YSS அறப்பணி சார்பு பயிற்சி மையத்தின் முன்னாள் மாணவர்கள் ஐஐடியில் சேருகின்றனர்

3 ஜனவரி, 2022

YSS நொய்டா ஆசிரமத்தில் உள்ள நம் அறப்பணி சார்பு பயிற்சி மையத்தின் மூன்று முன்னாள் மாணவர்கள் மிகவும் மதிப்புமிக்க இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அல்லது ஐ.ஐ.டி.களில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகிணி மிஸ்ரா ஐ.ஐ.டி காரக்பூரில் சேர்ந்துள்ளார்; யோகேஷ் லோதி ஐ.ஐ.டி பாட்னாவில் படிக்கிறார், அன்ஷு பால் டெல்லி பொறியியல் கல்லூரியில் சேர விரும்புகிறார்.

பத்தாண்டுகளுக்கும் முன்பே தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம் YSS நொய்டா ஆசிரமத்திற்கு அருகில் வசிக்கும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி நேரத்திற்குப் பிறகு ஆசிரம வளாகத்தில் கற்பிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் அர்ப்பணிப்புள்ள YSS பக்தர்-தன்னார்வலர்கள், பலர் முன்னாள் ஆசிரியர்கள் அல்லது கல்வியுடன் தொடர்புடைய நபர்கள்.

ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி மற்றும் பயிற்சி மையத்தின் பக்தர்-ஆசிரியர்களுடன் திறமையான மாணவர்கள்

அந்தந்த பாடப்பிரிவுகளில் உள்ள பொது பாடங்களுடன், மாணவர்களுக்கு உரையாடல் ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது. இந்த மாணவர்கள் இந்தி வழியில் படிப்பதால், ஆங்கிலம் பேசும் திறன் மேம்பட வேண்டும். அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பை முடிப்பதற்குள் பொதுவான பாடங்களில் எளிய ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோல், மாணவர்களின் படிப்பு முடிவுகள், விருப்பங்கள், அவர்களின் நிதி பின்னணி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, பெற்றோர்களது இயலாமையால் மேல் கல்வி பெற முடியாத ஒரு மாணவி, இரண்டு ஆண்டு படிப்பில் சேரவும், மருத்துவ ஆய்வக உதவியாளராக டிப்ளோமா பெறவும் அறிவுறுத்தப்பட்டார். கட்டணத்தின் ஒரு பகுதியை ஈடுசெய்ய YSS அவருக்கு உதவித்தொகை வழங்கியது. அவள், அதன் பிறகு படிப்பை முடித்து இப்போது ஒரு நல்ல மருத்துவமனையில் வேலை செய்கிறாள்.

இந்த மூன்று ஐஐடி மாணவர்களும் ஒவ்வொரு துறையிலும் இயன்றவரை சிறந்து விளங்குவதற்கும், உயர்ந்த இலக்குகளை அடைய உதவும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்துவதற்கும் உதவ பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர்கள் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர்களுக்கு வழிகாட்டினார்கள்.

தங்கள் ஆசிரியர்கள் மூலம் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக அமைப்புடன் ஒரு சிறப்பான உறவை வளர்த்துக் கொண்ட இந்த மூன்று திறமையான மாணவர்களும் தங்கள் உயர் படிப்புக்கு நிதி உதவி கோரி YSS ஐ அணுகினர். அவர்களின் கல்வி செயல்திறனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கல்லூரிக் கட்டணத்தில் பெரும்பகுதியை உள்ளடக்கிய உதவித்தொகைகளை YSS அவர்களுக்கு வழங்குகிறது.

para-ornament

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீகப் பணி மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு அறப்பணி, கல்வி மற்றும் மருத்துவ செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் யோகதா சத்சங்க சொஸைடிக்கு உதவ , கீழே பகிரப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்:

இதைப் பகிர