யோகானந்தரின் 125வது அவதார நாளை இந்திய அரசு நினைவு கூறுகிறது.

25 செப்டம்பர், 2018

இந்தியாவின் அமரத்துவ புதல்வர்களில் ஒருவரான நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மேன்மை நிலையையும் மற்றும் பங்களிப்பையும் இந்திய அரசு மீண்டும் ஒருமுறை அங்கீகரித்து அவரது 125 வது அவதார நாளை நினைவுகூர தீர்மானித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகமும் தேசிய அமலாக்கக் குழுவின் உதவியுடன் இத்தகைய நினைவுகூரல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. இந்தியாவின் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஶ்ரீ ராஜ்நாத் சிங் தலைமையில் பரமஹம்ஸ யோகானந்தரின் 125-வது அவதார நாளைக் கொண்டாடுவதற்கு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இந்திய நிதியமைச்சர் ஶ்ரீ அருண் ஜெட்லி, கலாச்சார அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா, பிற முக்கிய அரசு அதிகாரிகள் அத்துடன் ஒய் எஸ் எஸ் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.

பரமஹம்ஸ யோகானந்தரின் 125வது அவதார நாளை சிறப்பித்துக் கொண்டாட இந்திய அரசு பல்வேறு திட்டங்களை ஒய் எஸ் எஸ்-ஸின் உதவியுடன் மேற்கொண்டு செயல்படுத்தும். இத்திட்டங்களில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

  •  ஒரு யோகியின் சுயசரிதம்  பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய நூல்களின் ஆங்கில மற்றும் பிரதான இந்திய மொழிகளில் பிரதிகளை இந்திய நாடு முழுவதும், நூற்றுக்கணக்கான நூல் நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கி, இலவசமாக வழங்குதல்;
  • ஆர்வமுள்ள மக்களிடையே யோக தியான உத்திகள் மற்றும் போதனைகளை பரப்புவதற்காக பொதுச் சொற்பொழிவுகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.
  • முக்கிய இந்திய மொழிகளில்  ஒரு யோகியின் சுயசரிதம்  ஒலிப் புத்தக வடிவத்தைத் தயாரித்தல். ;
  • பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையையும் பணியையும் விரித்துரைக்கும் சித்திர வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடல்.
  • பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவன ஊழியர்களை அணுகி பரமஹம்ஸ யோகானந்தரது போதனைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
  • பரமஹம்ஸரின் புத்தகங்கள், மின் புத்தகங்கள் மற்றும் ஒலி – காணொலி வடிவ விஷயங்களை வெளியிடல்.
  • ராஞ்சியில் உள்ள ஒய் எஸ் எஸ் கல்வி நிறுவனங்களுக்கான நவீன உள்கட்டமைப்பு.

இந்தக் கொண்டாட்டங்களும் நிகழ்வுகளும், இந்தியாவின் பண்டைய ஆன்மீகப் பொக்கிஷத்தை பரமஹம்ஸரால் விளக்கப்பட்டபடி பரப்புவதற்கான புனித சாதனங்களாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். அதேசமயம், இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலோ அல்லது தமது உற்சாகமான பங்கேற்பால் அவற்றை வெற்றிகரமாக்குவதிலோ உதவிபுரியும் அனைத்து ஆன்மீக சாதகர்களுக்கும் பக்தர்களுக்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றியுடையவர் களாவோம்.

நமது குருதேவரின் 125வது அவதார நாளைக் கொண்டாடும் அதே சமயம் நாங்கள் அவ்வப்போதைய அண்மை நிகழ்வுகளையும் செய்திகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தொடர்வோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள  நிகழ்வுகளின் பட்டியலைக் காணுங்கள். .

ராஜ்நாத் சிங்குடன் (உள்துறை அமைச்சர்) சுவாமி ஸ்மரானந்தா, இந்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பில்
ஒய் எஸ் எஸ் பொதுச்செயலாளர் சுவாமி ஸ்மராணானந்தா (இடமிருந்து மூன்றாவது), சுவாமி ஈஸ்வரானந்தா மற்றும் பிரம்மச்சாரி நிஷ்டானந்தா ஆகியோர் புதுடெல்லியில் இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தில், (வலமிருந்து இடமாக) டாக்டர் மகேஷ் சர்மா, கலாச்சாரத்துறை அமைச்சர்; ஸ்ரீ ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர்; ஶ்ரீ எஸ் எஸ் அலுவாலியா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்; ஶ்ரீ பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் மற்றும் ஸ்ரீ பூபேந்திர யாதவ், ராஜ்யசபா உறுப்பினர் (பாராளுமன்றம்)
ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் இயக்குனர்கள் குழு உறுப்பினரான சுவாமி விஸ்வானந்தர் (வலம்) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எஸ் ஆர் எஃப் மதர் சென்டரில் இருந்து இந்திய அரசு அதிகாரிகளுடனான கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்தார். இங்கு அவர், கலாச்சாரத் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர சர்மாவுடன் கலந்துரையாடுகிறார்.
ஊராட்சியில் உள்ள சிறுவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் பன்முகப் பயன்பாட்டு அரங்கம் மற்றும் ஒரு புதிய கட்டிடம் (காட்டப்பட்டுள்ளது) ஆகியவற்றின் தலைமைத் திட்ட கருத்தியல் வரைபடங்கள்; இவற்றுக்கான நிதி, மானியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதைப் பகிர