ஸ்வாமி சிதானந்த கிரி எழுதிய “ஹௌ யோகீஸ் கான்டேக்ட் த ஸோர்ஸ் ஆஃப் செல்ஃப்-எஸ்டீம்”

ஜூன் 9, 2023

இந்த வலைப்பதிவு, வரவிருக்கும் 2023 யோகதா சத்சங்க. இதழில் வெளியிடப்படவுள்ள, YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி எழுதிய “மெயின்டைனிங் அவர் டிவைன் கனெக்ஷன் வைல் லிவிங் இன் த மெடீரியல் வர்ல்டு” என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

நாம் தகவல்கள் பெறுவதற்கான முதன்மை வழி புலன்கள்: நாம் விஷயங்களைப் பார்க்கிறோம், விஷயங்களைக் கேட்கிறோம், சுவைக்கிறோம், தொடுகிறோம், உணர்கிறோம் – இது நம் உள் உணர்வுக்கும் வெளி உலகத்திற்கும் இடையிலான பரிமாற்றம்.

இது ஒரு அனிச்சையான அல்லது உணர்வுபூர்வ செயல்முறையாக இருக்கலாம். யோகி அதை உணர்வுபூர்வமாக்க விரும்புகிறார், ஏனெனில் யோகி – அந்த பக்தர் – நம் உணர்வின் மீதான உலகத்தின் ஆளுமையை கட்டுப்படுத்தாதனால் ஏற்படும் துன்பமிக்க, துயரமான விளைவுகளை அறிந்துள்ளார்.

பலரிடம், தனிமை உணர்வு, தகுதியற்றவன், நேசிக்கப்படாதவன் என்ற உணர்வு இருக்கிறது. இத்தகைய பெரும் தனிமை உணர்வுக்கு என்ன காரணம்? இவர்கள் அனைவருக்குள்ளும் ஏன் இவ்வளவு பெரிய வெறுமையான “வெற்றிடம்”?

பதில் மிகவும் எளிது. மக்கள் தனிமையில் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் ஒருபோதும் தங்களை தங்களுக்குநண்பனாக்கிக் கொள்ள நேரம் ஒதுக்கவில்லை.

நான் குறிப்பிடுவது உயர் நான் ஐ, தன் தனித்துவமான தன்மைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வரம்புகளைக் கொண்ட சிறிய அகங்காரத்தை அல்ல, ஆனால் உண்மையான நான் ஆகிய ஆன்மாவை.

நமது ஆற்றல் மற்றும் சுயமதிப்பின் ஆதாரம்

நமது ஆன்மாவுடன் ஒரு உறவை வளர்த்துக் கொள்ளாவிடின் ஏற்படும் விளைவு என்ன? ஆன்மா உண்மையான அன்பின் ஆதாரம், நமது ஆற்றல் மற்றும் நமது சுயமதிப்பின் ஆதாரம். நாம் ஆன்மாவிடமிருந்து விலகி, அதனுடன் ஒரு உறவையோ அல்லது தொடர்பையோ கொண்டிருக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால், அதன் விளைவாக, அன்பு, அங்கீகாரம், மதிப்பு மிக்கவர் என்ற மற்றவர்களின் கருத்து போன்ற இந்த அடிப்படை மனித தேவைகள் மற்றும் ஆசைகள் அனைத்தும் நிறைவேறாமல் இருக்கும். இது சோகமானது.

ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளார்ந்திருக்கும் அந்த இனிய தெய்வீக குணங்களை உணரத் தவறும்போது, மக்கள் பலவிதமான வெளிப்புற வழிகளில் நிறைவு பெறத் துடிக்கிறார்கள்.

உண்மையில், இது ஒரு சில மிக அடிப்படையான, உணர்ச்சிகரமான புலம்பலுக்கு சமம்: “யாராவது என்னை நேசிக்க மாட்டார்களா? யாராவது மதிப்புள்ளவனாக என்னை உணர வைக்க மாட்டார்களா? நான் நேசிக்கப்படுகிறேன், நான் விரும்பப்படுகிறேன், நான் மதிப்புமிக்கவன் என்று யாராவது எனக்கு உணர்த்த மாட்டார்களா?” வெளி ஆதாரங்களிலிருந்து எதிர்பார்க்கும் வரை அந்த உறுதிப்படுத்தல், எப்போதும் கைக்கெட்டாததாகவே இருக்கும்; அந்த தனிமையும், வெறுமையும் எப்போதும் அகத்துள் இருக்கும்.

மாபெரும் மாற்றம் (மற்றும் நம்பிக்கை!) அது தியானத்திலிருந்து வருகிறது

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், ஒருவர் தீவிரமான, ஒழுக்கமான, முறையான மற்றும் விஞ்ஞான தியான பயிற்சியைத் தொடங்கும் நேரத்திலிருந்து இது மாறக்கூடும், இதனால் ஆன்மாவை அறிந்து கொள்ளத் தொடங்குகிறோம். அங்கிருந்து தான் உண்மையான சுய மதிப்பு வருகிறது.

ஊடகங்களில், நமது கல்வியாளர்களிடமிருந்தும் சமூகத்தின் தலைவர்களிடமிருந்தும் சுயமதிப்பு பிரச்சனை பற்றி நாம் கேள்விப்படுகிறோம், குறிப்பாக வாழ்க்கையில் தங்களை இன்னும் ஊன்றிக் கொள்ளாத, அல்லது தங்கள் செல்லவேண்டிய திசையை இன்னும் கண்டறியாத, அன்பும் தெய்வீகமும் அகத்துள் இருப்பதை அறியாவிட்டால் உணரக்கூடிய ஒரு வெறுமை, சமூக ஊடகங்கள், பொழுதுபோக்குகள், இந்த கவனச்சிதறல்கள், அந்த வெளிப்புற நாட்டம் என்ற ஒரு முடிவில்லாத தேடலைத் தூண்டும் என்பதை அறியாத இளைஞர்களிடம் இந்த பிரச்சனை இருப்பதை பற்றி நாம் கேள்விப்படுகிறோம்,

அந்தச் செயல்கள் தவறானவை என்று அர்த்தமல்ல; அவை பயனற்றவை – அந்த அக வெறுமையின் வெற்றிடத்தை நிரப்புவதில் பயனற்றவை.

தியானம் செய்பவர்கள் உலகின் நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கிறார்கள், ஏனென்றால் ஆன்மாவுடன் தொடர்பு கொள்ள, அந்த தெய்வீக இருப்பை உள்ளே கொணர, இந்த தியான உத்திகளை பயன்படுத்த நேரம் ஒதுக்கும் ஒவ்வொருவரும், இன்று உலகில் ஒரு பெறுந்தொற்றாக இருக்கும் வெறுமை மற்றும் எதிர்மறைத்தன்மை, தனிமை மற்றும் அந்நியப் படுத்தப்படுதலுக்கு மாற்றாக சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

ஆன்மிக உணர்வுநிலையே தீர்வு; தியானம் தான் தீர்வு.

இதைப் பகிர