ஸ்ரீ தயா மாதாவின் மறைவு பற்றிய ஊடகச் செய்திகள்

நவம்பர் 30, 2010 அன்று ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சங்கமாதா மற்றும் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் மறைவுச் செய்தி, அவரது முன்மாதிரியான வாழ்க்கைக்கு, அஞ்சலி செலுத்திய உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களின் பரவலான பத்திரிகை செய்திகளின் விளைவாக, உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது. பொதுவான கருப்பொருள்கள் ஸ்ரீ தயா மாதாவின் பணிவு, மற்றவர்களுக்கான அர்ப்பணிப்பு சேவை மற்றும் தெய்வீக கருணை ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன.

“ஒரு வழிகாட்டும் ஒளி …” —நியூயார்க் டைம்ஸ்

“யோகானந்தரின் போதனைகளின் விசுவாசமிக்க மொழிபெயர்ப்பாளர் …”  —லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்,  ஃபோர்ப்ஸ், ஏஏஆர்பி, ஓரேகோனியன், மினியாபோலிஸ் ஸ்டார் ட்ரிப்யூன், பிலடெல்பியா தகவலாய்வாளர், கன்சாஸ் சிட்டி ஸ்டார், சால்ட் லேக் ட்ரிப்யூன், சான் டியாகோ யூனியன்-ட்ரிப்யூன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ், மற்றும் அசோசியேட்டட் பிரஸ் ஆகியவை ஸ்ரீ தயா மாதாவின் மறைவு குறித்து அறிக்கைவிடுத்த பல ஆன்லைன் மற்றும் அச்சு செய்தி நிறுவனங்கள் மற்றும் மின்னணுச் செய்திகளின் மாதிரிகள் மட்டுமே.

தயா மாதா பற்றிய வரலாறை நாடு முழுவதும் உள்ள செய்தித்தாள்களுக்கு விநியோகித்த லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்,  அமெரிக்க மத ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரும் அமெரிக்க மதங்களின் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியருமான புகழ்பெற்ற சமய அறிஞர் ஜே.கார்டன் மெல்டன், கருத்துக்களை உள்ளடக்கியது. அவர், “[ஸ்ரீ தயா மாதா] தன்னை விட தனது ஆசானை முன்னிறுத்தி தனது நேரத்தை செலவிட தேர்வு செய்தார்” – மனிதகுலத்திற்கான அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பு சேவைக்கு ஒரு வலுவான சான்று.

“ஒரு உத்வேகம் … பல உயிர்களைத் தொட்டது …” …” —ஹிந்து ஸ்டேட்ஸ்மேன் ராஜன் சேட்

டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் இந்தியா வெஸ்ட் வரை DailyIndia.com வரையிலான அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் உள்ள இந்திய அச்சு மற்றும் ஆன்லைன் செய்தி ஆதாரங்கள் ஸ்ரீ தயா மாதா பற்றிய விளக்கங்களை வெளியிட்டன. பிந்தையது புகழ்பெற்ற இந்து அரசியல்வாதி ராஜன் சேட்டின் ஸ்ரீ தயா மாதா குறித்த விளக்கத்தைக் குறிப்பிடுகிறது: “ஆன்மீக பயணத்தில் பல உயிர்களைத் தொட்ட ஒரு உத்வேகம் மற்றும் தெய்வீக அன்பு நிறைந்தவர்.”

லா.ஏ. யோகா, ஹாரிசன்ஸ் இதழ், பிராணா ஜர்னல், இன்டெக்ரல் யோகா பத்திரிகை, லைட் ஆஃப் கான்சியஸ்னஸ் இதழ், மற்றும் விஸ்டம் குவாடர்லி: அமெரிக்கன் புத்திஸ்ட் இதழ் ஆகியவை ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் இன் நீண்டகால தலைவரை அங்கீகரித்த ஆன்மீக வெளியீடுகளில் சில. ஆன்மிகம் மற்றும் யோகாவை உள்ளடக்கிய பல்வேறு இதழ்களின் எதிர்கால பதிப்புகளுக்கு ஸ்ரீ தயா மாதாவை கவுரவிக்கும் கூடுதல் அஞ்சலிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

நேஷனல் பப்ளிக் ரேடியோவின்  KPCC-FM (லாஸ் ஏஞ்சல்ஸ்) ஸ்ரீ தயா மாதாவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து சகோதரர் சிதானந்தாவை பேட்டி கண்டதுடன், Beliefnet.com இல் நேர்காணலின் ஆடியோ பதிவு மற்றும் அச்சு செய்தி சுருக்கம் மற்றும் தனி வீடியோ நேர்காணலை இடம்பெறச்செய்தது. கேபிசிசி நிருபர் ஷெர்லி ஜஹத், தயா மாதா “பல ஆன்மீகத் தலைவர்கள் விரும்பும் புகழைத் தவிர்ப்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார். ரேடியோ ஒளிபரப்பு, லயோலா மேரிமவுண்ட் பல்கலைக்கழகத்தின் இண்டிக் மற்றும் ஒப்பீட்டு இறையியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் சாப்பல் ஒரு நேர்காணலை உள்ளடக்கியது, அவர் தயா மாதா “தங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு சேவை செய்ய விரும்புவோருக்கு ஒரு உத்வேகமாக நினைவுகூறப்ப்படுவார்” என்று கூறினார்.

“மற்றவர்களின் சேவைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு குறிப்பிடத்தக்க பெண் …” – —ட்விட்டர் பதிவு.

இந்த வரலாற்று நிகழ்வின் செய்திகள் வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், ஆன்லைன் மன்றங்கள் மற்றும் சமூக ஊடக கணினி வலைஅமைப்புகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளடக்கப்பட்டன – ட்ரையம்ப் ஆஃப் தி ஸ்பிரிட், , ஓபன் டு ஹீலிங், பெல்லாஆன்லைன் மற்றும் Beliefnet.com போன்ற தளங்களில் இதயப்பூர்வமான அஞ்சலி .

ஒரு சுவாரஸ்யமான வலைப்பதிவு இடுகை வேத கணித மன்றம், -ன் பதிவு ஆகும். இது, பூரி சங்கராச்சாரியாரின் (அவருடைய பல சிறந்த சாதனைகளில் பண்டைய இந்திய வேதங்களின் மேம்பட்ட கணிதத்தை விளக்கும் தொகுதி அடங்கும்) அமெரிக்க வரலாற்று விஜயத்தில் தயா மாதா அவர்கள் ஒரு கருவியாக செயல்பட்டதை எடுத்துரைத்தது.

ட்விட்டரில் நூற்றுக்கணக்கான ட்வீட்கள், ஊடக கவரேஜ் மற்றும் நினைவாஞ்சலிகளின் விவரங்கள் குறித்த மறுட்வீட்களுடன் தோன்றின. நிகழ்வுகள் குறித்து செய்தி வெளியிட்ட பல ஊடகங்களில் தோன்றிய செய்திகளை ஆன்லைன் செய்தி திரட்டிகள் பகிர்ந்து கொண்டனர். மேலும், உலகெங்கிலும் உள்ள உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் மையங்களால் உருவாக்கப்பட்ட முகநூல் குழுக்கள் ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் இன் அன்புக்குரிய சங்கமாதாவுக்கு அஞ்சலி செலுத்தி, அவரை “ஒரு சிறந்த ஆன்மீகத்தாய்” என்று அங்கீகரித்தன.

மிகவும் உருக்கமான அஞ்சலிகளில் ஒன்று எஸ்ஆர்எஃப் -ன் அண்டை வீட்டாரிடமிருந்து வந்தது — மவுண்ட் வாஷிங்டனில் வசிப்பவர் – அவர் உறுப்பினராக இல்லாதவர் மற்றும் ஸ்ரீ தயா மாதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதவர், ஆனால் நிச்சயமாக அவரது மனநிலையை உணர்ந்தார். எழுத்தாளர் பிஜே கல்லாகர், தி ஹஃபிங்டன் போஸ்ட், டில் சமீபத்தில் வந்த கட்டுரையில் எழுதினார்:

“”உங்கள் பணியே தன்னைப் பற்றி பேசும்போது, குறுக்கிட வேண்டாம்,” என்று விவேகமுள்ள ஒருவர் ஒருமுறை கூறினார். கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக செல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப்பை வழிநடத்திய ஸ்ரீ தயா மாதாவின் வாழ்க்கையைப் பற்றிய பொருத்தமான விளக்கமாக இது தோன்றுகிறது…..

அவர் சமீபத்தில் இறந்த பிறகு லா.ஏ டைம்ஸில் நான் படிக்கும் வரை [ஸ்ரீ தயா மாதாவின்] வாழ்க்கையின் உண்மைகளை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் யார் என்ற உணர்வைப் பெற அவருடைய வாழ்க்கையின் விவரங்களை நான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நான் ஏற்கனவே அவரை அவருடைய பணிமூலம் அறிந்தேன்.

என் காலை நடைப்பயணத்தில் எனக்கு முகமன் கூறிய சன்னியாசி மற்றும் சன்னியாசினிகளின் மகிழ்ச்சியான, நட்பு முகங்களில் அவருடைய மன நிலையை நான் அறிவேன். எஸ்.ஆர்.எஃப் வெளியிடும் அழகான புத்தகங்கள் மற்றும் காலண்டர்களில் நான் அவரை அறிந்தேன். சுற்றுப் பார்வைக்காக எஸ்ஆர்எஃப் மைதானம் முழுவதிலுமான என் உலாவில் நான் அவரை அறிந்தேன், என் நாயும் நானும் அவர்களின் அழகான புல்வெளிகளில் விளையாடும் நேரங்களிலும். எஸ்.ஆர்.எஃப் தோட்டத்தில் தியானத்தின் என் அமைதியான தருணங்களில், நன்றிக்கான ஒரு எளிய பிரார்த்தனையுடன் கண்ணுக்குப் புலனாகாத அவரின் இருப்பை உணர்ந்தபோது நான் அவரை அறிந்தேன்.

ஸ்ரீ தயா மாதா அவர்களே, மவுண்ட் வாஷிங்டனின் அண்டை வீட்டுக்காரர்கள் உங்களை அரிதாகவே அறிந்திருந்தார்கள் – ஆனால் நாங்கள் உங்களை அறிந்தோம். உங்கள் அமைப்பின் அமைதியான, சாந்தமான மனோநிலை மற்றும் உங்களை பின்பற்றுபவர்கள் எங்களை சூழ்ந்த நிலயிலும், உங்கள் தோட்டங்களில் இருக்கும்போதும் நாங்கள் உணரும் சிறப்பு சக்தி மூலம் உங்களை அறிந்தோம். எங்கள் அயலவராக இருப்பதற்கு நன்றி; மவுண்ட் வாஷிங்டனை உங்கள் இருப்பிடமாக உருவாக்கியதற்கு நன்றி; உலகத்திற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி. உங்கள் பணியே அதைப் பற்றி பேசுகிறது.

இதைப் பகிர