புத்தாண்டில் வெற்றிக்கான ரகசியம் குறித்து பரமஹம்ஸ யோகானந்தர்

10 ஜனவரி, 2023

PY-2403_6-03-cropped_sepia

புத்தாண்டு புதிய நம்பிக்கைகளுடன் வருகிறது. ஆனால் சில நேரங்களில் சந்தேகம் எழுகிறது: ஒரு புதிய ஆண்டின் வருகையுடன் நம் வாழ்வில் நீடித்த மாற்றங்களைச் செய்வது உண்மையில் சாத்தியமா?

பழக்கவழக்கங்களின், நிலையான பழக்கவழக்கங்கள் கூட நெகிழக்கூடிய தன்மையை — நீங்கள் புரிந்து கொண்டால், மற்றும் உங்கள் உணர்வுநிலையை மாற்ற, உங்கள் வாழ்க்கையின் மற்ற அனைத்து அம்சங்களையும் மாற்றுவதற்கான முன்னோடியான உங்கள் இச்சா சக்தியை பயன்படுத்தும்போது, அது சாத்தியம் என்று பரமஹம்ஸ யோகானந்தர் கூறினார்;

யோகதா சத்சங்க சொஸைடி / செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தற்போதைய தலைவர் சுவாமி சிதானந்த கிரி, பரமஹம்ஸர், நம்மை உள்நோக்கி ஆராய்வதன் மூலமும் தியானம் செய்வதன் மூலமும் இறைவனின் பரந்த ஆதரவு உணர்வுநிலையுடன் நமது உணர்வுநிலையை இணைத்து புதிய ஆண்டிற்கான நமது போக்கை அமைக்க ஊக்குவித்தார் என்று கூறினார். மேலும் சிந்தனா சக்தி மற்றும் இச்சா சக்தி ஆகிய தெய்வீக கொடைகள் நம் வாழ்க்கையைக் வழி நடத்த ஊக்குவித்தார்.

YSS/SRF இன் மூன்றாவது தலைவரான ஸ்ரீ தயா மாதா நமக்கு இவ்வாறு உறுதியளித்தார்: “உடனடியான மனநிறைவை ஒதுக்கி வைக்கும் திறன் மிகவும் நீடித்த மதிப்புள்ள இலக்கை அடைவதற்கு அவசியம். அவ்வாறு செய்வது ஆன்மாவின் அனைத்தையும் நிறைவேற்றும் உறுதியை அதிக அளவில் வெளிப்படுத்துகிறது.”

பின்னர் அவர் இந்த முக்கிய மூலப்பொருளைச் சேர்த்தார்: “பொறுமையான விடாமுயற்சியால் வெற்றி சாத்தியம் மட்டுமல்ல, தவிர்க்க முடியாதது என்ற நம்பிக்கையுடன், ஒவ்வொரு நாளும் சிறிய நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.”

பரமஹம்ஸர் கூறியது போல், உங்கள் வாழ்க்கையின் தீப்பொறிக்கு பின்னால் முடிவற்ற சுடர் உள்ளது….. உங்கள் வாழ்க்கைக்குப் பின்னால் உள்ள அந்த மகத்தான சக்தியை நீங்கள் உணரவிடாமல் தடுக்க எதுவும் இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

எனவே, உங்கள் ஆன்மா அதிக நிறைவைத் தரும் எண்ணத்தில் கிளர்ந்தெழுகிறதா — புத்தாண்டின் நுழைவாயில்களில் எவ்வாறு வெற்றிகரமாக அடியெடுத்து வைப்பது என்பதை அறிய விரும்புகிறீர்களா?

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:

புதிய வருடம் என்னும் தோட்டத்தில் நீங்கள் செடிகளை நடுவதற்கு பொறுப்பாளியானவர் என கற்பனை செய்யுங்கள். இந்த மண்ணில் நல்ல பழக்கவழக்கங்கள் எனும் விதையினை விதையுங்கள். கவலைகளையும் கடந்த கால தவறான செயல்கள் எனும் களையினையும் களைந்தெரியுங்கள்.

இந்த புத்தாண்டில், உங்கள் உணர்வுந்லையை மாற்றிக் கொள்ளுங்கள். சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் சரியான நடத்தை மற்றும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். “நான் தீய பழக்கங்களில் ஈடுபடுவதில்லை, ஏனெனில் அவை என் நலனுக்கு எதிரானவை; நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் நல்லதைத் தேர்வு செய்கிறேன், என்று நீங்கள் சொல்ல முடியும்போது,” அதுதான் சுதந்திரம்; அதைத்தான் நான் உங்களுக்காக விரும்புகிறேன்.

பழக்கங்கள் என்பது மூளையில் ஆழமாக பதிக்கப்பட்ட எண்ணங்கள் மட்டுமே. மனத்தின் ஊசிமுள் அந்த பழக்கங்களின் பதிவுகளை மீண்டும் மீண்டும் இயக்குகிறது…. மனதையும் விருப்பத்தையும் பயன்படுத்துவதன் மூலம் அந்த வடிவங்களை மாற்ற முடியும்.

திடீரென வியத்தகு மாற்றங்களை முயற்சிக்காதீர்கள். உங்கள் உள்ளார்ந்த கட்டளை ஆற்றலைப் பயிற்றுவிக்க, முதலில் சிறிய விஷயங்களில் பரிசோதனை செய்யுங்கள்.

நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ, அந்த மாதிரியை இப்போதே உருவாக்கத் தொடங்குங்கள். உங்கள் மனதில் ஒரு வலுவான எண்ணத்தைப் புகுத்தினால், நீங்கள் இப்போது உங்கள் உணர்வுநிலையில் எந்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்; அப்போது உங்கள் செயல்களும் முழு இருப்பும் அந்த எண்ணத்திற்கு கீழ்ப்படியும். ஒரு வழி மனநிலையுடன் திருப்தி அடையாதீர்கள் நீங்கள் எந்தத் தொழிலிலும் வெற்றிபெற முடியும் அல்லது நீங்கள் மனதில் எண்ணும் எதையும் செய்ய முடியும். என்னால் ஒரு காரியத்தை செய்ய முடியாது என்று பிறர் சொல்லும் போதெல்லாம், என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் முடிவு செய்தேன், அதைச் செய்தேன்!

கடந்த ஆண்டின் அழகான நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள். இருண்ட அனுபவங்களை மறந்து விடுங்கள். புத்தாண்டின் புதிய மண்ணில், கடந்த காலத்தில் நீங்கள் செய்த நல்லதை விதையுங்கள், அந்த உயிர்ப்புள்ள விதைகள் இன்னும் சிறந்த முறையில் வளரட்டும்.

இதைப் பகிர