கிரியா யோகத்தில் தஞ்சமடைதல் – ஸ்வாமி சிதானந்தகிரியின் மூன்று வீடியோக்கள்

10 மார்ச், 2023

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் ஆன்லைன் “சங்கம் 2023” இல் கலந்து கொள்ள முடிந்ததா?

YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தகிரி தலைமையில், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் குறித்த முழு ஐந்து நாள் நிகழ்ச்சி பிப்ரவரியில் ஹைதராபாத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது – இது இன்னும் YSS வலைத்தளம் மற்றும் YSS யூடியூப்சேனலில் கிடைக்கிறது.

ஸ்வாமி சிதானந்தகிரி வழங்கிய சங்கத்தின் தொடக்க மற்றும் நிறைவு உரைகளின் வீடியோ பதிவுகளையும், நிகழ்ச்சியின்போது அவர் வழிநடத்திய மூன்று மணி நேர தியானத்தையும் இந்த பக்கத்தில் காணலாம். இந்த சிறப்பு நிகழ்வுகளிலிருந்து உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலை நடைமுறைப் படுத்துவதில் ஆழமாக மூழ்குவதற்கு இந்த வளத்தைப் பயன்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.

தொடக்க உரை

கிரியா யோகப் பாதையின் பன்மடங்கு ஆசீர்வாதங்களுடன் சரணம் என்ற கருத்தாக்கத்தை – தஞ்சம் மற்றும் புகலிடத்துடன் – நாம் எவ்வாறு தொடர்புபடுத்தலாம் என்பதை இந்த தொடக்க உரை எடுத்துக்காட்டுகிறது. ஸ்வாமி சிதானந்தகிரி விளக்குவது போல, சங்கத்தின் கருப்பொருள்களில் ஒன்று கிரியா யோக சரணம் ஆகும். “நமது தெய்வீக மற்றும் மரியாதைக்குரிய பரமஹம்ஸர் போன்ற ஒரு சத்குருவின் ஆசீர்வாதத்துடன் பயிற்சி செய்யும்போது கிரியா யோக தியானத்தால் கிடைக்கும் தெய்வீக உணர்வில் மிகுந்த புகலிடமும் நித்திய அடைக்கலமும் பெறமுடியும்.”

மூன்று மணி நேர தியானம்

வழிகாட்டப்பட்ட காட்சிப்படுத்தல்கள் மற்றும் உறுதிமொழிகள் எடுத்தல் மற்றும் பாடல் இசைத்தல் உள்ளடக்கிய மூன்று மணிநேர தியானத்தை வழிநடத்தும் போது ஸ்வாமி சிதானந்தகிரியுடன் சேர்ந்து, மௌன தியானத்தில் ஆன்மாவின் அமைதி மற்றும் அசைவற்ற நிலையில் பிரக்ஞையை மூழ்கடியுங்கள்.

நிறைவு உரை

சங்கத்தில் நடந்த தனது இறுதி நிகழ்ச்சியில், ஸ்வாமி சிதானந்தகிரி அவர்கள் தனது தொடக்க உரையில் அறிமுகப்படுத்திய மிகவும் உயர்ந்த மற்றும் பரபரப்பான யோசனையை விவரிக்கிறார், நாம் ஒவ்வொருவரும் “இந்திய ஆன்மீகத்தின் பொற்காலத்திற்கும் வளர்ந்து வரும் உலகளாவிய ஆன்மீக நாகரிகத்திற்கும் இடையில் ஒரு வாழும் இணைப்பாக” மாற முடியும் என்பதை விளக்குகிறார். தியான உத்திகள் மற்றும் உலகளாவிய கிரியா யோகப் பாதையின் கொள்கைகளைப் பயன்படுத்தி எவ்வாறு வாழ்ந்து நாம் நம் வாழ்க்கையை உயர்த்தலாம் மற்றும் ஒளிரச் செய்யலாம் – நமது மகத்தான நன்மைக்கும் உலகின் நன்மைக்கும்.

இதைப் பகிர