யோகதா சத்சங்க கிளை மடம், ராஞ்சி

Ranchi Ashram Main Building

யோகதா சத்சங்க கிளை மடம்,பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி 834001
தொலைபேசி எண்:+91 (651) 6655 555

வலைத்தள இணைப்பு: https://ranchi.yssashram.org/

கடந்த 100 வருடங்களாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியா (YSS), மேலைநாடுகளில் யோகத்தின் தந்தை என்று பரவலாக போற்றப்படும் அதன் நிறுவனர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதநேய பணிகளை தொடர்ந்து செயலாற்ற அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

1917ல் இங்கே ராஞ்சியில் தான் பரமஹம்ஸ யோகானந்தர் தனது வாழ்க்கையின் பணியை ஒரு ஆசிரமம் மற்றும் சிறுவர்களுக்கான ஒரு “எப்படி –வாழ-வேண்டும்” வகை பள்ளி ஆகியவற்றை நிறுவியதன் மற்றும் கிரியா யோகத்தின் உலகளாவிய போதனைகளை யாவருக்கும் கிடைக்குமாறு செய்வதன் மூலமாக துவங்கினார்.
இயற்கை அழகும் அமைதியான சூழ்நிலையும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் புத்துணர்ச்சி தரும் எங்கள் ஆசிரமங்கள் மற்றும் ஏகாந்தவாச மையங்களுக்கு வருகை தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் ஆசிரமங்களில் நடைபெறும் சொற்பொழிவு சேவைகள் மற்றும் தியானங்களில் கலந்து கொள்ளவும் நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். சொஸைடியின் சன்னியாசிகளை, ஆன்மீக அறிவுரை வழங்குதல் மற்றும் யோகதா சத்சங்க போதனைகளின் கற்றல் மற்றும் பயிற்சியில் வழிகாட்டுதல் முதலியவற்றிற்கு எளிதில் அணுகலாம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் அறை

உயர்ந்த குரு தொடக்க வருடங்களில் தங்கியிருந்த இடம் ஒரு புனித இடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறை பகல் முழுவதும் தனிப்பட்ட தியானத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அறையின் உள்ளே கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள SRF சர்வதேச தலைமையகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட குருதேவரின் கை-கால் பதிவுகள் உள்ளன. குருதேவரது சில சொந்த உடமைகள், அவரது சமாதியிலிருந்து பெறப்பட்ட ரோஜா மாலை உட்பட, அவரது அறைக்கு வெளியே காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன.

ராஜரிஷி ஜனகாநந்தருக்கு எழுதிய கடிதத்தில் குருதேவர், “கண்ணிற்குப் புலனாகாத எனது ஆன்மீக ஞானம் எனும் அமிர்தத்தை அதிக அளவில் மவுண்ட் வாஷிங்டனிலும் (கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சர்வதேச தலைமையகம்) ராஞ்சியிலும் தெளித்துள்ளேன். . . .”

பரமஹம்ஸ யோகானந்தர்.

லீச்சி மரம்

ராஞ்சி ஆசிரமத்தில் நமது தெய்வீக குருதேவருடன் தொடர்புடைய புனித இடங்களில் ஒன்று லீச்சி மரம் (வேதி). இந்தப் பெரிய மரத்தின் நிழல் விதானத்தின் அடியில்தான் நமது உயர்குரு அவர் நிறுவிய பள்ளியில் சேர்ந்த சிறுவர்களுக்கு அடிக்கடி திறந்தவெளி வகுப்புகளையும் சத்சங்கங்களையும் நடத்தினார். இந்த இடம் பரமஹம்ஸ யோகானந்தருடன் மிக நெருங்கிய தொடர்புடையது என்பதால், அநேக வருடங்களாக புனிதமாக நிறுவப்பட்ட பரமஹம்ஸரது பெரிய திருவுருவப் படத்தை தன் மரக்கிளைகளின் அடியில் கொண்டுள்ள இந்த லிச்சி மரமானது YSS/SRF உறுப்பினர்களின் முக்கியமான யாத்திரை மற்றும் தியான இடமாக திகழ்ந்து வருகிறது.

சமீபத்தில் விஞ்ஞானிகள் இந்தப் பிரியமான ஆன்மீக மரத்தைப் பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க பெளதீக உண்மையைக் கண்டு பிடித்துள்ளனர்: இம்மரம், தோட்டக்கலை நிபுணர்களால் இதற்கு முன் ஒருபோதும் ஆவணப்படுத்தப்படாத ஓர் அபூர்வமான வகை என அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதிகாரப்பூர்வமாக பரமஹம்ஸ யோகானந்தரது பெயர் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பெயர் இப்பொழுது ‘லிச்சி கல்டிவார் யோகானந்தர் செலக்ஷன்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

Yogoda Ranchi Litchi Vedi Meditating
Smriti Mandir Ranchi

ஸ்மிருதி மந்திர்

தனது சுயசரிதத்தில் குருதேவர் எழுதுகிறார், “அமெரிக்கா! நிச்சயமாக இந்த மக்கள் அமெரிக்கர்கள்தான்! என் உள் மனத் தோற்றத்தில் மேலை நாட்டு முகங்களின் ஒரு பரந்த காட்சி தென்பட்டபோது இந்த எண்ணம்தான் எனக்குத் தோன்றியது. ராஞ்சி பாடசாலையின் சரக்கு அறையில் தூசி படிந்த சில பெட்டிகளின் பின்னால் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தேன். . . . அக்காட்சி தொடர்ந்தது. பெருந்திரளான மக்கள் என்னை கூர்ந்து நோக்கியவாறு, நடிகர் எதிர் கொள்வதைப் போன்று மனமெனும் மேடையில் தோன்றிச் சென்றவாறு இருந்தனர்.

இன்று, அதே புனித இடத்தில்தான் ஓர் உயர்ந்த முழுவதும் சலவைக் கல்லிலால் ஆன, அனைத்துப் பக்கங்களிலும் அலங்கார நுணுக்கமான வேலைப்பாடு உடைய பலகணிகளுடன் ஸ்மிருதி மந்திர் கம்பீரமாக நிற்கிறது. இம்மந்திர், ஒரு பெரிய தாமரை வடிவ கூரை விதானமும் கொண்டு, ஓர் உலகளாவிய பணி தன் முதல் அடியை இங்கு எடுத்து வைத்ததற்கு ஓர் நினைவுச் சின்னமாகவும் திகழ்கிறது.

ஏகாந்தவாச ஆன்மீகப் பயிற்சிகள்

ஆன்மீகப் புத்துணர்ச்சி பெற இங்கு வர விரும்பும் YSS உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வருடம் முழுவதும் (சரத்சங்க காலம் தவிர) ஏகாந்தவாச ஆன்மீக சாதனை புரிய அனுமதி உள்ளது. சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் பரமஹம்ஸ யோகானந்தரது போதனைகள் மீதான சிறப்பு ஏகாந்தவாச ஆன்மீகப் பயிற்சிகள் வருடம் முழுவதும் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. இந்த ஆன்மீகப் பயிற்சிகள் YSS போதனைகளை அறிந்திருப்பவர்களுக்காக திட்டமிடப்பட்டிருந்தாலும், ஆர்வம் உள்ள எவரும் வரவேற்பறையில் விசாரித்து அறிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Ranchi Ashram Meditation garden

தியானத் தோட்டங்கள்

ஆசிரம வளாகம், வெவ்வேறு வகை செடிகள் மற்றும் மரங்களுடன் கூடிய பல அழகுமிக்க நன்கு வடிவமைக்கப்பட்ட தோட்டங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தோட்டங்கள் அங்கு சென்று உடல் மனம் மற்றும் ஆன்மாவில் தளர்வு ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. தியானம் புரியவோ அல்லது இந்த ஆன்மீக இடத்தின் அமைதியையும் சாந்தத்தையும் வெறுமனே கிரகித்துக் கொள்ளவோ விரும்புபவர்களுக்காக அநேக தியான நீள்-பலகைகள் இங்கு போடப்பட்டுள்ளன.

Schedule of Events

Please click the links below to know about the events that are scheduled to be conducted at the Yogoda Satsanga Math, Ranchi:

இதைப் பகிர