நினைவுநாள் நீண்ட தியானம்

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 6

6:10 காலை

– 12:30 மதியம்

(IST)

நிகழ்வு பற்றி

இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.

— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரின் மகாசமாதி திவஸ்களை நினைவுகூரும் வகையில், மார்ச் 6, ஞாயிற்றுக்கிழமை காலை 6:10 மணி முதல், பிற்பகல் 12:30 மணி வரை ஆறு மணி நேர தியானம் நடைபெற்றது.(ஐ.எஸ்.டி.). இது ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒய்.எஸ்.எஸ் சன்னியாசிகளால் வழிநடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது:

  • அமர்வு 1: காலை 6:10. முதல் 9:30 வரை (IST)
  • இடைவேளை: காலை 9:30 முதல் 10:00 வரை (IST)
  • அமர்வு 2: காலை 10:00 முதல் மதியம் 12:30 வரை

தியானம், சக்தியூட்டும் உடற் பயிற்சிகளுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகமூட்டும் வாசிப்பு, கீத நேரங்கள் மற்றும் தியானம். அது யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு இறுதிப் பிரார்த்தனையுடன் நிறைவடைந்தது.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர