ஸ்ரீ மிருணாளினி மாதாவின் ஆலோசனை

முதலில் யோகதா சத்சங்க இதழில் அச்சிடப்பட்டது

“பிரார்த்தனையின் சக்தி”

மனிதகுலம் படிப்படியாக அதிக அறிவொளி பெற்றயுகமாக விழித்தெழும் போது, இந்த உலகம் நாம் விட்டுச் செல்லும் கீழ்நிலையுகத்தின் வரம்புக்குட்பட்ட மனப்போக்குகளைக் களைவதற்குப் போராடுவதால்,அது கொந்தளிப்பான காலகட்டங்களைக் கடந்து செல்லும் என்று பரமஹம்ஸ யோகானந்தர் முன்னறிவித்தார். அவர், நமது சகாப்தம் இருளை மறைந்து போகச் செய்கின்ற அதிகரிக்கும் ஆன்ம ஒளியில் ஒன்று என்று நமக்கு உறுதியளித்துள்ளார். இருப்பினும் இந்த ஜடவுலகில் வாழ்வின் தவிர்க்க முடியாத ஏற்றத் தாழ்வுகளை நாம் அனுபவிக்கும் போதும், வெகுஜன கர்மவினையின் குறுக்குவெட்டுகளில் சிக்கியிருக்கும் அப்பாவி ஆன்மாக்களின் துன்பத்தைப் பார்க்கும் போதும், நாம் அடிக்கடி எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்களாக உணர்கிறோம். அப்படிப்பட்ட சமயங்களில், “ஏன்?” என்று இதயம் அலறும்போதும், நமது மனித புரிதல் போதுமான பதிலைக் காணாதபோதும், அதன் வரையறைகுட்பட்ட நோக்கத்திற்கு அப்பால், மாயையின் அனைத்துப் புயல்களுக்கு மத்தியிலும் நமது பாதுகாப்பின் புகலிடமாக இருக்கும் பரம்பொருளை நாம் காண வேண்டியவர்களாகிறோம்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இறைவனின் சிந்தனையிலிருந்து தோன்றியுள்ளன. நாம் அவனுடைய குழந்தைகள், நமது எண்ணங்களையும் செயல்களையும் அவனுடைய அனைத்தையும் நிறைவேற்றும் விருப்பத்துடன் இணைப்பதன் மூலம், நாம் உயிர்ச்சம் வாய்ந்த தன்மைகொண்ட மாயையிலிருந்து விடுபடுவதோடு, இந்த உலகில் நன்மைக்கான ஒரு சக்தியாக விளங்குவதற்காக நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கும் உள்ளார்ந்த ஆற்றலை மெய்யாக்குகிறோம். ஆன்மாவின் இயற்கையான விசுவாசம், நம்பிக்கை மற்றும் நிபந்தனையின்றி நேசிக்கப்பட்டுக் கொண்டிருப்பது குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றிலிருந்து வெளிப்பட்டுப் பாயும் பிரார்த்தனை, இறைவனின் குணப்படுத்தும் சக்தியெனும் வரம்பற்ற நீர்த்தேக்கத்தின் மீது செயலாற்றுகிறது. உண்மையான பக்தியின் வேகத்துடனும், நமது இதயங்களின் நேர்மையுடனும், ஒருமுகப்பட்ட சிந்தனையிலிருந்து வலிமையால் நமது பிரார்த்தனையை உச்ச அளவில் செறிவூட்டியபடி நாம் அவனுடன் உள்முகமாக உரையாடும் போது, அது படைப்பாற்றல் கொண்ட தெய்வீகப் பேருணர்வில் மெய்யுணர்வாகிறது. நாம் அகக்காட்சி காண்கின்ற உதவியானது இறைவனின் சர்வ வல்லமையால் வலுவூட்டப்பட்டு, நம் வாழ்விலும் மற்றவர்களின் வாழ்விலும் நேர்மறையான முடிவுகளுக்காக உருக்கொள்ளும் சக்தியைப் பெறுகிறது. “பெரும்பாலான மனிதர்கள் நிகழ்வுகளின் போக்கை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் கருதுகின்றனர்,” என்று குருதேவர் எங்களிடம் கூறினார். “பிரார்த்தனை மூலம் என்ன முழுமைமான மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை.”பிரார்த்தனை, தேவைப்படும் நேரத்தில் நமது உலகக் குடும்பத்தை நாம் அடைய முடியக்கூடிய மிகச் சிறந்த மற்றும் உடனடி வழிகளில் ஒன்றாகும். அந்த உணர்வு நிலையில், துன்பத்தை உண்டாக்கும் ஒரு சூழ்நிலையைப் பற்றி நாம் அறியும்போது, நம்முடைய முதல் எதிர்வினை இறைவனை எப்போதும் பிரார்த்தனை செய்வதாக இருக்கட்டும்- காக்கும் அன்பில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சூழ்ந்திருப்பதற்காக. அவ்வாறு செய்வதன் மூலம், அறச்சிந்தனையை மனித முயற்சிகளால் கொண்டு வரப்படும் உதவியினுள் ஒரு உயர்ந்த சக்தியை செலுத்தும் வழிகளில் இறைவனுடைய ஆசிகள் பாய்வதற்கான வழியை விரிவுபடுத்துகிறோம்; மற்றும் அவனது அமைதி மற்றும் உறுதிப்பாட்டிற்கு நாம் நமது இதயங்களைத் திறந்து வக்கின்றோம்.

இறைவனுடனான ஆழ்ந்த அகமுகத் தொடர்பு, சந்தேகம் மற்றும் அமைதியின்மை முதலான சஞ்சலங்களை அமைதிப்படுத்தும் மற்றும் மற்றவர்களுக்கான நமது பிரார்த்தனைகளின் பலனை பலப்படுத்துகிறது, அவ்வாறே அன்பு, சத்தியம் எனும் இறைவனின் சட்டங்களை அடியொற்றி வாழவிழையும் நமது மன ஒருமையையும்வலுப்படுத்தும். குருதேவர் நமக்கு நினைவூட்டியது போல்: “ஒரு ஆன்மாவின் நற்குணம் லட்சக்கணக்கான மக்களின் வெகுஜன கர்மாவை திறம்பட சமநிலைப்படுத்தக்கூடும்.”நாம் ஒத்த எண்ணம் கொண்ட பிற ஆன்மாக்களுடன் இணையும்போது நமது தனிப்பட்ட பிரார்த்தனைகளின் தாக்கம் எந்த அளவு அதிகமாகிறது என்பதையும் குருதேவர் அறிந்திருந்ததால், அவர் தனது உலகளாவிய சமுதாய சேவையின் ஒரு பகுதியாக உலகளாவிய பிரார்த்தனைக் குழுவை நிறுவினார். அவருடைய ஆசிரமங்களில் உள்ள நாங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் செய்வது போல், சிறப்புத் தேவையிலுள்ள இறைவனது குழந்தைகள் அனைவரும் இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான இந்த ஒன்றுபட்ட முயற்சியில் உங்கள் சொந்த தினசரி பிரார்த்தனைகளின் மூலம் பங்கேற்குமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய பிரார்த்தனையின் மூலம், ஒவ்வொரு நேர்மறையான எண்ணம் மற்றும் செயலின் மூலம், இந்த உலகில் அனைவருக்கும் ஒப்புயர்வற்ற குணப்படுத்துவராகவும், உதவியைக் கொணர்பவராகவும் விளங்கும் இறைவனின் ஒளியையும் அன்பையும் தீவிரப்படுத்த நீங்கள் உதவிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

“அன்றாட வாழ்வில் கிரியா யோகத்தின் ஆசீர்வாதங்கள்”

யோகதா சத்சங்க இதழிலிருந்து ஒரு பகுதி]

நாம் எத்தனையோ வேதனைகளையும், துயரங்களையும், துன்பங்களையும், கொந்தளிப்பையும் காண்கின்ற இருமைகளையும்,சார்புகளையும் கொண்ட இவ்வுலகில் எப்படி வாழ்வது என்பது பற்றிய விஞ்ஞானப்பூர்வ அறிவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. நம் வாழ்வில் அதிக பொருள் செழிப்பு மற்றும் அதிக உலகியல் “இயந்திர நுணுக்கங்களைக்” கொண்டு வருவதற்கு மட்டும் நமக்கு ஒரு அறிவியல் தேவைப்படவில்லை, ஆனால் வாழ்வதற்கான விஞ்ஞானம் தேவைப்படுகிறது. அதுதான் மனிதகுலத்திடம் இல்லாமலிருக்கிறது. இது இன்று நம் உலகில் அனைத்துத் தொந்தரவுகளையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதைத்தான் நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் தனது கிரியா யோக போதனைகளில் மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு வந்தார்.

காலங்காலமாக, வாழும் வகைக்கான அறிவியல், மனிதகுலத்திற்கு மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனின் இயல்பு எல்லையற்ற பொறுமையான ஒன்றாக இருக்க வேண்டும், ஏனென்றால் பொறுமையாக நமக்கு நினைவூட்டியபடி இருக்கும் இறைவன் (இவரைப் பற்றி நாம் தெய்வீகத்தாய் என்று பேசுகிறோம்) “இது என் உலகம்; நான் அதை உருவாக்கினேன். நான் அதை நன்றாகச் செய்தேன், நான் அதை அழகானதாகச் செய்தேன். நான் உங்கள் அனைவரையும் படைத்தேன். நான் உங்களை நற்குணம் உடையவர்களாக உருவாக்கினேன். உங்களை அழகானவர்களாகப் படைத்தேன். நான் படைத்திருக்கிற, நான் மட்டுமே பாதுகாக்கின்ற இந்த உலகத்தை அழகாக வைத்துக் கொள்ளவும், உங்கள் வாழ்க்கைகளை என்னுடன் இணக்கமாக வைத்துக் கொள்ளவும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்கு மறைநூலில் கூறியுருக்கிறேன், அவதாரங்கள் மற்றும் மகான்களின் குரல்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் உங்களுக்கு எடுத்துரைத்திருக்கிறேன். அதன் காரணமாக இந்த பூமியில் என் அழகையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் செழுமையையும் நீங்கள் வெளிக் கொணர்கிறீர்கள் இருப்பினும் நீங்கள் இந்த உலகை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்?-

பல வழிகளில், நவீன கலாச்சாரம், ஒரு பெரிய மாய சக்தியுடன், இறைவனை அகற்றவும், அவனை நிராகரிக்கவும், பிரபஞ்சம் குறித்த “அறிவியல் ரீதியான” பார்வையில் இருந்தும் மற்றும் அன்றாட வாழ்க்கையிலிருந்தும் முயற்சித்து விட்டது. ஆயினும், மனிதன் இறைவனது எல்லையற்ற சிந்தனையால் மட்டுமே உருவாக்கப்பட்டு நிலைத்து நிற்கும் இந்த படைப்பில் இறைவனை ஒப்பற்ற மெய்ம்மையான ஒப்புக் கொள்ள மறுக்கும் வரையில் உலகம் நிரந்தரமான மகிழ்ச்சியையோ அமைதியையோ துன்பத்திலிருந்து விடுதலையையோ ஒருபோதும் அறியாது.

நமது துன்பத்திற்கு காரணம்

கஷ்டப்படும் அனைவரின் மனங்களிலும். “இறைவன் ஒருவன் இருந்தால், அவர் ஏன் இந்த துன்பத்தை அனுமதிக்கிறார்? ஏன் இந்தத்துயரம் என் வாழ்வில் வந்தது? இறைவன் என் பிரார்த்தனைகளைக் கேட்கிறாரா?” என்ற கேள்வி மற்றும் சந்தேகம் எழுகின்ற ஒருநேரம் நாம் சிந்திக்கும்போது வருகின்றது. பயங்கரமான பேரழிவுகளாலும், போர்களாலும், விபத்துக்களாலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, “இறைவன் எங்கே? மனிதகுலத்தின் ஒரு பெரிய கூட்டமாக அவன் நம்மை இந்த பிரச்சனைகள் நிறைந்த உலகத்தில் தள்ளிவிட்டு பின்வாங்கிவிட்டானா? என நம்மால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

இறைவன் இருக்கிறான். அவன் கேட்கிறான், அவன் பதிலளிக்கிறான். ஞானிகள் மற்றும் தெய்வீக ஆசிரியர்களின் வாழ்க்கைகளில் அது எடுத்துக்காட்டாக வெளிப்படுவதை நாம் காண்கிறோம். அந்த எல்லையற்ற உணர்வு நிலையை ஒரு கணம் தொட, சாதாரண வாழ்வில் இருக்கும் ஒருவர் கூட, ஒரு வேளை சில பிரார்த்தனைகள் பதிலளிக்கப்பட்டால், ஒரு கணநேரக் காட்சியை அடைந்து: “ஆ,இறைவன் உண்மையானவன்; அவன் பதிலளிக்கிறான்!” நவீன மேலோட்டமான சிந்தனை இது. “அறிவியல் ஆதாரமற்றது” என்று நமக்கு சொல்கிறது. ஆனால் நமது குருதேவர், பரமஹம்ஸ யோகானந்தர் போன்ற மகான்கள், வாழ்க்கையைப் பற்றிய நமது எல்லா கேள்விகளுக்கும் மிகச்சரியாக பதிலளிக்கும் ஒரு ஆழமான அறிவியல் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். இதுதான் யோக விஞ்ஞானம்.

இறைவன் இருக்கிறான். அவன் கேட்கிறான், அவர் பதிலளிக்கிறான். ஞானிகள் மற்றும் தெய்வீக ஆசிரியர்களின் வாழ்க்கைகளில் அது எடுத்துக்காட்டாக வெளிப்படுவதை நாம் காண்கிறோம். அந்த எல்லையற்ற உணர்வு நிலையை ஒரு கணம் தொட, சாதாரண வாழ்வில் இருக்கும் ஒருவர் கூட, ஒரு வேளை சில பிரார்த்தனைகள் பதிலளிக்கப்பட்டால், ஒரு கணநேரக் காட்சியை அடைந்து: “ஆ,இறைவன் உண்மையானவன்; அவ பதிலளிக்கிறான்!” நவீன மேலோட்டமான சிந்தனை இது “அறிவியல் ஆதாரமற்றது” என்று நமக்கு சொல்கிறது. ஆனால் நமது குருதேவர், பரமஹம்ஸ யோகானந்தர் போன்ற மகான்கள், வாழ்க்கையைப் பற்றிய நமது எல்லா கேள்விகளுக்கும் மிகச்சரியாக பதிலளிக்கும் ஒரு ஆழமான அறிவியல் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். இதுதான் யோக விஞ்ஞானம்.

ஆனால் என்ன நடக்கின்றது? அந்த மாயையில் மனிதன் சிக்கிக் கொண்டுவிடுகிறான். பரமஹன்சாஜி மாயாவை பிரபஞ்ச அறிதுயில்நிலை என்று குறிப்பிடுவார். படைப்பின் நாடகத்தை நடிப்பதற்காக, இந்த உலகம் உண்மையானது, நாம் அவனிடமிருந்து பிரிந்துள்ளோம் என்று நம் உணர்வுநிலையில் இறைவன் ஆழமாகப்பதியவைத்துக் கொண்டிருக்கிறார். அறிவுறுத்துகிறார். அந்த தூண்டுதல் மிகவும் வலுவானதாக இருப்பதால், நாம் அதை நம்புகிறோம் – அண்ட உருவாக்கத்தினுடைய செயல்முறையின் இறுதி விளைவான பௌதீக உலகம் மற்றும் நமது பலவீனமான ஸ்தூல உடல்கள், ஆகியவற்றை மட்டுமே நாம் காண்கிறோம். இறைவனிடத்தில் விளங்கும் ஆதாரமூலம் மற்றும் நமது பேரின்பம் நிறைந்த, அழியாத தெய்வீக இயல்பு, அவனுடனான பிரிக்க முடியாத இணைப்பு ஆகியவற்றை நாம் மறந்து விடுகிறோம்;அதனால்தான் நாம் துன்பப்பட ஆரம்பிக்கிறோம்.

ஆனால் தப்பித்துக் கொள்ள ஒரு வழி இருக்கிறது. இறைவன் தன்னையே இந்தப் பெருந்திரளாகப் படைத்துக் கொண்டபோது அவன் நடைமுறைப்படுத்திய பிரபஞ்ச விதிகள்-அவன் தனது சுயத்திலிருந்து வெளிப்படுத்தி, தனிப்படுத்தப்ட்ட உயிரினங்கள் மற்றும் இயற்கையின் இந்த முடிவிலியை தன்னிடமிருந்து விலக்கியதாகத் தோற்றமளித்த போது-அதே தெய்வீக விதிகள் தலைகீழாக செயல்படுகின்றன. மேலும் அந்த அறிவைப் பயன்படுத்துவதே யோக அறிவியலின் சாரமும், அடிப்படை ஆதாரமும் ஆகும்..

தியானம் மற்றும் கிரியா யோகா பற்றி மேலும் அறிக

இதைப் பகிர