சன்னியாசிகளின் சுற்றுப் பயணங்கள் மற்றும் கிரியா தீட்சை நிகழ்வுகள்

மிகுந்த மகிழ்ச்சியுடன், 2024 ஆம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள சங்கங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் YSS சன்னியாசிகளின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். முழுமையான அட்டவணையை இங்கே காண்க.

Satsanga on Yogananda's teachings.பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம அனுபூதி போதனைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு வருகை தருகின்றனர். பரமஹம்ஸரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள், ஒய் எஸ் எஸ் யோக உத்திகளை மறுஆய்வு செய்தல், கூட்டுத் தியானங்கள், கீதம் இசைத்தல், ஆடியோ-விஷுவல் விளக்கக்காட்சிகள் மற்றும் கிரியா யோக தீட்சை நிகழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உத்வேகமூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் வார இறுதி ஏகாந்தவாச தியான நிகழ்வுகளை அவர்கள் நடத்துகிறார்கள்.

Swami Smaranananda giving a talk.சொற்பொழிவு சுற்றுப்பயணங்கள், புதியவர்களுக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு ஒரு அறிமுகத்தையும், பாட மாணவர்களுக்கு ஒய் எஸ் எஸ் தியான உத்திகளில் ஆழமான வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பிராந்திய ஏகாந்தவாச தியான நிகழ்வுகள் ஒய் எஸ் எஸ் தியான உத்திகள் குறித்த வகுப்புகள் மற்றும் கூட்டுத் தியானம் மற்றும் சத்சங்கத்திற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் பல முக்கிய அம்சங்கள் இந்த நிகழ்ச்சிகளில் உள்ளடங்கியுள்ளன, அவையாவன:

  • அன்றாட வாழ்வில் தியானத்தின் முக்கியத்துவம்
  • மேலும் இணக்கமானதொரு வாழ்க்கையை வாழ்வது எப்படி
  • வெளிப்புறத் தேவைகளுடன் உள் தேவைகளை சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ளுதல்

அமைதியின் உள் கோவிலைக் கட்டுவதற்கு நம்மை ஊக்குவித்து, நமது அன்புக்குரிய குருதேவர் கூறினார்: “உங்கள் மனதின் நுழைவாயில்களுக்குப் பின்னால் உள்ள அமைதியின் கண்டுபிடிப்புக்கு என்ன மகிழ்ச்சி காத்திருக்கிறது என்று, எந்த மனித நாவினாலும் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் தியானம் செய்து அந்த சூழலை உருவாக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்பவர்கள் அற்புதமான உள் அமைதியை உணர்கிறார்கள்.” இந்த நிகழ்ச்சிகள், உண்மையான சாதகர்களுக்கு அன்றாட வாழ்க்கையின் இடைவிடாத செயல்பாட்டிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கி, அக அமைதியின் மீது கவனம் செலுத்தி, அதன் மூலம் இறைவனின் அமைதி மற்றும் பேரின்பத்தின் அமிர்தத்தை பருக ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகின்றன.

ஜனவரி – டிசம்பர் 2024 வரையிலான சன்னியாசிகள் சுற்றுப்பயண விவரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

சன்னியாசிகளின் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஏகாந்தவாசங்கள் – ஜனவரி – டிசம்பர் 2024

மாநிலம்

தேதி

இடம்

நிகழ்ச்சி வகை

ஆந்திர பிரதேசம்

பிப்ரவரி 8

பித்தாபுரம்

ஒரு நாள் நிகழ்ச்சி

பிப்ரவரி 11

குண்டூர்

ஒரு நாள் நிகழ்ச்சி

டிசம்பர் 13-15

காகிநாடா

கிரியா யோக தீட்சை உட்பட

அஸ்ஸாம்

ஏப்ரல் 6-7

குவஹாத்தி

இரண்டு நாள் நிகழ்ச்சி

பீகார்

பிப்ரவரி 10-11

தரவுண்டா

இரண்டு நாள் நிகழ்ச்சி

குஜராத்

பிப்ரவரி 18

விஜபூர்

ஒரு நாள் நிகழ்ச்சி

பிப்ரவரி 21

போர்பந்தர்

ஒரு நாள் நிகழ்ச்சி

பிப்ரவரி 25

பாவ்நகர்

ஒரு நாள் நிகழ்ச்சி

செப்டம்பர் 20-22

வதோதரா

கிரியா யோக தீட்சை உட்பட

ஹிமாச்சல் பிரதேஷ்

ஜூலை 26-28

சோலன்

கிரியா யோக தீட்சை உட்பட

ஆகஸ்ட் 31-செப்டம்பர் 1

பாலம்பூர்

இரண்டு நாள் நிகழ்ச்சி

ஜம்மு

நவம்பர் 22-24

ஜம்மு

கிரியா யோக தீட்சை உட்பட

கர்நாடகா

மார்ச் 3

அர்சிகேரே

ஒரு நாள் நிகழ்ச்சி

மார்ச் 7

பைல்ஹோங்கல்

ஒரு நாள் நிகழ்ச்சி

ஆகஸ்ட் 10-11

தார்வாத்

கிரியா யோக தீட்சை உட்பட

கேரளா

பிப்ரவரி 25

கொச்சின்

ஒரு நாள் நிகழ்ச்சி

பிப்ரவரி 28

கண்ணூர்

ஒரு நாள் நிகழ்ச்சி

மத்தியபிரதேஷ்

நவம்பர் 29-டிசம்பர் 1

ஜபல்பூர்

கிரியா யோக தீட்சை உட்பட

டிசம்பர் 4

இந்தூர்

ஒரு நாள் நிகழ்ச்சி

மஹாராஷ்ட்ரா

மார்ச் 10

நாசிக்

ஒரு நாள் நிகழ்ச்சி

மார்ச் 1-3

மும்பை

கிரியா யோக தீட்சை உட்பட

டிசம்பர் 1

சந்திராபூர்

ஒரு நாள் நிகழ்ச்சி

ஒடிஷா

பிப்ரவரி 23-25

புபனேஷ்வர்

கிரியா யோக தீட்சை உட்பட

டிசம்பர் 6-8

பூரி

ஏகாந்த வாஸ நிகழ்ச்சிகள் (ஒடியா)

டிசம்பர் 13-15

பூரி

ஏகாந்த வாஸ நிகழ்ச்சிகள் (ஆங்கிலம்)

பஞ்சாப்

செப்டம்பர் 5

அம்ரித்சர்

ஒரு நாள் நிகழ்ச்சி

ராஜஸ்தான்

பிப்ரவரி 3-4

அஜ்மீர்

இரண்டு நாள் நிகழ்ச்சி

பிப்ரவரி 7

சுரானா

ஒரு நாள் நிகழ்ச்சி

பிப்ரவரி 10-11

உதய்பூர்

இரண்டு நாள் நிகழ்ச்சி

செப்டம்பர் 27-29

ஜெய்பூர்

கிரியா யோக தீட்சை உட்பட

தமிழ்நாடு

ஜூலை 26-28

சேலம்

கிரியா யோக தீட்சை உட்பட

ஆகஸ்ட் 2-4

திருச்சிராப்பள்ளி

கிரியா யோக தீட்சை உட்பட

ஆகஸ்ட் 7

திருத்துறைப்பூண்டி

ஒரு நாள் நிகழ்ச்சி

தெலங்கானா

பிப்ரவரி 4

வாரங்கல்

ஒரு நாள் நிகழ்ச்சி

டிசம்பர் 20-22

ஹைதராபாத்

கிரியா யோக தீட்சை உட்பட

உத்தர் பிரதேஷ்

ஜனவரி 5-7

பரேலி

கிரியா யோக தீட்சை நிகழ்வுடன்

கூடிய மந்திர் திறப்பு விழா

மார்ச் 3

கோரக்பூர்

ஒரு நாள் நிகழ்ச்சி

மார்ச் 7

வாரனாசி

ஒரு நாள் நிகழ்ச்சி

செப்டம்பர் 6-8

ஆக்ரா

கிரியா யோக தீட்சை உட்பட

உத்தராகண்ட்

மார்ச் 10

ஹரித்வார்

ஒரு நாள் நிகழ்ச்சி

மேற்கு வங்கம்

ஜனவரி 1-5

தக்‌ஷினேஷ்வர்

கிரியா யோக தீட்சை நிகழ்வுடன் கூடிய

ஜன்மோத்சவ் நிகழ்ச்சி

மார்ச் 31

சிலிகுரி

ஒரு நாள் நிகழ்ச்சி

நவம்பர் 22-24

திஹிகா

ஏகாந்த வாஸ நிகழ்ச்சிகள் (வங்காளம்)

எதிர்வரும் நிகழ்வுகள்

இதைப் பகிர