இன்றைய நாளில் அமைதியை உணர்வதற்கான ஒரு டூல் கிட்

8 செப்டம்பர், 2023

அமைதியை விலைக்கு வாங்க முடியாது; அன்றாடம் பயிற்சிக்கும் உங்கள் தியானத்தின் அசைவற்ற நிலையில், அதை எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

இந்த பக்கத்தில், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் ஞானக் களஞ்சியத்திலிருந்து தொகுக்கப்பட்ட, உத்திகள் மற்றும் வழி நடத்தப்பட்ட தியானங்களை நீங்கள் காணலாம். கீழே குறிப்பிட்டுள்ளவைகளை பின்பற்றினால் உங்கள் அகத்துள் அமைதியை இப்போதே “உருவாக்க” தொடங்க உதவுகிறது.

  • உடலைத் தளர்த்துதல் (தசைகளில் இருந்து இறுக்கத்தை நீக்குதல்)
  • மன இறுக்கத்தின் தளர்த்தலுக்காக மௌன பாதுகாப்பு தருணத்தை உருவாக்குதல்
  • அமைதியில் உங்களை நிலைநிறுத்துதல்
  • அகஅமைதி பற்றிய வழிநடத்தப்பட்ட நீண்டநேர தியானங்களில் மூழ்குதல்
  • உங்கள் அமைதியை தக்க வைத்துக் கொள்ள ஸ்ரீ மிருணாளினி மாதாவின் ஞானத்தை உள்வாங்குதல்

இந்த பக்கத்தின் உள்ளடக்கத்திலிருந்து நீங்கள் விரும்பும் எந்த வரிசையிலும் தேர்ந்தெடுக்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் அல்லது அமைதியை அறிந்து பகிர்வதற்கான பரமஹம்ஸர் வழங்கிய பிற அறிவுரைகளை தினமும் பயிற்சிப்பதே, சிறந்த செயல்பாடாக இருக்கும். ஏனெனில், நீங்கள் உணரும் அனைத்தும் தவறாமலும் திரும்பத் திரும்பவும் பயிற்சி செய்வதன் மூலம் ஆழமடையும்.

அமைதியை ஏற்படுத்திக் கொள்ள உடலை தளார்த்தி அகத்துள் ஆழ்ந்து செல்லவும்.

பரமஹம்ஸ யோகானந்தர், “தளர்த்தப்பட்டும் நிச்சலனமாகவும் இருக்கும் உடல், மன அமைதியை ஈர்க்கிறது, இது இறைவனுடன் தொடர்பு கொள்ளும் ஆன்மீக கலையான தியானத்திற்கு அவசியமானது.” என்று அறிவுறுத்துகிறார்.
இன்னர் பீஸ்: ஹௌ டு பி காம்லி ஆக்டிவ் அண்ட் ஆக்டிவ்லி காம் என்ற அவருடைய நூலில், உடலைத் தளர்த்துவதற்கான பின்வரும் உத்திகளை அவர் பகிர்ந்துள்ளார் (அவை யோகதா சத்சங்க பாடங்களில் அவர் முழுமையாக கற்பிக்கும் உடலுக்கு புத்துயிர் ஊட்டல் மற்றும் சரியான தளர்த்தலை ஊக்குவிக்கும் விஞ்ஞானத்தின் அடிப்படையிலான எளிமையான வழிமுறைகள்):

  • இச்சா சக்தியுடன் இறுக்குங்கள்: இச்சா சக்தியின் கட்டளையின் மூலம், (இறுக்கும் செயல்முறையின் வாயிலாக) உயிர் சக்தியை உடலிலோ அல்லது ஏதாவது உடற்பகுதியிலோ பெருகியோடும்படிச் செலுத்துங்கள். சக்தியூட்டியவாரும் புத்துயிரூட்டியவாரும் சக்தி அங்கே அதிர்வதை உணருங்கள்.
  • தளர்த்தி உணருங்கள்: இறுக்கத்தை தளர்த்துங்கள் மற்றும் சத்தியூட்டப்பட்ட பகுதியில் புத்துயிர் மற்றும் உயிராற்றலின் இதமான சிலிர்ப்பை உணருங்கள். நீங்கள் உடல் அல்ல; நீங்கள் உடலை தாங்கும் அந்த உயிர் என உணருங்கள். அமைதி, சுதந்திரம், மற்றும் இந்த உத்தியின் பயிற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட சாந்தத்துடன் வரும் அதிகரிக்கப்பட்ட விழிப்புணர்வு ஆகியவற்றை உணருங்கள்.
  • நீங்கள் பலவீனமாகவும் பதற்றமாகவும் உணரும் எந்த நேரத்திலும் 3 முறை செய்யவும்:
    (a) சுவாசத்தை உள்ளிழுத்து, அதை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
    (b) முழு உடலையும், அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் மெதுவாக இறுக்குங்கள்.
    (c) முழு உடலிலும் ஆழ்ந்த கவனத்துடன், 1 முதல் 20 வரை எண்ணிக்கையில் இறுக்கத்தை வைத்திருங்கள்.
    (d) சுவாசத்தை வெளியேற்றி இறுக்கத்தை தளர்த்துங்கள்.

உங்கள் பரபரப்பான நாளில் ஆன்மீக ரீதியில் அமைதியாக இருக்க ஒரு கணம் ஒதுக்குங்கள் — மன இறுக்கத்தைத் தளர்த்துதல்

இந்த வீடியோ க்ளிப்பில், பரமஹம்ஸ யோகானந்தரின் YSS பாடங்களி லிருந்து, மன இறுக்கத்தைத் தளர்த்துதலையும், நமது மும்முரமான அன்றாட செயல்பாடுகளுக்கு மத்தியில் ஒரு நிமிடம் மௌனத்தையும், பாதுகாப்பான இடைஓய்வையும் உருவாக்குவதற்கான ஒரு குறுகிய பயிற்சியை SRF சன்னியாசினி பிராமணி மாய் பகிர்ந்து கொள்கிறார், இதனால் நாம் ஒரு நிமிடம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு கூட இறைவனுடனான அமைதியான தொடர்பை உணர முடியும், இது நமது மனநிலை மற்றும் நல்வாழ்வில் ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆங்கர் யுவர்ஸெல்ஃப் இன் காம்னஸ் — வழிநடத்தப்பட்ட தியானம் (சுமார் 15 நிமிடங்கள்)

ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாசினி கருணா மாய், தியானத்தின் அமைதியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுதல் குறித்த வழிநடத்தப்படும் தியானத்தை நடத்துகிறார். இந்த தியானம் இன்னர் பீஸ்:ஹௌ டு பி காம்லி ஆக்டிவ் அண்டு ஆக்டிவ்லி காம் என்ற நூலிலிருந்து பரமஹம்ஸ யோகானந்தரின் உறுதிமொழி மற்றும் மனக் காட்சி காணல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நீங்கள் அமைதி மற்றும் அமைதியின் உச்ச ஆழத்தை அடைந்துவிட்டீர்கள் என்று நினைக்கும் போது, இன்னும் ஆழமாகச் செல்லுங்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

டைவ் டீப் இன்டு இன்னர் பீஸ் — வழிநடத்தப்பட்ட தியானம் (சுமா 30 நிமிடங்கள்)

ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாசி ஸ்வாமி சேவானந்த கிரி, அகஅமைதி பற்றிய ஒரு வழிநடத்தப்பட்ட தியானத்தை நடத்துகிறார், பரமஹம்ஸ யோகானந்தர் வழங்கிய தியானம் மற்றும் உறுதிமொழியில் காணப்படும் அமைதியின் ஆழத்தை உணர உங்களை அழைக்கிறார், பரமஹம்ஸர் கூறியது போல், “உங்கள் ஆன்ம உள்ளுணர்வின் மூலம், இறைவன் உங்கள் அமைதியின்மையின் மேகங்களை தகர்த்து பெரும் அமைதி மற்றும் ஆனந்த வடிவில் வெளிவருவதை உணருங்கள்.”

தியானம் பின்வரும் உறுதிமொழியின் நீண்ட விளக்கத்தை உள்ளடக்கியது, உங்கள் வாழ்க்கையிலும் உலகிலும் அதிக அமைதியை வெளிப்படுத்த விரும்பும் எந்த நேரத்திலும் நீங்களே பயிற்சி செய்யலாம்:

அமைதி என் உடலை நிரப்புகிறது; அமைதி என் இதயத்தை நிரப்பி என் அன்பினுள் உறைகின்றது, உள்ளும், புறமும், எங்கும் அமைதி.

எல்லையற்ற அமைதி என் வாழ்வை சூழ்ந்து. என் இருப்பின் எல்லா நொடிகளையும் ஊடுருவுகிறது.

எனக்கே அமைதி; என் குடும்பத்திற்கு அமைதி; என் தேசத்திற்கு அமைதி; என் உலகத்திற்கு அமைதி; என் பிரபஞ்சத்திற்கு அமைதி.

உங்கள் அமைதியை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள் — நீங்கள் மறக்கும்போது அதை மீட்டெடுப்பதற்கான ஒரு வழி

நாம் வாழ்க்கையைக் கடந்து செல்லும்போது, அன்றாட சவால்களை அடிக்கடி எதிர்கொள்கிறோம், அவை தியானத்தில் நாம் அடைந்த அமைதியை இழக்கச் செய்து, அதற்கு பதிலாக விரக்தி அல்லது குழப்ப உணர்வுகளை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது.

ஆனால் YSS/SRF இன் அன்புக்குரிய நான்காவது தலைவரான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா, 2011 SRF உலகப் பேரவையில் அவரது சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்ட பின்வரும் குறுகிய கிளிப்பில் விளக்குவது போல், இறை இருப்பை பயிற்சி செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த தேர்வும் வழியும் அந்த தருணத்தில் நமக்கு எப்போதும் உள்ளது, அமைதி நழுவிப்போகும் போதெல்லாம் அது நம்மை மீண்டும் அமைதி நிலைக்கு கொண்டு வரும்.

Play Video

இந்த சிறிய டூல்கிட்டில் இருந்து உங்களுக்கு எவ்வளவு அமைதி அகத்துள்ளிலிருந்து கிடைக்கிறது என்பதை இப்போதே காணலாம். தினசரி பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம், முன்னர் மறைக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத அமைதியின் தேக்கிடம் உங்கள் வாழ்க்கையில் ஒரு நிலையான நேர்மறையான மற்றும் பொழியும் சக்தியாக மாறும்.

ஆனால் இந்த டூல்கிட் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் உணரக்கூடிய அமைதியின் அளப்பரிய ஆழத்திற்கு உங்களை அழைத்துச் செல்லத் தொடங்க மட்டுமே செய்கிறது. நீங்கள் இன்னும் ஆழ்ந்து செல்ல விரும்பினால், உங்கள் ஆன்மாவிற்குள் உறையும் அமைதி மற்றும் பேரின்பத்தின் முடிவில்லா நீரூற்றுக்கு உங்களை நேரடியாக வழிநடத்தும், தியான உத்திகள் மற்றும் ஒரு விரிவான வாழ்க்கை முறை பற்றிய பரமஹம்ஸரின் முழுமையான அறிவுரைகளின் தொகுப்பாகிய யோகதா சத்சங்கப் பாடங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும், பதிவுசெய்யவும் பரிந்துரைக்கிறோம்.

எனது நிலையான அமைதி பீடத்தின் மீதும் ஆழ்ந்த தியானத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஆனந்தத்திலும் உன் இருப்பைக் காண எனக்குக் கற்பிப்பாய்

—பரமஹம்ஸ யோகானந்தர்

இதைப் பகிர