உள்ளுணர்வு

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துப் படைப்புகளிலிருந்து சில பகுதிகள்

உள்ளுணர்வு என்பது மனிதருடைய மனம் அமைதியாக இருக்கும் தருணங்களின் போது அவனில் இயல்பாகவே தோன்றும் ஆன்ம வழிகாட்டல் ஆகும்… யோக அறிவியலின் இலக்கு அகக்குரலின் தவறிழைக்காத ஆலோசனையை மனம் குலைவின்றிக் கேட்கும் படியாக, மனத்தை அமைதிப்படுத்துவது ஆகும்.

“உங்களுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் தியானத்தின் மூலமாகத் தீர்வுகாணுங்கள்,” [லாஹிரி மகாசயர் கூறினார்]. “செயல்திறமிக்க அக வழி காட்டலுக்கு உங்களை இசைவித்துக் கொள்ளுங்கள்; தெய்வீகக் குரலிடம் வாழ்வின் எல்லாத் தடுமாற்றங்களுக்கும் பதில் இருக்கிறது. இன்னலில் தன்னைச் சிக்கவைத்துக் கொள்வதற்கான மனிதனின் திறமை முடிவற்றதாகத் தோன்றினாலும், முடிவற்ற பேருதவி எந்த விதத்திலும் குறைவான வளவசதியைக் கொண்டதல்ல.”

Buddha meditating.தன்னை மட்டுமே நாம் சார்ந்திருக்க விரும்புவதில், இறைவன் உங்களைப் பற்றி நீங்கள் எண்ணக் கூடாது என்று பொருள்கொள்ளவில்லை; நமது செயல்முனைப்பை நாம் பயன்படுத்துவதை அவன் விரும்புகிறான். நீங்கள் முதலில் இறைவனுடனான உணர்வுப்பூர்வமான இசைவித்தலை நாடத் தவறினால், நீங்கள் பேராதாரத்தைத் துண்டிக்கிறீர்கள், மற்றும் அதனால் அவனுடைய உதவியை உங்களால் பெற முடியாது என்பதே அதன் பொருள். முதலில் எல்லாவற்றிற்கும் அவனை நம்பும் போது, அவன் உங்களுக்கு வழிகாட்டுவான். உங்களுடைய தவறுகள் என்னவென்று அவன் வெளிப்படுத்துவான், அதனால் உங்களை உங்களால் மாற்றிக்கொள்ளவும் உங்கள் வாழ்க்கையின் பாதையை மாற்றவும் உங்களால் முடியும்.

நினைவில் கொள்ளுங்கள், மனத்தின் பல லட்ச தர்க்கங்களைவிடப் பெரியது நீங்கள் அமர்ந்து அகத்தே அமைதியை உணரும் வரை தியானம் செய்வதாகும். அதன்பின் இறைவனிடம் கூறுங்கள், “நான் எண்ணிலடங்கா முறை வெவ்வேறு எண்ணங்களை எண்ணினாலும் கூட, தனியாக என்னால் என் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது; ஆனால் அதை உன் கைகளில் வைப்பதன் மூலம், உன்னுடைய வழிகாட்டலை முதலில் வேண்டியவாறு, பின் அதைப் பின்தொடர்ந்து ஒரு சாத்தியமாகும் தீர்விற்காக பல்வேறு கோணங்களில் சிந்திப்பதன் மூலம், என்னால் அதற்குத் தீர்வுகாண முடியும்.” தமக்குத்தாமே உதவிசெய்து கொள்வோருக்கு இறைவன் நிச்சயம் உதவி செய்கிறான். தியானத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்த பிறகு உங்கள் மனம் அமைதியாகவும் நம்பிக்கையால் நிரப்பப்பட்டும் இருக்கும் போது, உங்கள் பிரச்சனைகளுக்குப் பல்வேறு தீர்வுகளை உங்களால் காண முடிகிறது; மற்றும் உங்கள் மனம் அமைதியாக இருப்பதால், நீங்கள்மிகச்சிறந்த தீர்வைத் தேர்வுசெய்யும் திறமை கொண்டவராக இருக்கிறீர்கள். அந்தத் தீர்வைப் பின்தொடர்ந்து செல்லுங்கள், மற்றும் நீங்கள் வெற்றியைச் சந்திப்பீர்கள். இது உங்களுடைய அன்றாட வாழ்வில் சமய விஞ்ஞானத்தை நடைமுறைப் படுத்துவதாகும்.

உள்ளுணர்வுப்பூர்வ அமைதியைப் பேணிவளர்க்க அக வாழ்வின் மலர்ச்சி தேவை. போதுமான அளவு வளர்ச்சியடைந்துவிட்ட போது, உள்ளுணர்வு உண்மையின் முழுமையான புரிதலை உடனடியாகக் கொண்டுவருகிறது. இந்த அற்புதமான அனுபூதியை உங்களால் பெறமுடியும். தியானமே வழி.

“மாபெரும் தெய்வீக இச்சாசக்தியுடன் சுருதிசேர்வது எப்படி என்று நாம் அறியும் வரை, மனித வாழ்வு துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது; அந்தச் சக்தியின் “சரியான பாதை” தன்முனைப்பான அறிவாற்றலை அடிக்கடி திணற வைக்கிறது,” [ஸ்ரீ யுக்தேஸ்வர் கூறினார்]. “இறைவன் மட்டுமே தவறாத ஆலோசனையை வழங்குகிறான்; அவனல்லாது வேறு யார் பேரண்டங்களின் சுமையைத் தாங்குவது?”

ஒவ்வொரு காலையிலும் இரவிலும் மௌனத்தினுள் அல்லது ஆழ்ந்த தியானத்தினுள் செல்லுங்கள், ஏனெனில் தியானமே உண்மைக்கும் பிழைக்கும் இடையே பாகுபாடு காண்பதற்கான ஒரே வழியாகும்.

உங்களுடைய உணர்வுநிலையால், உங்கள் அகத்தேயுள்ள தெய்வீகப் பகுத்தறியும் சக்தியால், வழிகாட்டப்படக் கற்றுக்கொள்ளுங்கள்.

இறைவனே உங்கள் உணர்வுநிலை எனும் ஆலயத்தில் மென்குரல், மற்றும் அவனே உள்ளுணர்வின் ஒளி. நீங்கள் எப்போது தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்; உங்களுடைய முழு இருப்பும் சொல்கிறது, மற்றும் அந்த உணர்வு இறைவனின் குரலாகும். நீங்கள் அவன் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், அவன் அமைதியாகிறான். ஆனால் நீங்கள் உங்களுடைய மாயையிலிருந்து விழித்தெழுந்து சரியானதைச் செய்ய விரும்பும் போது, அவன் உங்களுக்கு வழிகாட்டுவான்.

இறைவனின் குரலான விழிப்புணர்வின் அகக் குரலை இடைவிடாது பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உண்மையில் ஒரு தார்மீக நபராக, ஓர் உயர்ந்த ஆன்மீக இருப்பாக, அமைதியின் ஒரு மனிதராக ஆவீர்கள்.

நாம் தெய்வத்தந்தையை அறியும் போது, நம்மிடம் நமது சொந்தப் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, உலகைப் பீடித்திருக்கும் பிரச்சனைகளுக்கும் பதில்கள் இருக்கும். நாம் ஏன் வாழ்கிறோம், மற்றும் நாம் ஏன் சாகிறோம்? ஏன் இந்தத் தற்கால நிகழ்வுகள், மற்றும் ஏன் அந்தக் கடந்தகால நிகழ்வுகள்? எல்லா மனித உயிர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறும் எந்த மகானும் பூமியில் எப்போதாவது வருவாரா என்று நான் ஐயப்படுகிறேன். ஆனால் தியானமெனும் ஆலயத்தில் நமது இதயங்களைத் துன்புறுத்தும் வாழ்வின் ஒவ்வொரு விடுகதைக்கும் விடை காணப்படும். நாம் இறைவனுடன் தொடர்பு கொள்ளும்போது, நாம் வாழ்வின் புதிர்களுக்குப் பதில்களைக் கற்போம், மற்றும் நமது எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வைக் காண்போம்.

பிரார்த்தனகளும் சங்கல்பங்களும்

தெய்வத்தந்தையே, உன் பேரண்ட வாழ்வும் நானும் ஒன்றே. நீயே பெருங்கடல், நானே அலை; நாம் ஒன்றே. நான், எல்லா ஞானமும் சக்தியும் ஏற்கனவே என் ஆன்மாவில் இருக்கின்றன என்று உள்ளுணர்வுப்பூர்வமாக உணர்ந்தறிந்தவாறு, என் தெய்வீகப் பிறப்புரிமையைக் கோருகிறேன். இறைவன் என் பகுத்தறிவிற்குச் சற்றே பின்னால், இன்றும் ஒவ்வொரு நாளும், இருக்கிறான், மற்றும் அவன் எப்போதும் என்னைச் சரியான விஷயத்தைச் செய்ய எனக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறான்.

தெய்வத்தந்தையே, அன்னையே, அன்பிற்குரிய இறைவா, நான் பகுத்தறிவேன், நான் விருப்புறுதி கொள்வேன், நான் செயலாற்றுவேன்; ஆனால் என் பகுத்தறிவை, விருப்புறுதியை, மற்றும் செயற்பாட்டை நான் செய்ய வேண்டிய சரியான விஷயங்களுக்கு நீ வழிநடத்துவாய்.

மேலும் ஆய்வுசெய்வீர்

இதைப் பகிர