பிராத்தனையின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்

Diya and incense used in prayers.கடந்த காலத்தில் உங்கள் பிரார்த்தனைகள் பதில் அளிக்கப்படவில்லை என்று நீங்கள் ஏமாற்றமுற்றிருக்கலாம். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். . . . . இறைவன் ஊமையான உணர்ச்சியற்ற ஒருவனல்ல. அவன் அன்பே வடிவானவன். அவனிடம் தொடர்பு கொள்ள எவ்வாறு நீங்கள் தியானம் செய்ய வேண்டும் என்பதை அறிந்தால் அவன் உங்கள் அன்பான கோரிக்கைகளுக்கு பதிலளிப்பான்.

பிராத்தனையின் முதல் விதிமுறையானது, இறைவனை நியாயமான ஆசைகளுடன் மட்டும் தான் அணுக வேண்டும். இரண்டாவது விதிமுறையானது, அவற்றின் நிறைவேற்றத்திற்காக அவனிடம் ஒரு பிச்சைக்காரனாக அல்லாது ஒரு மகனாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்: “நான் உன் குழந்தை. நீ என் தெய்வத்தந்தை. நீயும் நானும் ஒன்றேயாவோம்.” நீங்கள் ஆழ்ந்து இடைவிடாது பிரார்த்தனை செய்தால் உங்கள் இதயத்தில் மகத்தான ஆனந்தம் ததும்புவதை நீங்கள் உணர்வீர்கள். அந்த ஆனந்தம் வெளிப்படும் வரை திருப்தியுறாதீர்கள்; ஏனெனில் அந்த அனைத்தையும் நிறைவேற்றும் ஆனந்தத்தை நீங்கள் இதயத்தில் உணரும் போது, இறைவன் உங்கள் பிரார்த்தனை ஒளிபரப்புடன் இசைந்து உள்ளான் என்பதை அறிவீர்கள். அப்போது உங்கள் தெய்வத் தந்தையிடம் பிரார்த்தனை செய்யுங்கள்: “இறைவா, இது தான் என் தேவை. நான் அதற்காகப் பாடுபடத் தயாராக உள்ளேன். வெற்றியைக் கொணர்வதற்காக சரியான எண்ணங்களை நான் பெறுவதற்கும் மற்றும் சரியான விஷயங்களை செய்வதற்கும் தயவுசெய்து எனக்கு வழிகாட்டி உதவி புரிவாய். நான் என் பகுத்தறிவைப் பயன்படுத்துவேன், மற்றும் தீர்மானத்துடன் உழைப்பேன், ஆனால் என் பகுத்தறிவு, இச்சா சக்தி மற்றும் செயல்பாடு ஆகியவற்றை நான் செய்ய வேண்டிய நல்ல காரியத்திற்கு வழிநடத்தி அருள்வாய்.”

நீங்கள் இறைவனின் ஒரு குழந்தையாக இருப்பதால், அவனது குழந்தைப் போன்று மிக நெருக்கமாக பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் அகந்தை நிலையிலிருந்து ஒரு அந்நியனாக மற்றும் ஒரு பிச்சைக்காரனாக நீங்கள் பிரார்த்தனை செய்வதை அவன் ஆட்சேபிப்பதில்லை, ஆனால் அந்த உணர்வு நிலையின் மூலம் உங்கள் முயற்சிகள் வரம்பிற்குட்பட்டவையாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அவனுடைய குழந்தை என்ற முறையில் உங்கள் தெய்வீக பிறப்புரிமை எனும் உங்கள் இச்சா சக்தியை நீங்கள் கைவிட இறைவன் விரும்புவதில்லை.

உங்கள் தேவைகளின் தன்மையைப் பொறுத்து, துல்லியமாக எவ்வாறு மற்றும் எப்பொழுது பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை அறிவதே விரும்பியபலன்களை கொணரும். சரியான வழிமுறைப் பயன்படுத்தப்படும்போது, அது இறைவனின் சரியான விதிமுறைகளை இயங்க செய்கிறது; இவ்விதிமுறைகளின் இயக்கம், விஞ்ஞான ரீதியாக பலன்களை உண்டாக்குகிறது.

பிரார்த்தனை, பெரும்பாலும் பிச்சைக்கார உணர்வு நிலையை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது. நாம் இறைவனின் குழந்தைகள், பிச்சைக்காரர்கள் அல்ல. ஆகவே நாம், இவ்விதத்தில் நமது தெய்வீக மரபுரிமை செல்வத்திற்கு உரிமை பெற்றவர்களாகிறோம். நம் ஆன்மாக்கள் மற்றும் இறைவனுக்கும் இடையே நாம் ஓர் அன்பின் இணைப்பை ஏற்படுத்தும் பொழுது, நமது நியாயமான ஆசைகளின் நிறைவேற்றத்தை அன்புடன் கோருவதற்கு நமக்கு உரிமை உள்ளது.

எந்த ஒரு விஷயத்திற்குமான ஓர் இடைவிடாத கோரிக்கை, மானசீகமாக சளைக்காத உற்சாகம் மற்றும் சஞ்சலமற்ற வீரம் மற்றும் விசுவாசத்துடன் மென்குரலில் கூறப்படும் போது, அது ஆற்றல் மிகுந்த சக்தியாக உருவாகி, மனிதனின் விழிப்பு நிலை, ஆழ்மன மற்றும் உயர் உணர்வு நிலைச் சக்திகளின் முழு நடத்தையை விருப்பப்பட்ட குறிக்கோள் எய்தப்படும் அளவிற்குத் தாக்கமுறச் செய்கிறது. மானசீக மென்குரல் பிரார்த்தனைகளின் அகச் செயல்பாடு இடைவிடாமலும், பின்னடைவுகளால் தளர்வுறாமலும் இருக்க வேண்டும். அப்பொழுது விருப்பப்பட்ட குறிக்கோள் மெய்ம்மையாகும்.

கூடுதல் வாசிப்பிற்கு:

இதைப் பகிர