“முழுநிறைவிற்கான தேடல்” — ஒரு கதை

10 ஜனவரி, 2023

விவேகம் மற்றும் அக்கறையுடனான வழிகாட்டுதலின் கீழ் எடுக்கப்பட்ட பல சிறிய நடவடிக்கைகளுக்குப் பிறகு மட்டுமே முழுமை காணப்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு பாரம்பரியக் கதையை மீண்டும் சொல்வது.

மிகப்பெரிய சிற்பி ஒருவர் தயக்கத்துடன் தனது சுத்தியலையும் உளியையும் கீழே வைத்துவிட்டு, இவ்வளவு தாமதமான நேரத்தில் தனது ஸ்டுடியோவுக்கு யார் வருகிறார்கள் என்று பார்க்க சென்றார்.

கதவைத் திறந்த அந்த கலைஞர், பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அறிமுகமான ஒருவர் நிற்பதைக் கண்டு, அவரை மௌனமாக வரவேற்றுவிட்டு மீண்டும் தனது பணிக்குத் திரும்பினார். அவருடைய நண்பர் அவரை நெருக்கமாகப் பின்தொடர்ந்தார். “நாங்கள் உங்களைப் பார்க்காமல் பல நாட்கள் ஆகிவிட்டன! நிச்சயமாக நீங்கள் இன்னும் அந்த சிலை வேலையையே செய்து கொண்டிருக்கவில்லை அல்லவா?” என்று கேட்டார்.

இன்னும் எதுவும் சொல்லாமல், கலைஞர் தனது நண்பரை அவர் பல மாதங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் தலைசிறந்த படைப்பின் அருகில் அழைத்துச் சென்றார். அதைக் கண்ட அந்த மனிதரும் அமைதியாகிவிட்டார். இறுதியில் அவர் மெதுவாக,“மனித ஆன்மாவை இவ்வளவு உன்னதமாக வெளிப்படுத்த நீங்கள் இதற்கு முன் ஒருபோதும் முயலவில்லை. இது உங்கள் சிறந்த படைப்பு.”

“செய்து முடித்ததும் அப்படித் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று சிற்பி பதிலளித்தார். “ஆனால் எனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது. அங்கி சரியாக இல்லை. பாருங்கள்—இந்த தசைக்கு முக்கியத்துவம் தேவை; அந்த அம்சம் மென்மையாக்கப்பட வேண்டும்.”

“ஆனால் இவை வெறும் அற்பமானவை!” என்று அவர் நண்பன் கண்டித்தார்.

“ஆஹா”, என்றார் கலைஞர் தனது நண்பரிடம் திரும்பி, “ஆனால் அற்ப விஷயங்கள் முழுநிறைவை உருவாக்குகின்றன, மற்றும் முழுநிறைவானது அற்ப விஷயமல்ல.” என்றார்

இதைப் பகிர