தனிமையான மறைவிடங்களில் அல்ல. ஆனாலும் அவர் எப்போதும் ஆன்மாவின் இயல்பான அமைதியை மையமாக் கொண்டு இருந்தார்.

பரமஹம்ஸர் பற்றிய அவரை பின்பற்றுபவர்களின் மிகவும் விருப்பமான கதைகளில் ஒன்று, அந்த அமைதியின் சக்தியை தன்னிச்சையாக நிரூபிப்பதாகும். (அதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் செய்யப்படவில்லை.)

நியூயார்க் நகரில், துப்பாக்கி ஏந்திய மூன்று கொள்ளையர்கள் தெருவில் அவரைத் தாக்கினர். அவர் வெறுமனே அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு பணம் வேண்டுமா? அதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தனது பணப்பையை நீட்டினார்.

விளக்கமுடியாத வகையில், துப்பாக்கி ஏந்தியவர்கள் எதுவும் செய்யவில்லை. அவரது இருப்பில், அவர் வெளிப்படுத்திய ஆன்மீக அதிர்வுகளால் அவர்கள் முற்றிலும் மாற்றப்பட்டனர்.

இறுதியாக அவர்களில் ஒருவன் பதற்றத்துடன் புலம்பினான்: “மன்னிக்கவும், நாங்கள் அதை செய்ய முடியாது.” அவர்கள் திரும்பி ஓடினர்.

அவர் பொது இடங்களில் இருக்கும்போதெல்லாம், அவ்வழியாகச் செல்பவர்கள் நின்று அவரைப் பார்த்துவிட்டு, அவருடன் இருந்த எங்களிடம், “யார் அவர்? அந்த மனிதர் யார்?” என்று கேட்பார்கள்.

அவரைச் சுற்றி எப்போதும் ஒரு அமைதியான, உணரக்கூடிய அதிர்வு இருந்தது, அது மக்களை அவரிடம் ஈர்த்தது.

ஆன்மாவின் அமைதி, சிதைந்த தனிப்பட்ட மற்றும் குடும்ப நல்லிணக்கத்தையும் சிதைந்துவரும் நமது சமூகங்களின் கட்டமைப்பையும் சரி செய்கிறது.

இதை ஒரு வாழ்க்கை முறையாக எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்கைக்கு சமநிலையையும் குணப்படுத்துதலையும் கொண்டுவரும் சக்தி அதற்கு உண்டு; உங்கள் அமைதியின் அதிர்வு, உங்கள் பாதையைக் கடக்கும் அனைவரையும் தொடும் மற்றும் நம் உலகளாவிய குடும்பத்தின் நீடித்த அமைதிக்கான காரணத்திற்கு ஆழமான பங்களிப்பை வழங்கும்.

இதைப் பகிர