ஸ்ரீ தயாமாதா எழுதிய “உள்ளிருந்து வழிகாட்டுதலுடன் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது”

10 மார்ச், 2023

பின்வருவது 1955 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டில் தாம் மரணிக்கும் வரை சங்கமாதாவாகவும் YSS/SRF தலைவராகவும் பணியாற்றிய ஸ்ரீ தயாமாதாவின் உள்ளுணர்வு: வாழ்க்கை முடிவுகளுக்கான ஆன்மா-வழிகாட்டுதல் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி ஆகும்.

பரமஹம்ஸ யோகானந்தர் அடிக்கடி இதை மேற்கோள் காட்டுகிறார்: “தனக்குத் தானே உதவிக்கொள்பவருக்கு இறைவன் உதவுகிறார்.”

ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை ஏதோ ஒரு தெய்வீக சக்தி நமக்குச் சொல்வதைத் தவிர வேறு எதையும் நாம் விரும்ப மாட்டோம். அது மிகவும் எளிதானது; இறைவனுடைய நேரடி வழிகாட்டுதலை நாம் பெறுகிறோம் என்பதை எந்த நேரத்திலும் நாம் அறிந்திருந்தால், நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை.

ஆனால் அது அவ்வளவு எளிமையானது அல்ல, காரணம் என்னவெனில்: நாம் இறைவனின் ஒரு பகுதி, ஆனால் அது நமக்குத் தெரியாது – நாம் ஒருபோதும் அறியாமல், நாம் செய்வது எல்லாம் அவர் மீது சுமையை சுமத்தி, “என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்று சொல்வதற்கு நாம் ஊமை பொம்மைகளோ மற்றும் அவர் பொம்மலாட்டக்காரரோ இல்லை, அவருடைய வழிகாட்டுதலைக் கேட்கும்போது, அவர் நமக்குக் கொடுத்த மனதை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

இறுதிப் பிரார்த்தனை

“இறைவா, உமது சித்தம் நிறைவேறட்டும்” என்று ஜீசஸ் இறுதியாகப் பிரார்த்தனை செய்தார். இப்போது, பலர் இதை அர்த்தப்படுத்துவது என்னவென்றால், அவர்கள் எந்த விருப்பத்தையும் அல்லது சிந்தனையையும் செய்யக்கூடாது, ஆனால் உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டும், அவற்றின் மூலம் இறைவன் ஏதாவது செய்வார் என்று காத்திருக்க வேண்டும். இது தவறு. நாம் அவரது சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.

வேறு எந்த உயிரினத்திற்கும் கொடுக்காத அறிவாற்றலை அவர் மனிதனுக்குக் கொடுத்துள்ளார். நாம் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதனால் தான் பரமஹம்ஸர் பிரார்த்திக்கக் கற்றுக்கொடுத்தார்:

“இறைவா, நான் பகுத்தாராய்வேன், நான் தீர்மானிப்பேன், நான் செயலாற்றுவேன்; ஆனால் நான் ஆற்ற வேண்டிய சரியான செயலுக்கான என் பகுத்தறிவு, தீர்மானம் மற்றும் செயல் ஆகியவற்றை நீ வழி நடத்துவாயாக.”

இதை ஆசிரமத்தில் புனிதமாகக் கடைப்பிடிக்கிறோம். வேலையைப் பற்றிய எங்கள் கூட்டங்களில், சில நிமிடங்கள் தியானம் செய்கிறோம், பின்னர் அந்த பிரார்த்தனையைச் செலுத்துகிறோம். அப்போது தான் நாம் விவாதத்தில் ஈடுபட்டு முடிவுகளை எடுப்போம்.

எனவே சும்மா அமர்ந்து கொண்டு, தேவையான செயல்களை இறைவன் தொடங்குவார் என்று எதிர்பார்க்க வேண்டாம். பகுத்தறிவு, விருப்பம், செயல் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றி, சிறந்த போக்கைப் பின்பற்றுங்கள்.

உமது சித்தத்தையும் புத்திக் கூர்மையையும் பயன்படுத்தி மனசாட்சியோடு வேலைசெய்து, அதே நேரத்தில்: “இறைவா, என்னை வழி நடத்து; உமது சித்தத்தைப் பின்பற்றுகிறேன். உனது விருப்பம் மட்டுமே நிறைவேறும்” என தொடர்ந்து பிரார்த்தியுங்கள்.

இதைச் செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் மனதை அவரது வழிகாட்டுதலுக்கு ஏற்ப வைத்திருக்கிறீர்கள். நீங்கள் திடீரென்று தெளிவாகக் காண்பீர்கள். “இல்லை, நான் இப்போது இந்த திசையில் செல்ல வேண்டும்” என்று இறைவன் உங்களுக்கு வழிகாட்டுகிறார்.

ஆனால்,உங்களை வழி நடத்தும்படி இறைவனிடம் கேட்கும்போது, உங்கள் மனம் ஒருபோதும் மூடப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அது எப்போதும் திறந்த மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். இப்படித்தான் தனக்குத்தானே உதவி செய்து கொள்பவருக்கு இறைவன் உதவுகிறார். அதுவேலை செய்கிறது, ஆனால் முன்முயற்சியும் திறனும் நம்மிடமிருந்து வரவேண்டும்.

இறைவனுக்கு சேவை செய்வதற்கும் அவரது சித்தத்தைப் பின்பற்றுவதற்கும் நீங்கள் ஒரு ஆசிரமத்தில் வசிக்க வேண்டியதில்லை. இறைவனும் நமது கடந்த காலசெயல்களும், நம்மை நிலைநிறுத்திய இந்த தருணத்தில் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம். உங்கள் தற்போதைய நிலையில் நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், தியானம் செய்து இறைவனின் வழிகாட்டுதலைக் கேளுங்கள். ஆனால் அவ்வாறு செய்யும்போது, உங்களுக்கு இறைவன் கொடுத்த காரணத்தைப் பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் எதிர்காலம் தொடர்பாக உங்களிடம் உள்ள விருப்பங்களை பகுப்பாய்வு செய்யுங்கள்.

மனசாட்சியும் உள்ளுணர்வும்: உள்ளுக்குள் ஒலிக்கும் தெய்வீகக்குரல்

நமக்குள் இருக்கும்ப்தெய்வீகக் குரல் நம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க உதவும். மனசாட்சியின் குரல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் வழங்கிய தெய்வீக வழிகாட்டுதலின் கருவியாகும்.

ஆனால், பலரிடம் இது கேட்கப் படுவதில்லை, ஏனென்றால் ஒன்று அல்லது எண்ணற்ற வாழ்க்கைகளில் அவர்கள் அதைக் கவனிக்க மறுக்கிறார்கள். இதன்விளைவாக, அந்தக்குரல் அமைதியாகிறது, அல்லது மிகவும் மங்குகிறது. ஆனால் ஒரு நபர் தனது வாழ்க்கையில் சரியான நடத்தையை செயல்படுத்தத் தொடங்கும் போது, உள் ஒலிக்கும் மென்மையான சப்தங்கள் மீண்டும் வலுவடைகின்றன.

அரை-உள்ளுணர்வு மனசாட்சிக்கு அப்பால் உள்ளது தூய உள்ளுணர்வு, ஆன்மாவின் நேரடி உண்மை உணர்வு – பிழையற்ற தெய்வீககுரல்.

நம் அனைவருக்குமே உள்ளுணர்வு இருக்கிறது. நமக்கு ஐந்து பௌதிக புலன்களும், ஆறாவது புலனும் உள்ளன – அனைத்தையும் அறியும் உள்ளுணர்வு. நாம்தொடுகிறோம், கேட்கிறோம், நுகர்கிறோம், சுவைக்கிறோம், பார்க்கிறோம் என்ற ஐந்து பௌதிக புலன்கள் மூலம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்கிறோம். பெரும்பாலான மக்களில், ஆறாம் அறிவு, உள்ளுணர்வு உணர்வு, பயன்பாடு இல்லாததால் வளர்ச்சியடையாமல் உள்ளது.

சிறுவயது முதலே கண்களை மூடி, பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கண்மூடி அகற்றப்படும்போது, அனைத்தும் தட்டையாகத்தோன்றும். அல்லது கை அசையாது, பயன்பாடு இல்லாததால் அது சரியாக வளர்ச்சியடையாது. அதுபோலவே, பயனின்மையால், உள்ளுணர்வு பலரிடமும் செயல்படுவதில்லை.

தியானம் உள்ளுணர்வின் சக்தியை வளர்க்கிறது

ஆனால் உள்ளுணர்வை வளர்க்க ஒருவழி உள்ளது. உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் வரை ஆறாம் அறிவு இயங்கமுடியாது. எனவே உள்ளுணர்வை வளர்ப்பதற்கான முதல்படி தியானம், உள் அமைதியின் நிலைக்குள் நுழைவது.

நீங்கள் எவ்வளவு ஆழமாக தியானம் செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் மனதை ஏதேனும் ஒரு பிரச்சினையில் வைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உள்ளுணர்வு சக்தி அந்த சிக்கலைத் தீர்ப்பதில் தன்னை வெளிப்படுத்தும். அந்த சக்தி படிப்படியாக வளர்கிறது, ஒரே நேரத்தில் அல்ல; ஒருதசை அல்லது மூட்டு உடற்பயிற்சியால் படிப்படியாக பலப்படுத்தப்படுவதைப் போலவே – இது ஒரே இரவில் நடக்காது….

தியானத்தின் தினசரி பயிற்சியைத் தொடங்குவது அல்லது வலுப்படுத்துவது பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால் – “உள்ளுணர்வின் ஆறாவது உணர்வு” உங்கள் நனவில் அதிகமாக வெளிப்படக்கூடிய அமைதியையும் சாந்தத்தையும் உருவாக்க, அதை உங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் பயன்படுத்தலாம் – வழிகாட்டப்பட்ட மற்றும் குழு தியானம் இரண்டையும் அனுபவிக்க கீழே உள்ள இணைப்புகளைப் பின்பற்றவும்.

இதைப் பகிர