அகத்திலும் மற்றும் எங்கும் நீங்கள் எவ்வாறு அமைதியை நிலைநாட்டலாம் என்பது பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

06 செப்டெம்பர், 2022

ப யோ–லாஸ்ட்-ஸ்மைல்

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து...

உலகை உங்களது சொந்த நாடாக நேசிப்பீர்கள் எனவும், உங்களது குடும்பத்தை நீங்கள் நேசிப்பது போல் உங்களது நாட்டை நீங்கள் நேசிப்பீர்கள் எனவும் உறுதி கொள்ளுங்கள். ஞானம் எனும் அழிக்க முடியாத அஸ்திவாரத்தின் மீது ஓர் உலக குடும்பத்தை நிறுவுவதற்கு இந்த புரிதலின் வாயிலாக நீங்கள் உதவி புரிவீர்கள்.

அன்றாட பக்தி பூர்வ தியானப் பயிற்சியின் மூலம் அமைதியை உருவாக்கும் உண்மையான அமைதியாளர்கள் அவர்கள்தான்.

தியானம் மற்றும் இறை-தொடர்பை தவறாமல் பயிற்சி செய்யுங்கள், உங்கள் வெளிப்புற சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், ஆனந்தம் மற்றும் இனிமை எனும் திராட்சை ரசத்தை நீங்கள் எப்போதும் சுவைப்பீர்கள். உங்கள் அமைதியான உணர்தல் எனும் தேவதையின் கரங்களிலிருந்து அக அமைதி அமிர்தத்தைப் பருகுவதன் மூலம், உங்கள் அன்றாட வாழ்க்கையின் கவனச்சிதறல்களையும் துயரங்களையும் மூழ்கடிப்பீர்கள்.

ஒருமுறை நீங்கள் அந்த அமைதியைக் கண்டறிந்தால், அது உங்கள் சூழலுக்கும் உலகிற்கும் ஓர் அருளாசியாய் பாய்கிறது. அகத்தே நல்லிணக்கம், புறத்தே நல்லிணக்கம், எங்கும் நல்லிணக்கம்! இறைவனின் அமைதியால் நிரம்பிய ஒரு நபர், அனைவரிடமும் நல்லெண்ணத்தை மட்டுமே உணர முடியும். அந்த உணர்வுநிலை மட்டுமே பூமியில் நிலையான அமைதியை கொண்டு வரும்.

 

ஸ்வாமி பூமானந்த கிரி நடத்தும், பரமஹம்ஸ யோகானந்தரின் ‘பூமியில் அமைதிக்கான பிரார்த்தனை’ பற்றிய வழிநடத்தப்பட்ட தியானத்தில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். இந்த தியானத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் பிரார்த்தனையிலிருந்து சக்திவாய்ந்த சிந்தனைகளை அகக்காட்சியாக காணுதல், சங்கல்பம் ஆகியவை இருக்கும். உங்கள் அகத்துள் அமைதி நிலவச் செய்த பிறகு, உங்கள் அமைதி மற்றும் அன்பால் “உலகின் அனைத்து தலைவர்கள் மற்றும் குடிமக்களின் இதயங்களை ஊடுருவி ” உலகில் – இன்றும் எந்த நாளும் – நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதைப் பகிர