சுவாமி சிதானந்த கிரியின் பரமஹம்ஸ யோகானந்தரின் சுதந்திரம் பற்றிய கருத்து

6 அக்டோபர், 2020

அக்டோபர் 2020-ல் பரமஹம்ஸ யோகானந்தரின் முதல் உரை அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. அக்டோபர் 6ஆம் நாள் 1920-ல் “சமய விஞ்ஞானம்” எனும் தலைப்பில் போஸ்டனில் உள்ள சர்வதேச காங்கிரசில் தாராளவாதிகளிடையே உரையாற்றினார். அங்கு கூடியிருந்தவர்கள் மத சுதந்திரம் கோரி அமெரிக்காவிற்கு 300 ஆண்டுகளுக்கு முன் வந்த யாத்திரிகர்களைப் பெருமைப்படுத்தும் பொருட்டு “உண்மையான மத சுதந்திரத்தின் பொருள்” எனும் தலைப்பில் விவாதிக்கத் தொடங்கினார்கள்.

19 செப்டம்பர் 2020-ல் அவர் ஆற்றிய உரையில் இந்தப் பகுதியில் (பரமஹம்ஸாஜி நூறாவது ஆண்டின் மேற்கத்திய நாடுகளின் வருகையின் நினைவாக) YSS/SRF தலைவரான ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி எவ்வாறு பரமஹம்ஸாஜியின் சுதந்திரத்திற்கான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறார் என்பது தெரிகின்றது. உண்மையான சுதந்திரம் என்பதன் பொருள் ஆன்மாவை உடலுடன் விடுவிப்பதை அடையாளம் காணும் போதனைகளான கிரியா யோகாவை அறிவியல் கண்ணோட்டத்தின் மூலம் புரிந்து கொள்வதும் மற்றும் உலகளாவிய தியான முறைகள் மூலம் உணர்ந்து கொள்வதும் ஆகும்.

சுவாமி சிதானந்த கிரியின் பரமஹம்ஸ யோகானந்தரின் சுதந்திரம் பற்றிய கருத்து
Play Video

இதைப் பகிர