அகத்துள்ளிருந்து வெளிப்புறத்திற்கு தன்மதிப்பை வளர்த்துக் கொள்வது குறித்து பரமஹம்ஸ யோகானந்தர்

ஓர் அறிமுகம்:

நமது அன்றாட செயல்பாடுகளின் போது, நாம் அனைவரும் நமது தன்னம்பிக்கை மற்றும் சுயமதிப்பின் உச்சங்களையும் தாழ்வுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

நமது சுயத்தின் சிறந்ததை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கான வழிகளை முயற்சிப்பதைப் போலவே , நம் வாழ்வில் நாம் மேம்படுத்த விரும்பும் விஷயங்கள் உள்ளன. ஆனால், உடல் ரீதியாக, மன ரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக, பூரணம் என்றால் என்ன அல்லது எப்படி இருக்க வேண்டும் அல்லது பாராட்டு அல்லது அர்த்தத்தைக் கண்டறிய நாம் எங்கு எதிர் நோக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் வெளி உலகத்திலிருந்து தவறான பதிவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

வாழ்க்கையின் சவால்களை அல்லது நமது சொந்த ஆன்மீக இலக்குகளை நாம் எதிர்கொள்ளும்போது, “தகுதி பெற்றிருக்கவில்லை” என்ற தவறான உணர்வைப் பெறக் கூடும்.

ஆனால் பரமஹம்ஸ யோகானந்தர் நமக்கு நினைவூட்டுவார்: “உங்களை மேம்படுத்த முயற்சிக்கும்போது, தனித்து நிற்கக் கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் சொந்த நற்பண்புகள் மற்றும் சுயமதிப்பில் பாதுகாப்பாக இருங்கள்.”

இதைச் செய்வதற்கான திறன், உண்மையில் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் வருகிறது – அகத்துள், நமது உயர் ஆன்மாவிலிருந்து என்று பெரியோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்குச் சொல்லியுள்ளனர். அதாவது, நம்மிடமே உள்ள, உண்மையான நம் இயல்பான தெய்வத்தன்மையிலிருந்து உதவியையும், வழிகாட்டலையும், அன்பையும் தேடுங்கள் என்பதே அது.

“நீங்கள், சாசுவத பெருஞ்ஜோதியின் ஒரு சிறு பொறி ஆவீர். பொறியை உங்களால் மறைக்க முடியும், ஆனால் உங்களால் அதை ஒரு போதும் அழிக்க முடியாது” என்று பரமஹம்ஸர் நமக்குத் தெரியப்படுத்துகிறார்.

அதைக் கேட்பதே உங்களை உயர்த்தவில்லையா? உண்மையான தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மேலும் அதிக ஊக்கமளிக்கும் ஞானத்தை உள்வாங்க விரும்புகிறீர்களா?

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:

ஒவ்வொரு சிறிய மின் பல்பின் ஒளிக்குப் பின்னாலும் ஒரு மாபெரும் இயக்கும் சக்தி வாய்ந்த மின்னோட்டம் உள்ளது; ஒவ்வொரு சிறிய அலையின் கீழேயும் பல அலைகளாக மாறியுள்ள பரந்தகன்ற மகா சமுத்திரம் உள்ளது. மனிதர்களுடனும் இவ்வாறே தான்.

பெரிய அலைகளால் அடித்து செல்லப்படும் சிறிய அலையின் சக்தியை எந்த விதத்திலும் குறைத்து எடை போடாதீர்கள். எவராவது ஒருவர் அதனிடம் சொல்ல வேண்டியுள்ளது, “சிறிய அலையே, என்னவாயிற்று உனக்கு? பெருங்கடல் முழுதும் உன் பின்னால் உள்ளதை நீ பார்க்கவில்லையா? நீ அந்த பெருங்கடலின் ஒரு படைப்பே” உங்களைச் சிறிய தேகத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள், அகத்தே நோக்குங்கள்.

நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது, நீங்கள் எப்பொழுதும் மிகவும் ஏங்கிய எதையும் விட அல்லது எவரையும் விட மிக உயர்ந்ததாகும். இறைவன் உங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ள முறையில் வேறு எந்த மனிதனிலும் வெளிப்படுத்தவில்லை. உங்கள் முகம் மற்ற எவருடையதையும் போன்று இல்லை. உங்கள் ஆன்மா மற்ற எவருடையதையும் போன்று இல்லை. நீங்கள் உங்களுக்கே நிறைவுற்றவராக இருக்கிறீர்கள், ஏனெனில் எல்லாவற்றையும் விட மகத்தான பொக்கிஷமான இறைவன் உங்கள் ஆன்மாவினுள் உறைகிறான்.

உங்கள் அகத்துள் இறைவனை உணர்வதன் மூலம், உங்களின் மானுட பலவீனங்கள் மீதான வெற்றி மற்றும், உங்கள் சாதனைகளின் வளர்ச்சி ஆகியவற்றை அடித்தளமாக கொண்ட ஒரு தெய்வீக, பணிவுடன் கூடிய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எல்லா சாதனைகளும் இறைவனிடமிருந்து பெறப்பட்ட சக்தியிலிருந்து வருகின்றன என்ற உணர்வோடு இருங்கள். இதன் மூலம் தாழ்வு மற்றும் உயர் மனப்பான்மைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

[கடைபிடிக்க ஒரு உறுதிமொழி]: “நேற்றைய கல்லறைகளில் நான் ஏமாற்றங்களை புதைத்து விட்டேன். இன்று நான் எனது புதிய படைப்பு முயற்சிகளால் வாழ்வின் தோட்டத்தை உழுவேன். அதில் ஞானம், ஆரோக்கியம், வளமை, மகிழ்ச்சி விதைகளை விதைப்பேன். தன்னம்பிக்கையுடனும் திடநம்பிக்கையுடனும் நான் நீர்ப்பாய்ச்சுவேன், மேலும் இறைவன் எனக்கு சரியான விளைச்சலைக் கொடுக்கும் வரை காத்திருப்பேன்.”

YSS வலைப்பதிவில் தொடரவும். அதில், வரவிருக்கும் 2023 யோகதா சத்சங்க இதழில் வெளியிடப்படவுள்ள, YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி எழுதிய “மெயின்டைனிங் அவர் டிவைன் கனெக்க்ஷன் வைல் லிவிங் இன் த மெடீரியல் வர்ல்டு” என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதியான “ஹௌ யோகீஸ் கான்டேக்ட் த ஸோர்ஸ் ஆஃப் செல்ஃப்-எஸ்டீம்” ஐ படிக்கலாம்

இதைப் பகிர