இன்னல் காலங்களில் துணிவு குறித்து பரமஹம்ஸ யோகானந்தர்

8 ஏப்ரல் , 2020

ஏப்ரல் செய்திமடலில் இருந்து உத்வேகமளிக்கும் செய்தி

சவாலான காலங்களில் துணிவின் சக்திவாய்ந்த எண்ணங்களால் நம்மை நிரப்புவது எப்படி மற்றும் தெய்வீக பாதுகாப்பை பற்றிய ஆழந்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய மேற்கோள்களை இந்த மாதம் வழங்குகிறோம்.

[YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அண்மையில் “எ மெடிடேஷன் லெட் பை ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி: ஏ மெஸேஜ் ஆஃப் ஸ்பிரிச்சுவல் அஷ்யூரன்ஸ்”- என்ற வீடியோவில் பின்வரும் உண்மை அறிக்கைகளில் பலவற்றைப் பயன்படுத்தினார். இந்த நேரத்தில் இவை சமநிலை மற்றும் வலிமையைத் தேடும் அனைவருக்கும் பரமஹம்ஸ யோகானந்தரின் நடைமுறை மற்றும் ஊக்கமளிக்கும் ஞானத்தால் தங்களை வலுப்படுத்திக் கொள்ள உதவுகிறது.]

இறைவன் நம்மை சோதிக்கவும், நம்முள் புதைந்து கிடக்கும் ஆன்ம அழிவின்மையை வெளிக்கொணரவும் மட்டுமே எல்லாவற்றையும் சிருஷ்டித்துள்ளான். அதுதான் வாழ்க்கையின் சாகசம், வாழ்க்கையின் ஒரே நோக்கம். ஒவ்வொருவருடைய சாகசமும் வெவ்வேறானது, தனித்தன்மை உடையது. ஆரோக்கிய, மன மற்றும் ஆன்ம பிரச்சனைகளை பொது அறிவு வழிமுறைகள் மூலமும், இறை நம்பிக்கையுடனும், வாழ்விலோ அல்லது மரணத்திலோ உங்கள் ஆன்மா வெல்லப்படாதது என்பதை அறிந்த வண்ணம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

வாழ்க்கை உங்களை தோற்கடித்து வீழ்த்த ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். வாழ்க்கையை தோற்கடியுங்கள்! உங்களிடம் வலிமையான இச்சாசத்தி இருந்தால், உங்களால் எல்லா கஷ்டங்களையும் வெற்றி கொள்ள முடியும். சோதனைகளின் மத்தியிலும், "அபாயமும் நானும் ஒன்றாகப் பிறந்துள்ளோம். நான் அபாயத்தை விட அதிக அபாயமானவன்” என உறுதிப்படுத்திக் கூறுங்கள். இது எப்பொழுதும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு உண்மை ஆகும்; அதைக் கையாளுங்கள். அது பலனளிப்பதை நீங்கள் காண்பீர்கள். கெஞ்சுகின்ற ஒரு மனிதப் பிறவியாக நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் இறைவனின் ஒரு குழந்தை!

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் தியானத்தின் மூலம் இறைவனைத் தேடுவதில் மும்முரமாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்... இந்த வாழ்க்கையின் நிழல்களுக்கு சற்று கீழே இறைவனின் அற்புதப் பேரொளி உள்ளது. இந்தப் பிரபஞ்சம் அவனுடைய சான்னித்தியத்தின் பரந்தகன்ற ஆலயமாகும். நீங்கள் தியானம் செய்யும் பொழுது எல்லா இடங்களிலும் அவனுக்கான வாயில்கள் திறப்பதைக் காண்பீர்கள். நீங்கள் அவனுடன் தொடர்பு கொள்ளும் பொழுது அந்தப் பேரானந்தத்தையும் பேரமைதியையும் உலகின் ஒட்டுமொத்த நாசங்களாலும் கூட குலைக்க முடியாது.

அச்சம் இதயத்தில் இருந்தே தோன்றுகிறது. ஏதாவது நோயைப் பற்றியோ அல்லது விபத்தைப் பற்றியோ உள்ள அச்சத்தினால் நீங்கள் எப்பொழுதேனும் ஆட்கொள்ளப்பட்டால், நீங்கள் மூச்சை மெதுவாகவும் ஆழமாகவும் ஒரே சீராக பல தடவை உள்ளிழுத்தும் வெளிவிட்டும், ஒவ்வொரு வெளிமூச்சுடனும் உடலைத் தளர விட வேண்டும். இது ரத்த ஓட்டம் சாதாரண நிலையை அடைவதற்கு உதவுகின்றது. உங்களுடைய இதயம் உண்மையாக அமைதியுடன் இருந்தால் அச்சத்தை நீங்கள் உணரவே முடியாது.

உறுதி மொழி: “நான் உனது அன்பான கவனிப்பு எனும் கோட்டையினுள் என்றும் பத்திரமாக இருக்கிறேன்.”

மேலே குறிப்பிட்டுள்ள சுவாமி சிதானந்த கிரியின் வீடியோவைத் தவிர, YSS பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டின் உள் மூலத்துடன் இணைக்க உதவும் பல ஆன்லைன் ஆன்மீக வளங்களை, குறிப்பாக தற்போதைய கடினமான உலக சூழ்நிலையில் வழங்குகிறது. நேரடி ஆன்லைன் கூட்டு தியானங்கள், YSS மற்றும் SRF சன்னியாசிகளால் நடத்தப்படும் வாராந்திர உத்வேக சேவை ஒளிபரப்புகள் மற்றும் பல இதில் அடங்கும். இவற்றையும் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் இந்த மற்றும் தற்போதைய செய்திகளையும் எளிதாக அணுக, எங்கள் சமீபத்திய வலைப்பதிவு இடுகையில் வழங்கப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தவும் “ரிஸோர்ஸஸ் ஆன் அவர் சைட் டு ஹெல்ப் யூ கோப் வித் த கரன்ட் சிச்சுவேஷன்”:

இதைப் பகிர