லாரன்ஸ் மார்ட்டின் எழுதிய “ஸீ யுவர்செல்ஃப் அஸ் ஹேவிங் மேட் த சேஞ் யூ ஆர் ஸீகிங்!”

June 9, 2023

யோகதா சத்சங்க ஏப்ரல்-ஜூன் 2004 இதழில் வெளிவந்த “எய்ட் ஸெல்ஃப்-சேஞ்ச் ஸ்ட்ரேடஜீஸ் தட் வொர்க்,” என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு. SRF இன் நீண்டகால கிரியாபன் பக்தரான லாரன்ஸ் மார்ட்டின், தெற்கு கலிபோர்னியாவில் வசிக்கிறார்.

உங்களுக்குள் நடக்கும் சுய உரையாடலை இடைநிறுத்தி கவனிக்க வேண்டிய நேரம் இது. நீங்களே பேசிக்கொள்ளும்போது என்ன சொல்கிறீர்கள்? உங்களை பாராட்டி கொள்கிறீர்களா? ஊக்குவித்துக் கொள்கிறீர்களா?

எதிர்மறையான சுய உரையாடல் சந்தேகம், நிச்சயமற்ற தன்மை, கவலை, மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. நேர்மறையான சுய உரையாடல், நீண்ட கால பயங்கள் மற்றும் தடைகளை கடக்கவும், அதிக நம்பிக்கையுடன் இருக்கவும், சுய கட்டுப்பாட்டுடன் பார்க்கவும், செயல்படவும், உணரவும் உதவும் வலுவான புதிய செய்திகளை வழங்குகிறது.

சுய-உரையாடல் விதங்களில் கவனம் செலுத்துதல்

உளவியலாளர் ஷாட் ஹெல்ம்ஸ்டெட்டர், பி.எச்.டி., வாட் டு ஸே வென் யூ டாக் டு யுவர்ஸெல்ஃப் என்ற புத்தகத்தில், நம் ஆழ்மனதினை செயல் திட்டத்திற்கு உட்படுத்தும் சுய உரையாடலின் பல்வேறு நிலைகளை விவரிக்கிறார். உங்கள் மனதிற்கு உள்ளீடு செய்யப்படும் “நான்” எண்ணங்களின் வகையில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் பரிந்துரைக்கிறார்:

— “என்னால் முடியாது.” ஹெல்ம்ஸ்டெட்டர் இதை மோசமான வகை என்று அழைக்கிறார், துரதிர்ஷ்டவசமாக, நாம் மனதிற்கு உள்ளீடு செய்யும் பொதுவான “திட்டங்களில்” ஒன்றாகும். இந்த சொற்றொடரை நீங்கள் பயன்படுத்துவதில் செலுத்தும் கவனமானது, முன்னேற்றத்திற்கான நேர்மறை இலக்குகளைக் கொண்டு, எதிர்மறையான, சுய வரம்புகள் கொண்ட நம்பிக்கைகளை வேரறுத்து, அவற்றை மாற்ற உதவுகிறது.

— “நான் செய்ய வேண்டும்.” இது சிறந்தது, ஆனால் அடிப்படையில் எதிர்மறையானது என்று ஹெல்ம்ஸ்டெட்டர் கூறுகிறார், ஏனென்றால் சிக்கல் இருப்பதை அறிந்துள்ளீர்கள், ஆனால் தீர்வில் கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்கள்.

— “நான் ஒருபோதும் இல்லை.” அல்லது “நான் இனி இல்லை.” இந்த நிலையில், சுய உரையாடல் உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு பதிலாக உங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்குகிறது என்கிறார் ஹெல்ம்ஸ்டெட்டர். நீங்கள் மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளீர்கள், அதைப் பற்றி ஏதாவது செய்ய முடிவு செய்துள்ளீர்கள். மிக முக்கியமாக, மாற்றம் ஏற்கனவே நடந்து விட்டதைப் போல நீங்களே அதை வெளிப்படுத்துகிறீர்கள், இது ஆழ்மனதை மறுதிட்டமிடலுக்கு உட்படுத்த உதவுகிறது.

— “நான் செய்வேன்.” உங்களைப் பற்றிய ஒரு புதிய பிம்பத்தை, சுய மாற்றத்திற்கான உங்கள் இலட்சியங்கள் மற்றும் இலக்குகளின் பலனை இங்கே ஆழ்மனதில் உறுதிப்படுத்துகிறீர்கள். இந்த வகையான சுய உரையாடல் “என்னால் முடியாது” என்பதற்கு நேர்மாறானது; இது உங்களை எதிர்மறையான உளவியல் சிக்கல்களில் சிக்க வைப்பதை விட உங்களுக்கு உதவ உங்கள் ஆழ்மனதின் சக்தியை திரட்டுகிறது.

இப்போதே தொடங்குங்கள், இப்போதே முயற்சி செய்யுங்கள் - உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

உங்கள் சுய- உரையாடல் ஐ கவனித்து உடனடியாக செயலாற்றத் தொடங்குங்கள். நீங்கள் எண்ணும் அடுத்த எதிர்மறை கருத்தை கவனியுங்கள்; அதை நேர்மறையானதாக மாற்ற முயற்சியுங்கள். உங்கள் ஓய்வு நேரத்தில் மனக் காட்சி காணுதல் மற்றும் சங்கல்பங்களைப் பயிற்சி செய்யுங்கள் – நீங்கள் விரும்பும் மாற்றத்தை செய்துள்ளதாக விவரியுங்கள். இறுதியில் நடுவே தோன்றும் எதிர்மறை உரையாடலை நிறுத்த உங்களால் முடியும்.

ஆன்மீக உன்னதமான ஒரு யோகியின் சரிதம், இன் ஆசிரியர் பரமஹம்ஸ யோகானந்தரால், நிறுவப்பட்ட யோகதா சத்சங்கம், உயர் உணர்வுநிலையை நாடுபவர்களுக்கு, இந்தியாவின் பண்டைய விஞ்ஞானமான ஆன்மாவை பரம்பொருளுடன் ஒருங்கிணைத்து நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும், யோகத்தின், காலத்தால் அழியாத உலகளாவிய உண்மைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. யோகதா சத்சங்கா தற்போது பரமஹம்ஸர், முன்னாள் மற்றும் தற்போதைய YSS/SRF தலைவர்கள் மற்றும் பிற அபிமான SRF மற்றும் YSS எழுத்தாளர்களின் கடந்தகால கட்டுரைகளின் விரிவான ஆன்லைன் நூலகத்தை வழங்கும் சந்தா செலுத்தும் விருப்பத்தேர்வுடன் கூடிய ஒரு வருடாந்திர அச்சு இதழாகும்.

இதைப் பகிர