பரமஹம்ஸ யோகானந்தர்

Paramahansa Yoganandaபரமஹம்ஸ யோகானந்தர் (1893 — 1952) நவீன காலத்தின் ஒப்புயர்வற்ற ஆன்மீகவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அதிக விற்பனையாகும் ஆன்மீக இலக்கியமான ஒரு யோகியின் சுயசரிதம் எழுதியருளிய இந்த அன்புக்குரிய உலக ஆசான் லட்சக்கணக்கான வாசகர்களை கிழக்கின் வற்றாத ஞானத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் இப்போது மேலைநாடுகளில் யோகத்தின் தந்தையாகப் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார். அவர் 1917-ல் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வையும் , 1920-ல் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-பையும் நிறுவினார். இவை, ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவுக்குப் பிறகு ஐந்தாவது தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி தலைமையில் உலகளவில் தனது தெய்வீகப் பரம்பரைப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டு வருகின்றன.

பரமஹம்ஸ யோகானந்தர் கீழ்க்காண்பவற்றின் மீதான தனது விரிவான போதனைகளால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்:

  • கிரியா யோக தியான விஞ்ஞானம்,
  • அனைத்து உண்மையான சமயங்களின் அடித்தளமான ஒற்றுமை,
  • உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமநிலையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக் கலை.

அவரது போதனைகள் மற்றும் அவர் போதித்த தியான உத்திகள் இன்று கீழ்க்காண்பவற்றின் மூலம் கிடைக்கின்றன:

  • யோகதா சத்சங்கப் பாடங்கள், யோகானந்தர் அவர்களாலேயே உருவாக்கப்பட்ட ஒரு விரிவான, வீட்டிலிருந்தபடியே கற்பதற்கான தொடர்;
  • அவரது போதனைகளை உலகளவில் பரப்ப அவர் நிறுவிய ஸ்தாபனமான ஒய் எஸ் எஸ்-ன் புத்தகங்கள், பதிவுகள் மற்றும் பிற வெளியீடுகள்;
  • ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள தியான மையங்களில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்திய சன்னியாசிகளால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள்.

பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook
X
WhatsApp
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.
This site is registered on Toolset.com as a development site.