நினைவு கூரும் தின நீண்ட நேர தியானம்

ஞாயிற்றுக்கிழமை, மே 7, 2023

9:40 a.m.

– 4:00 p.m.

(IST)

நிகழ்வு பற்றி

ஸ்ரீ யுக்தேஸ்வரிடம் பயிற்சி பெறச் சென்றபோது அவர் கூறிய அறிவுரை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் கூறினார்: ‘நல்ல கூட்டாளிகளுடன் தியானம் செய். அவை உன் மனதின் பாலில் இருந்து ஆன்ம-அனுபூதி வெண்ணெயைக் கடைந்தெடுக்க உனக்கு உதவும். பால் உலக மாயை எனும் நீருடன் கலந்து அவற்றின் மேல் அது மிதக்க முடியாது. அந்த நயவஞ்சக நீரில் வெண்ணெய் எளிதில் மிதக்கிறது.’

— பரமஹம்ஸ யோகானந்தர்

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியின் அவதார தின (மே 10 புதன்கிழமை) சிறப்பு நாளை நினைவுகூரும் வகையில், ஆங்கிலத்தில் YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்பட்ட ஆறு மணி நேர ஆன்லைன் தியானம் நடைபெற்றது. இது சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து எழுச்சியூட்டும் வாசிப்புகள், கீதம் இசைத்தல் மற்றும் தியானம் நடைபெற்றது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தி செயலாக்கம் மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நிகழ்ச்சிப் படிவம் பின்வருமாறு:

  • அமர்வு I: 9:40 a.m. to 1:00 p.m.
  • இடைவேளை: 1:00 p.m. to 1:30 p.m.
  • அமர்வு II: 1:30 p.m. to 4:00 p.m.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி அவர்களை போற்றும் வகையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு நீண்ட தியானம், அவரது அவதார தின (புதன்கிழமை, மே 10) சிறப்பு நாளை நினைவுகூரும் வகையில், நமது பரம்குருவுடன் நமது உணர்வுநிலையை இசைவித்திருக்க நமக்கு உதவியது.

ஸ்வாமி ஸ்ரீ யூகத்தேஸ்வரின் ஆன்மீக பாரம்பரியமான கிரியா யோக போதனைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த புனித சந்தர்ப்பத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் மரபு இருந்து வருகிறது. நமது அருட்பேறு பெற்ற குருதேவரின் ஆன்ம-அனுபூதி போதனைகளை ஊக்குவிக்கவும் பரப்பவும் உங்கள் மதிப்புமிக்க காணிக்கை பயன்படுத்தப்படும்.

நீங்கள் காணிக்கை செலுத்த விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர