குடியரசுத் தலைவர் மாளிகைக்கு YSS சன்னியாசிகளின் வருகை

16 டிசம்பர், 2022

ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி மற்றும் பிரம்மச்சாரி ஆத்யானந்தா ஆகியோர் நவம்பர் 9, 2022 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர். YSS சன்னியாசிகளை வரவேற்ற அவர், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் ஆன்மீக மற்றும் சேவை நடவடிக்கைகளைப் பாராட்டினார். பரமஹம்ஸ யோகானந்தர் மீது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்திய அவர், “பரமஹம்ஸ யோகானந்தரின் முகம் வித்தியாசமாக பிரகாசிக்கிறது. உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை விடவும் மனிதகுலத்திற்கான மேலான தேவையை அவர் இவ்வுலகிற்கு கொடுத்தார். பல பெரிய ரிஷிகளைப் போலவே ஒரு உயர்ந்த ரிஷியான அவர் சிறு வயதிலேயே தனது உடலை விட்டு வெளியேறினார், இருப்பினும் அவரது ஆன்மீக வளம் மகத்தானது.YSS ராஞ்சி ஆசிரமத்திற்கு, குறிப்பாக பரமஹம்ஸரால் வளர்க்கப்பட்ட லிச்சி மரத்திற்கு நான் வரும் போதெல்லாம் நான் எப்போதும் பெரும் ஆன்மீக அதிர்வுகளை உணர்ந்தேன். இந்த லிச்சிகள் மற்ற லிச்சிகளிலிருந்து வேறுபட்டவை என்பதை நான் எப்போதும் உணர்ந்தேன், மேலும் நான் உயர்த்தப்பட்டதாக உணர்ந்தேன்.”

YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் கடிதம், ஒரு பூங்கொத்து, இன்னர் ரிஃப்லக்ஷன்ஸ் — SRF நிகழ்ச்சி குறிப்பு காலண்டர் மற்றும் YSS ன் புகைப்பட வரலாறு ஆகியவற்றை YSS சன்னியாசிகள் அவருக்கு வழங்கினர்.

2016 ஆம் ஆண்டு ராஞ்சி YSS ஆசிரமத்தில் நடந்த ஐ.நா. சர்வதேச யோகா தின விழாவில் அவர் தலைமை விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் பரமஹம்ஸ யோகானந்தருக்கு தனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார். ஒருவரின் வாழ்க்கையில் ஒரு குருவின் ஆன்மீக போதனைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். ஆன்மீக ஞானத்தை அடைவது கடினமாக இருக்கலாம், அது இல்லாமல் பொருள் வெற்றி பயனற்றது என்று அவர் மேலும் கூறினார்.

நவம்பர் 2017 இல், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம் நாத் கோவிந்துடன் காட் டாக்ஸ் வித் அர்ஜூனா வின் இந்தி மொழிபெயர்ப்பின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இந்தியாவின் பண்டைய ஆன்மீக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், குருதேவரின் நடைமுறை மற்றும் ஆன்ம விடுதலைக்கான போதனைகளைப் பரப்புவதிலும் YSS ன் பங்கிற்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இதைப் பகிர