கிறிஸ்துமஸ் தியானம் பற்றிய வழிமுறை தகவல்கள்

கிறிஸ்துமஸ் பருவத்தில் நீங்கள் ஆழ்ந்து தியானிப்பீர்களானால், கிறிஸ்துவின் இருப்பை நீங்கள் உணர்வீர்கள் என்ற இந்த சிறப்பு அருளாசிகளை உங்கள் அனைவருக்கும் நான் வழங்குகிறேன்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

உலகெங்கிலும் உள்ள யோகதா சத்சங்க / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கான ஆண்டு இறுதி விடுமுறை பருவத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, 1931 ஆம் ஆண்டில் பரமஹம்ஸ யோகானந்தரால் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக அவரே தனிப்பட்ட முறையில் நடத்திய நாள் முழுவதும் தியானம் செய்யும் ஒரு மரபு ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் நடுப்பகுதியில் YSS / SRF ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் 8 மணி நேர தியானம் நடத்துகின்றன

  • இறைவனின் ஒரு அவதாரமாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பை போற்றும் வகையில், மற்றும்
  • இயேசு மற்றும் பிற முக்தி அடைந்த மகான்களின் வாழ்க்கையில் பரிபூரணமாக வெளிப்பட்ட அதே பிரபஞ்ச கூடஸ்த சைதன்யா அல்லது கிருஷ்ண உணர்வுநிலை (கிறிஸ்து உணர்வுநிலை) அனுபவத்தில் நமக்குள் ஆழ்ந்து மூழ்குவதற்காக.

இந்த தியான நிகழ்வின் விவரங்களை அறிய, தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள ஒரு YSS இருப்பிடத்தைத் தொடர்பு கொள்ளவும்.

இந்த உண்மையிலேயே உயர்த்தும் மற்றும் நீடித்து நிலைக்கச் செய்யும் அனுபவத்திற்காக நீண்ட கால பக்தர்களையும், YSS/SRF போதனைகளுக்கு புதியவர்களையும் எங்களுடன் இணைந்திருக்க ஊக்குவிக்கிறோம்.

விடுமுறை சமூக விழாக்களுக்கு முன்னதாக பரமஹம்ஸர் குறிப்பிட்ட இந்த “ஆன்மீக கிறிஸ்துமஸை” அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒரு முழு நாள் தியானத்திற்குத் தயாராவது பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்டின் இந்த நேரத்தில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மகத்தான அருளாசிகளை ஏற்கும் வகையில் உங்கள் உணர்வுநிலையை எவ்வாறு இப்போதே இசைவித்திருக்கத் தொடங்குவது என்பதற்கான பயனுள்ள வழிமுறை தகவல்களை இந்த பக்கத்தில் காணலாம்:

  • பரமஹம்ஸ யோகானந்தரிடமிருந்து ஒரு கிறிஸ்துமஸ் செய்தி
  • SRF தலைவர்களிடமிருந்து அகத்தூண்டுதல்கள் (உரை, ஆடியோ மற்றும் வீடியோ)
  • உங்கள் தியானங்களை ஆழப்படுத்த வழிகள் (ஆடியோ)
  • கிறிஸ்துமஸ் நினைவு தியானத்தில் கலந்து கொள்ளுங்கள் — YSS ஆன்லைன் தியான கேந்திரா
கலங்கரை விளக்கம்-சொத்து

பரமஹம்ஸ யோகானந்தரிடமிருந்து ஒரு கிறிஸ்துமஸ் செய்தி

த செகண்ட் கமிங் ஆஃப் க்ரைஸ்ட்: த ரெஸரக்ஷன் ஆஃப் த க்ரைஸ்ட் விதின் யூ என்ற நூலின் கூடுதல் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் கிறிஸ்துமஸ் செய்திகளில் ஒன்று இங்கே வழங்கப்பட்டுள்ளது, இது இயேசுவின் உண்மையான போதனைகள் குறித்த பரமஹம்ஸரின் வெளிப்பாட்டு விளக்கம். இந்த குறுகிய மற்றும் சக்திவாய்ந்த செய்தியில், அனைவருக்கும் அன்பு மற்றும் உள்ளார்ந்த தெய்வீக கிறிஸ்து உணர்வுநிலையுடனான ஒருமை இவற்றை கொண்ட ஏசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பருவத்தில் – மற்றும் எல்லா நேரங்களிலும் – நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆன்மீகமயமாக்கும்படி அவர் அறிவுறுத்துகிறார்.

உண்மையான கிறிஸ்து-ஒருவராக இருங்கள்

“இது உங்களுக்கான எனது கிறிஸ்துமஸ் பாடல், தினசரி தியானத்தின் மூலம் நீங்கள் உங்கள் உணர்வுநிலை தொட்டிலை தயார் செய்யுங்கள், இதனால் அங்கு புதிதாக வைக்கப்பட்டுள்ள எல்லையற்ற குழந்தை கிறிஸ்துவை நீங்கள் உணரலாம். இந்த புனித பருவத்தில் ஒவ்வொரு நாளுமே இறை ஐக்கியம் எனும் உண்மையான கிறிஸ்துமஸ் சமயமாக மாறும் வரை ஆழமாகவும் நீண்டதாகவும் பிரார்த்திக்கவும்.

“லௌகீக அன்பளிப்புகளுடனான கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றிய சடங்குகள் நிறைந்த சமூக விழாக் கொண்டாட்டத்தை, உலகளாவிய சகோதரத்துவ மனப்பான்மையில், அனைத்து உண்மையான ஆன்மாக்களுடன், ஆன்ம குணங்களின் ஆன்மீக பரிசுகளான அன்பு, அமைதி, மன்னிப்பு மற்றும் ஆனந்தம் ஆகியவற்றை பரிமாறிக்கொள்வதன் மூலம், ஆன்மீகமாக்குங்கள்,

“தேசபக்தியெனும் நெருப்பிடத்தில், போர் மற்றும் தவறான புரிதல்களின் இருளை விரட்ட பூமியின் அனைத்து நாடுகளுக்கும் அன்பின் வசீகரிக்கும் ஒளியை தூண்டிவிடவும். ஒரு உண்மையான கிறிஸ்துவின் புதல்வனாக, ஒரு உறுதியான சபதம் செய்யுங்கள்: ‘நான் என் சொந்த மக்களை நேசிப்பது போல் இறைவனின் மக்கள் அனைவரையும் நேசிப்பேன்.’

வீட்டில், வணிகத்தில், தேவாலயத்தில், சமூகத்தில், அரசியலில், சர்வதேச புரிதலில் கிறிஸ்துவின் ஒருங்கிணைக்கும் தாக்கத்தில் வாழுங்கள்; பெருமான் இயேசு உங்களோடு இருப்பார். நீங்கள் ஒரு கிறிஸ்து-ஆக இருப்பீர்கள் – கிறிஸ்து-ஒருவராக – கிறிஸ்துவுடன் ஒன்றாக இருப்பீர்கள்.”

கலங்கரை விளக்கம்-சொத்து

YSS/ SRF தலைவர்களிடமிருந்து அகத்தூண்டுதல்கள்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்பின் (YSS/SRF) ஐந்தாவது மற்றும் தற்போதைய தலைவரான ஸ்வாமி சிதானந்த கிரியின் 2020 கிறிஸ்துமஸ் ஆன்மீக உரையின் வீடியோ பகுதியைக் கீழே காணலாம், அதைத் தொடர்ந்து முறையே, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது YSS/ SRF தலைவர்களிடமிருந்து, மேலும் உத்வேகமளிக்கும் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானம் ஆகியவைகளை காணலாம்.

புனித விடுமுறை அனுசரிப்புகளின் செய்தி

ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் உரை

YSS/SRF இன் தலைவரும் ஆன்மீகத் முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி, விடுமுறைக் காலத்தில் வியாபித்திருக்கும் இறை அருளைப் பற்றியும், அதன் மாற்றும் சக்தியைப் பெற நாம் எவ்வாறு நம்மை தயார்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றியும் ஒரு சிறப்புச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் இயேசுவின் பிறப்பைப் பற்றிய புதிய ஏற்பாட்டில் இருந்து ஒரு பகுதியையும் வாசிக்கிறார், மேலும் தியானம் செய்பவர்களுக்கு அந்த வரலாறின் ஆழமான மற்றும் மெய்கருத்தை தெளிவுபடுத்த பரமஹம்ஸரின் ஞானத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

Play Video

இந்த பருவத்தின் உள்ளார்ந்த ஆன்மீக அழகு

ராஜரிஷி ஜனகானந்தரின் உரை

ராஜரிஷி ஜனகானந்தர் பரமஹம்ஸ யோகானந்தரின் முதல் ஆன்மீக வாரிசு ஆவார். 1952 முதல் 1955 இல் அவரின் மறைவு வரை YSS/SRF இன் இரண்டாவது தலைவராக பணியாற்றினார். YSS/SRF இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் 1952 ஆம் ஆண்டில் ராஜரிஷி வழங்கிய கிறிஸ்துமஸ் செய்தி பின்வருமாறு.

“இந்த புனித கிறிஸ்துமஸ் பருவத்தில் என் இதயத்தில் ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தை உணர- இயேசுவின் வருகையில் நாம் கொண்டாடும் கிறிஸ்து உணர்வுநிலையின் எங்கும் நிறைந்துள்ள அன்பையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் உணர்வுபூர்வமாக தங்கள் இதயங்களில் பெறுவதற்கான தேவையை, மனிதர்கள் இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவு உணரவில்லை.

“குருமார்கள் மற்றும் நம் குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் அருளாசிகள் மற்றும் அவர்களின் ஸெல்ஃப்-ரியலைசேஷன் போதனைகள் மூலம், இந்த பருவத்தின் உள்ளார்ந்த ஆன்மீக அழகிற்கு என் கண்கள் திறக்கப்பட்டுள்ளன; என் இதயம் எங்கும் நிறைந்துள்ள கிறிஸ்துவின் பேரன்பினால் நிறைந்திருக்கிறது.

” இந்த தெய்வீக அன்பையும் மகிழ்ச்சியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது பணிவான விருப்பம். நம் இதயங்களிலும் மனதிலும் நாம் உலக கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி ஒன்று கூடி, இயேசு கிறிஸ்துவுடனும் நம் குருமார்களுடனும் பிரார்த்திப்போம், அனைத்து மனிதகுலத்திற்குமான அமைதி, மன்னிப்பு மற்றும் அன்பின் செய்தி, ஏற்கும் திறன் உள்ள காதுகளில் விழுட்டும். அனைத்து மக்களும் மெய்பொருள் மற்றும் புரிதலின் ஒளிக்கு விழிப்படையட்டும்! ‘உன்னத இறைவனின் மகிமை போற்றப்படட்டும், பூமியில் மனிதர்களுக்கு அமைதியும், நன்மையும் உண்டாகட்டும்’ என்ற இறையடியார்களின் பக்தி கீதத்துடன் ஒவ்வொரு இருதயமும் பாடட்டும்.’”

ஒவ்வொரு நாளும் கிறிஸ்துமஸ் ஆக இருக்கட்டும்

ஶ்ரீ தயா மாதாவின் உரை

ஸ்ரீ தயா மாதா YSS/SRF இன் மூன்றாவது தலைவராக இருந்தார், 1955 முதல் 2010 இல் தான் மறையும் வரை அந்த பதவியில் பணியாற்றினார். இயேசு கிறிஸ்துவையும் பகவான் கிருஷ்ணரையும் பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் ஆழமான புரிதல் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி இங்கே அவர் பேசுகிறார், மேலும் SRF சர்வதேச தலைமையகத்தில் தனது முதல் கிறிஸ்துமஸை நினைவு கூர்கிறார்.

கிறிஸ்துமஸ் பருவத்திற்கான வழிகாட்டப்பட்ட தியானம்

ஶ்ரீ மிருணாளினி மாதாவின் உரை

2011 முதல் 2017 இல் தான் மறையும் வரை YSS / SRF இன் நான்காவது தலைவராக பணியாற்றிய ஸ்ரீ மிருணாளினி மாதா, டிசம்பர் 23, 2002 அன்று SRF சர்வதேச தலைமையகத்தில், வழி நடத்திய ஒரு நாள் முழுவதுமான கிறிஸ்துமஸ் தியானத்திலிருந்து சில பகுதிகள். (இந்த ஞானத்தையும் உத்வேகத்தையும் உள்ளுக்குள் ஆழமாக எடுத்துச் செல்ல உதவும் வகையில், சில குறுகிய மௌன காலங்கள் கடைப்பிடிக்கப்பட்டன.)

கலங்கரை விளக்கம்-சொத்து

உங்கள் தியானங்களை ஆழப்படுத்த வழிகள்

ஸ்வாமி பக்தானந்த கிரி

பரமஹம்ஸ யோகானந்தரின் நேரடி சீடரான சுவாமி பக்தானந்த கிரி, கலிபோர்னியாவின் ஹாலிவுட்டில் உள்ள ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் ஆலயத்தில் மூத்த சன்னியாசியாக 1971 முதல் 2005 இல் தான் மறையும் வரை பணியாற்றினார். அவர் SRF ஹாலிவுட் ஆசிரம மையத்தில் உள்ள இந்தியா ஹாலில் பல ஆண்டுகளாக தியானம் குறித்த வருடாந்திர வகுப்புகளை வழங்கினார். இதோ அவரது உரைகளிலிருந்து ஒரு ஆடியோ பகுதி.

இயங்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இதைப் பகிர