“ட்ரூ மெடிடேஷன் அண்ட் த ஹோப் ஃபார் ஹியுமானிடி” ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் சொற்பொழிவு

10 ஜனவரி, 2023

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா /ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவரும், ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி வழங்கிய “மெய்ன்டைனிங் அவர் டிவைன் கன்னெக்ஷன் வைல் லிவிங் இன் த மெடிரியல் வொர்ல்ட்” என்ற உரையிலிருந்து ஒரு பகுதி இது. மும்பையில் YSS நடத்திய மூன்று நாள் நிகழ்ச்சியின் கடைசி நாளான நவம்பர் 10, 2019 அன்று வழங்கப்பட்ட முழு உரையை நம் யூடியூப் சேனலில் காணலாம்.

இந்த பகுதியின் தொடக்கத்தில், ஸ்வாமி சிதானந்த கிரி இறை நாடுபவர்கள் மும்பை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் ஒன்றாக கூடும்போது ஏற்படும் ஆன்மீக பிணைப்பு மற்றும் உண்மையான தெய்வீக நட்பைப் பற்றி குறிப்பிடுகிறார், குறிப்பாக, அவர்கள் தனது உரைக்கு முந்தைய நாள் செய்ததைப் போல, ஒன்றாக ஆழ்ந்த தியானம் செய்ததை பற்றிக் கூறுகிறார்.

இந்த குறுகிய நிகழ்ச்சிகளின் முடிவில் நாம் அனைவரும் எவ்வளவு நெருக்கமாகிவிட்டோம் என்பதை பற்றி நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன். உங்களில் பலரை நான் இங்கு வருவதற்கு முன் வெளியில் சந்தித்ததில்லை — இது மும்பைக்கு எனது முதல் வருகை — இருப்பினும், இந்த மூன்று நாட்களில், தெய்வீக நட்பின் ஒரு இனிமையான பிணைப்பு உருவாகியுள்ளதை உணராமல் இருக்க முடியாது.

நான் அப்படி உணர்கிறேன்; நேற்று நாம் ஒன்றாகக் கழித்த மூன்று மணிநேர தியானத்தில் அந்த பிணைப்பு மிகவும் சக்திவாய்ந்த முறையில் உருவாகிறது என்று நான் நினைக்கிறேன் — தெய்வீக மீட்டெடுக்கும் கிணறுகளாகிய ஆன்மீக அனுபவத்தில், ஆன்மீக உணர்வுநிலையில் மேலும் மேலும் ஆழந்து மூழ்கினோம்.

நாம் ஒன்றாக தியானம் செய்யும்போது, நமது புத்தி அல்லது உணர்ச்சிகளை கட்டிலும் ஆழமான நிலையில், ஒரு ஆன்மீக பிணைப்பை உருவாக்குகிறோம்; அதனால்தான், ஒப்பீட்டளவில் பேசினால், நாம் வெளிப்புறமாக ஒரு குறுகிய காலத்தை மட்டுமே ஒன்றாக கழித்திருந்தாலும், உள்ளார்ந்த ரீதியில் அந்த இணைப்பின் தரம், ஆழம் மற்றும் தீவிரம் ஆகியவை தெய்வீகத் தோழமையின் உறுதியான, மிகவும் உண்மையான பிணைப்பில் நம்மை ஒன்றிணைத்துள்ளன. உங்களுடன் நான் கழித்த இந்த நாட்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

தியானம் தனிப்பட்ட ஆன்மாக்களுக்கு இடையே ஆன்மீக உறவுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பது பற்றி மிகவும் சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. ஏனென்றால், நாம் அகத்துள் நமது ஆன்ம விழிப்புணர்வைத் தொடர்பு கொள்ளும்போது, மற்ற ஆன்மாக்களுடன் இணைந்து அதைச் செய்யும்போது — நாம் அனைவரும் கூட்டாகச் செயல்படும் இடத்தில், குறைந்த பட்சம் சிறிது நேரமாவது, அந்த உயர் ஆன்ம உணர்வுநிலையிலிருந்து — தன்னியக்கமாக நாம் அன்பை வளர்த்துக் கொள்கிறோம்; தன்னியக்கமாக மதிப்பையும் போற்றுதலையும் வளர்த்துக் கொள்கிறோம், அது இனிமையான தெய்வீக நட்பாக ஆழமடைகிறது. இப்போது, இது ஏன் இந்த காலங்களில் குறிப்பாக முக்கியமானதாயிருக்கிறது?

“மனித குலத்தின் நம்பிக்கை”

இன்றைய உலகை பாருங்கள். நமக்கு அப்படி ஒரு முரண்பாடு இருக்கிறது; அத்தகைய மாறுபட்ட நலன்கள் மற்றும் கருத்துக்கள் மற்றும் செயல் திட்டங்கள் நம்மிடம் உள்ளன. இந்த உலகம் மக்களுடன் பழக எளிதான இடம் அல்ல. ஆன்மீக முன்னேற்றத்தின் மூலமோ அல்லது மனித இனத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலமோ, ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக ஒன்றாக வாழ முடியும் என்ற கருத்து நமக்கு உள்ளது. இது வேத சாஸ்திரங்களில் இருந்து பெறப்பட்ட உலகத்தை ஒரே குடும்பமாகக் கொண்ட ஒரு பண்டைய இலட்சியமாகும்.

நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள், அந்த நல்லிணக்கத்தில், அந்த அமைதியில் நாம் வாழ வேண்டும். ஆனால் ஆழ்ந்த, தினசரி தியானம் சமூகத்தில் ஊடுருவும் — நம் குருதேவர் இதை மீண்டும் மீண்டும் கூறினார் — வரை, அது எப்போதும் அடையப்படாத இலட்சியமாக இருக்கும்.நான் நான் உறுதியாக நம்புகிறேன்

அதிகமான மக்கள் தியானத்தின் மூலம் இறைவனை அகத்துள் உணர முயற்சி செய்யும் போதுதான் , அந்த தெய்வீக தீப்பொறியை, அந்த தெய்வீக சாரத்தை, மற்ற எல்லா ஆன்மாக்களிலும் இறைவனின் இருப்பை உணரும் திறனை நாம் பெற முடியும். அதுதான் “உலகம் ஒரே குடும்பம்” என்பதன் அடிப்படை, மனிதனின் சகோதரத்துவத்தின் அடிப்படை. உலக அமைதிக்கான நம்பிக்கையின் ஒரே நிலையான, யதார்த்தமான அடிப்படை அதுதான்.

நீங்கள் ஒவ்வொருவரும் தியான பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள உறுதிபூண்டுள்ளீர்கள், நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கும்போது மனதை அலைபாய விடாமல் இருப்பது மட்டுமல்லாமல், யோக தியானத்தின் இந்த உயர் உத்திகளைப் பயன்படுத்தி ஆழ்ந்த, கட்டுப்பாடுடன் மற்றும் கவனக்குவிப்புடன் கூட, உண்மையிலேயே, தியானம் செய்யும் ஒரு வழக்கத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளீர்கள்.

இந்த பாதையில் பயணிக்கும் நீங்களும், இறை உணர்வுநிலையில் மூழ்குவதற்கான அக முயற்சியை மேற்கொள்ளும் மற்றவர்களும் — நீங்கள் அனைவரும் தான் மனிதகுலத்தின் நம்பிக்கை.

இப்போது, இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்தபின், நாம் ஆன்மாக்களாக அந்த அற்புதமான இணைப்பைப் பெற்றுள்ளோம்; நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்த ஆன்மீக சாராம்சம் என்ன என்பதைப் பற்றிய ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையும் உணர்தலும் நமக்கு இருக்கலாம். ஆனால், நாம் சாசுவதமானவர்களாகவும், அழிவற்றவர்களாகவும், என்றும் பரிபூரணமானவர்களாகவும், தெய்வீகமானவர்களாகவும் இருந்தாலும், நாம் இந்த ஜட சரீரங்களில் வாழ்கிறோம், இந்த பௌதிக உடல்கள் லௌகீக உலகில் வாழ்கின்றன.

அதுவே நமது சவால்: தியானம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் நாம் பெறும் நமது தெய்வீக தன்மை பற்றிய அந்த உணர்தலை எவ்வாறு எடுத்துக் கொண்டு அதில் நிலைத்து நிற்பது; லௌகீக உலகில் வாழும் போது கூட அந்த தொடர்பை எவ்வாறு பேணுவது.

இந்த உரையின் வீடியோ நம் யூடியூப் சேனலிலும் கிடைக்கப் பெறுகிறது

இதைப் பகிர