ஏகாந்தவாச தியான நிகழ்வுகள்

“இறைவனுடனான தனிமை உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவுக்கு என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று நீங்கள் வியப்படையலாம்.... மெளனத்தின் வாயில்கள் மூலம் ஞானம் மற்றும் அமைதியின் குணமளிக்கும் சூரியன் உங்கள் மீது பிரகாசிக்கும்.”

—ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஒய் எஸ் எஸ் ஏகாந்தவாச நிகழ்வுகள் மற்றும் எப்படி-வாழ-வேண்டும் ஏகாந்தவாச நிகழ்ச்சிகள்

How-to-Live Retreat, Ranchi

ஆன்மீக புதுப்பித்தலைத் நாடுகின்ற, இறை உணர்வு நிலையை ஆழப்படுத்தவும் மற்றும் அன்றாட வாழ்க்கை அழுத்தங்களிலிருந்து, அது ஒரு சில நாட்கள் மட்டுமே என்றாலும் கூட, விலகிச் செல்ல விரும்பும் எவரும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் எப்படி-வாழ-வேண்டும் ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். பரமஹம்ஸ யோகானந்தரின் வார்த்தைகளில் கூறுவதானால், “எல்லையற்றவரால் மறுவூட்டப்படுதல் என்ற பிரத்தியேக நோக்கத்திற்காக [நீங்கள்] அணுகக்கூடிய மெளனம் எனும் ஒரு டைனமோ.” வை ஏகாந்தவாச தினசரி நிகழ்ச்சிகள் அளிக்கின்றன.

ஏகாந்தவாச செயல்பாடுகள்

Retreat, Igatpuriஏகாந்தவாச நிகழ்வுகளில் தினசரி கூட்டு தியானங்கள், ஒய் எஸ் எஸ் சக்தியூட்டும் உடற் பயிற்சிகள், உத்வேகமூட்டும் வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள், குருதேவர் பற்றிய காணொலி நிகழ்ச்சி மற்றும் வாய்ப்பிருந்தால் அருகிலுள்ள ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் சேவைப் பணிகள் ஆகியவை அடங்கும். அழகான ஏகாந்தவாச மையச் சூழலில் ஓய்வெடுக்கவும் இறை இருப்பை உணரவும் போதுமான ஓய்வு நேரம் கிடைக்கிறது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா புத்தகங்கள் மற்றும் பதிவுகள் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கும் படிப்பதற்கும் கிடைக்கின்றன, மேலும் ஏகாந்தவாச தியான மந்திர் தியானம் செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

வார இறுதி ஏகாந்தவாச நிகழ்ச்சிகள், ஒய் எஸ் எஸ் சன்னியாசப் பரம்பரை சன்னியாசிகளால் வழி நடத்தப்படும் ஒய் எஸ் எஸ் போதனைகள் மற்றும் தியான உத்திகள் குறித்து நடத்தப்படும் தீவிர கவனம் செலுத்தப்படும் வகுப்பு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. ஆண்டு முழுவதும் பல வார இறுதி நாட்களில் ஒய்.எஸ்.எஸ் ஏகாந்தவாச மையங்களிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களிலும் நடக்க ஏற்பாடு செய்யப்படுகின்றன.

ஏகாந்தவாச அனுபவத்தின் பலன்களை அதிகப்படுத்த, பங்கேற்பாளர்கள் ஏகாந்தவாச நிகழ்ச்சி முழுவதிலும் பங்கேற்க வேண்டும் என்றும், அங்கே தங்கியிருக்கும் நேரத்தில் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் அனைத்து பக்தர்களுக்கும் கலந்து கொள்ளலாம்: ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான தம்பதிகள். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக தங்கவைக்கப்படுவார்கள்.

குருதேவருடனான தங்கள் இணக்கத்தை ஆழப்படுத்தவும், தங்கள் அகச் சூழலை அமைத்துக் கொள்ளவும் ஏகாந்த வாச நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள் மெளனம் கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

இந்த ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பங்கேற்க விரும்பினால், உங்கள் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாடப் பதிவு எண், வயது மற்றும் நீங்கள் வரப் போகும் மற்றும் புறப்படும் தேதிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரமம் / கேந்திரா / சாதனாலயாவுக்கு நிகழ்ச்சித் தேதிக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே தெரிவிக்கவும். பின்னர் உங்கள் பதிவு பற்றிய உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். நீங்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் இருக்கலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரமம் / கேந்திரா / சாதனாலயாவைத் தொடர்பு கொள்ளவும்.

குருதேவர் கூறினார்: “எல்லா கடமைகளிலும் முதன்மையானது இறைவனை நினைவில் நிறுத்துவதாகும். காலையில் செய்ய வேண்டிய முதல் பணி, அவனைத் தியானித்து, எப்படி உங்கள் வாழ்க்கையை அவனுடைய சேவைக்கு அளிக்கலாம் என்று சிந்திப்பதே, அதன்மூலம் நாள் முழுவதும் நீங்கள் அவனுடைய ஆனந்தத்தால் நிறைந்திருப்பீர்கள்.”

எதிர்வரும் ஏகாந்தவாச தியான நிகழ்வுகள்

நவம்பர் 2023 — டிசம்பர் 2024 இல் YSS சன்னியாசிகள் நடத்தும் ஏகாந்த வாச நிகழ்ச்சிகளின் அட்டவணையைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

ஒய் எஸ் எஸ் ஏகாந்தவாச தியான மையங்கள்

Shimla retreat Meditation centre, Himachal Pradesh

யோகதா சத்சங்க ஆனந்த ஷிகார் சாதனாலயம், சிம்லா
பனோதி பஹால் ரோடு
கிராமம்: பன்டி, சிம்லா 171011
ஹிமாசல பிரதேசம்
தொலைபேசி எண்:
(0177) 6521788, 09418638808, 09459051087
E-mail: ysdk.shimla@gmail.com
எவ்வாறு சென்றடைவது

Chennai retreat

ஒய் எஸ் எஸ் சென்னை ரிட்ரீட்
கிராமம்: மண்ணூர்,  வளர்புரம் – அஞ்சல்
தாலுகா: ஸ்ரீபெரும்புதூர்
மாவட்டம்: காஞ்சிபுரம் 602105, தமிழ்நாடு
தொலைபேசி எண்கள்: 0944439909, 09600048364, 08939281905

மின்னஞ்சல்: ysschennairetreat@gmail.com
எவ்வாறு சென்றடைவது

Sadhanalaya, Pune

யோகதா சத்சங்க சரோவர் சாதனாலயம் – பூனா
பன்சேத் அணை-க்கு 12வது மைல்கல்
பன்சேத் ரோடு, கானாபூர் கிராமம்
நந்தி மஹால் எதிரில், சாந்திவனம் ரிசார்ட்டிற்கு ஒரு நிறுத்தம் முன்பு
கானாபூர் கிராமத்திற்கு 2.5 கி.மீ முன்னதாக
மாவட்டம்: பூனா, மஹாராஷ்டிரா – 411025
தொலைபேசி எண்கள்: 9730907093, 9881240512
மின்னஞ்சல்: puneretreat@ysscenters.org
எவ்வாறு சென்றடைவது

Sadhanalaya-meditation centre, Igatpuri, Nashik

பரமஹம்ஸ யோகானந்த சாதனாலயம், இகத்புரி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
யோகானந்தபுரம்
இகத்புரி 422403
மாவட்டம்: நாசிக், மஹாராஷ்டிரா
தொலைபேசி எண்கள்: 09226618554, 09823459145
மின்னஞ்சல்: ysdk.igatpuri@gmail.com
எவ்வாறு சென்றடைவது

Dhyana Mandir, Dihika (Asansol)

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – திஹிகா
தாமோதர் ரயில் கேட்டிற்கு அருகே
தாமோதர்
தபால் அலுவலகம்: சூரஜ்நகர்
மாவட்டம்: பர்துவான் 713361
மேற்கு வங்காளம்
தொலைபேசி எண்கள்: 09163146565, 09163146566
மின்னஞ்சல்: ysdk.dihika@gmail.com
எவ்வாறு சென்றடைவது

ashram Puri

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – பூரி
ஒடிசா பேக்கரிக்கு அருகே
வாட்டர் வொர்க்ஸ் ரோடு
பூரி 752002
தொலைபேசி எண்கள்: (06752) 233272, 09778373452
மின்னஞ்சல்: ysdk.puri@gmail.com
எவ்வாறு சென்றடைவது

Meditation temple Serampore, Howrah

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – செராம்பூர்
57, நேதாஜி சுபா‌ஸ் அவெனியூ
செராம்பூர் 712201
மாவட்டம்: ஹூக்ளி
மேற்கு வங்காளம்
தொலைபேசி எண்கள்: (033) 26626615, 08420061454
மின்னஞ்சல்: yssdak@yssi.org
எவ்வாறு சென்றடைவது

Ashram Telary, West Bengal

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – தெலாரி
கிராமம்: தெலாரி
பாஹிர்குஞ்சா 743318
மாவட்டம்: தெற்கு 24 பாரகன்ஸ்
மேற்கு வங்காளம்
தொலைபேசி எண்கள்: 09831849431
மின்னஞ்சல்: yssdak@yssi.org
எவ்வாறு சென்றடைவது

Coimbatore retreat

யோகதா சத்சங்க தியான கேந்திரம் – கோயம்புத்தூர்
பெர்க்ஸ் பள்ளி வளாகம்
திருச்சி ரோடு, பிருந்தாவனம் காலனி
சிங்கநல்லூர், கோயம்புத்தூர் 641015
தமிழ்நாடு
தொலைபேசி எண்கள்: 09344098058, 09894664044
மின்னஞ்சல்: ysdk.coimbatore@gmail.com
எவ்வாறு சென்றடைவது

இந்த ஏகாந்தவாசம் நிகழ்ச்சியில் அனைத்து பக்தர்களுக்கும் கலந்து கொள்ளலாம்: ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான தம்பதிகள். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக தங்கவைக்கப்படுவார்கள். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருமணமான தம்பதிகளுக்கு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

இதைப் பகிர