ஸ்ரீ மிருணாளினி மாதாவின் உரை “பரமஹம்ஸ யோகானந்தர் அண்ட் த ஸ்பிரிசுவல் லைட் ஆஃப் இந்தியா”

8 பிப்ரவரி, 2023

2011 முதல் 2017 -ல் அவர் மறையும் வரை YSS/SRF -ன் நான்காவது தலைவராக பணியாற்றிய ஸ்ரீ மிருணாளினி மாதா எழுதிய “த யோக சாதனா தட் ப்ரிங்ஸ் காட்’ஸ் லவ் அண்ட் ப்ளிஸ்” என்ற உரையின் ஒரு சிறிய பகுதி இது. முழு உரையின் ஆடியோவை YSS வலைப்பதிவிலும் இந்த பக்கத்தின் கீழேயும் காணலாம். உரையின் முழு அச்சிடப்பட்ட பதிப்பை நமது யோகதா சத்சங்க இதழ் பக்கத்தில் மாதிரிக் கட்டுரைகளில் ஒன்றாகப் படிக்கலாம்.

இந்தியாவின் பண்டைய யோக போதனைகளை நவீன உலகிற்கு கொண்டு வர பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை மற்றும் காவிய பயணம் பற்றி எங்கள் வலைத்தளத்தில் மேலும் அறியலாம்.

பரமஹம்ஸ யோகானந்தர் மேலைநாடுகளில் தனது பணியை நிறைவேற்ற தனது தாய்நாட்டை விட்டு வெளியேறியபோது, அவரது இதயமும் ஆன்மாவும் அவரது இந்தியாவை விட்டு வெளியேறவில்லை.

ஒருமுறை பாரதத்தில் இருந்து ஒருவர், “நிச்சயமாக நீங்கள் உங்கள் இந்தியாவை மறந்துவிட்டீர்கள். நீங்கள் இவ்வளவு காலம் தொலைவில் இருப்பதால், உங்கள் பூர்வீக மண்ணை மறந்துவிட்டீர்கள்.” என்று பரமஹம்ஸருக்கு எழுதினார். ஆனால் நமது குருதேவர், “அது ஒருபோதும் முடியாது. நான் இந்தியாவை நேசிப்பதால்தான், இந்தியாவின் செய்தியையும் இறை அன்பையும் உலகம் முழுவதும் பரப்ப இந்த மண்ணில் இரவு பகலாக உழைத்து வருகிறேன். எந்த நாளிலும் ஒரு கணம் கூட அவள் என் இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் வெளியேறவில்லை.”

நம் குருதேவர் 1935ல் ஒரு வருடத்திற்கு மட்டுமே இந்தியா வந்தார். அந்தக் காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும் வர திட்டமிட்டார்; ஆனால் அவர் பணியில் மிகவும் மும்முரமாக இருந்தார், அவரது பணி மிகவும் வளர்ந்து கொண்டிருந்தது, தெய்வீக அன்னை அவரை அனுமதிக்கவில்லை. ஆனாலும், “இந்தியாவின் செய்தியை நான் உலகின் அந்த பக்கம் கொண்டு சென்றுள்ளேன், இந்தியா என்னை அறியும்” என்று அவர் கணித்திருந்தார்.

அவரது குரு ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியும், “எனது செய்தி இந்தியாவில் இருந்து இந்தியாவில் பரவாது; அது வெளியில் இருந்து இந்தியாவிற்குள் பரவும்” என்று கூறியிருந்தார்.

பரமஹம்ஸரும் ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியும் அதைத்தான் சொன்னார்கள்; பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றி பாபாஜி ஸ்ரீ யுக்தேஸ்வரிடம் கூறியது இதுதான்: “யோகத்தின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு பயிற்சியளிக்க நான் இந்த சீடரை உங்களிடம் அனுப்புகிறேன், ஏனென்றால் இறைவன் தனது உலகம் இப்போது ஒன்றுபட வேண்டும் என்று விரும்புகிறான். பிரிவுகள் இனி இருக்கக்கூடாது.”

எனவே கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் இந்த ஒற்றுமை வர வேண்டும்; ஆனால் இந்த போதனை, இந்த ஒளி முதன்முதலில் தூண்டப்பட்டு உலகெங்கும் பரவியது இந்தியாவிலிருந்து தான். அதனால்தான் இந்த புனித பூமியை நாம் போற்றுகிறோம்.

நட்பார்ந்த வானம்,
அழைக்கும் ஆலமர நிழல்,
பாயும் புனித கங்கை —
உன்னை எப்படி மறப்பேன் நான்!

 அசையும் சோளம் எனக்கு மிகவும் விருப்பம்
பிரகாசிக்கும் இந்திய வயல்களில்,
ஆஹா, மரணமற்ற வல்லமை தெய்வங்கள் பெரிதும்,
வளர்ப்பதைக் காட்டிலும் விண்ணுலகில்!

 என் ஆன்மாவின் பரந்த அன்பு, இறைக் கட்டளையில்,
பிறந்தது இங்கே முதலில்,
என் சொந்த பூமியில் —
இந்தியாவின் வெயில் நிறை மண்ணில்.

உன் தென்றலை நேசிக்கிறேன் நான்,
உன் நிலவை நேசிக்கிறேன் நான்,
உன் மலைகளையும் கடல்களையும் நேசிக்கிறேன்;
உன்னிடத்திலே என் வாழ்வு முடிவடையவே விரும்புகிறேன் நான்.

முதலில் நீ எனக்கு கற்றுக் கொடுத்தாய் நேசிக்கவே
மேலேயுள்ள வானம், நட்சத்திரங்கள், இறைவனையே
எனவே எனது முதல் அஞ்சலி — சந்திக்கும் போதே —
ஓ இந்தியா, உன் காலடியில் சமர்பிப்பதே!

 உம்மிடமிருந்து இப்போது கற்றுக்கொண்டேன், பார்க்கவும்,
உன்னைப் போலவே எல்லா நாடுகளையும் நேசிக்கவும்.
நான் வணங்குகிறேன், என் பூர்வீக பூமியான உம்மை
மகத்தான என் அன்பின் தாயை.

இந்த பூமியை அதன் ஆன்மீக பாரம்பரியத்திற்காக வணங்கவும், ஏனெனில் இது இந்த உலகின் ஆன்மீக ஒளி.

முழு உரையைக் கேளுங்கள்

Play Video

முழு உரையைப் படியுங்கள்

நம் யோகதா சத்சங்க இதழ் பக்கத்தில் நீங்கள் 1925 ஆம் ஆண்டில் பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட இதழின் வரலாற்றைப் பற்றி மேலும் அறியலாம், மேலும் “த யோக சாதனா தட் ப்ரிங்ஸ் காட்’ஸ் லவ் அண்ட் ப்ளிஸ்” உள்ளிட்ட மாதிரி கட்டுரைகளைப் படித்து மகிழலாம்.

இதைப் பகிர