லாஹிரி மகாசயர் அவதார தினம்

நினைவு தின ஆன்லைன் தியானம்

செப்டம்பர் 30, 2023 சனிக்கிழமை

காலை 6.30 மணி

– காலை 8.00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

ஊக்கத்துடன் நாடும் எண்ணற்றோருக்கு கிரியா யோகத்தின் மூலமாக ஆத்ம சாந்தியை அளிப்பதற்கு நீ தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாய். குடும்ப பந்தங்களாலும் பாரமான லோகாயதக் கடமைகளாலும் சுமைப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானவர்கள், அவர்களைப் போன்ற இல்லறத்தானான உன்னிடத்திலிருந்து புது தைரியத்தைப் பெறுவார்கள்.

— மகாவதார பாபாஜி லாஹிரி மஹாசயரிடம் கூறுகிறார் (ஒரு யோகியின் சுயசரிதம்)

செப்டம்பர் 30, சனிக்கிழமையன்று, ஸ்ரீ ஸ்ரீ லஹிரி மஹாசாயரின் அவிர்பவ் திவஸை (பிறந்த தினத்தை) ஒரு YSS சன்னியாசி தலைமையில் ஒரு சிறப்பு தியானத்துடன் நினைவுகூர்ந்தோம். இந்த நினைவு நிகழ்ச்சி ஆரம்ப பிரார்த்தனையுடன் தொடங்கியது, மேலும் வாசிப்பு, கீதமிசைத்தல் மற்றும் தியானத்தின் ஒரு காலகட்டத்தை உள்ளடக்கியது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவுப் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சிக்கு கூடுதலாக, பல்வேறு நேரடி நினைவு நிகழ்ச்சிகளும் இந்த சந்தர்ப்பத்தில் நமது ஆசிரமங்கள், மையங்கள் மற்றும் மண்டலிகளில் நடத்தப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் வழக்க முறையான கொடை அளிக்க விரும்பினால், கீழே பகிரப்பட்ட இணைப்பு வழியாக நம் வலைத்தளத்தைப் பார்வையிடவும். ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மஹாசயரின் சிறப்பு அருளுக்கும் ஆசிகளுக்குமான உங்கள் நன்றியின் அடையாளமாக, உங்கள் காணிக்கையை நாங்கள் மனமார்ந்த நன்றியுடன் பெற்றுக் கொள்கிறோம்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர