ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்

இறைவனை நாடுதலின் முக்கியத்துவம்

முழு உலகமே நம்மை ஏமாற்றலாம் அல்லது கைவிடலாம், ஆனால் நாம் இறைவனிடம் ஒரு இனிமையான மற்றும் மென்மையான ஓர் உள்ளார்ந்த உறவு முறையை ஏற்படுத்தி இருந்தால் நாம் ஒரு பொழுதும் தனியாகவோ அல்லது கைவிடப்பட்ட மாதிரியோ உணர மாட்டோம். எப்பொழுதுமே அந்த ஏதோ ஒருவர் நம் பக்கம் உள்ளார் – ஓர் உண்மையான நண்பன், ஓர் உண்மையான அன்பன், ஓர் உண்மையான அன்னை அல்லது தந்தை. நீங்கள் இறைவனை எந்தவித உருவகமாக கருதினாலும், இறைவன் உங்களுக்கு அந்த வித உருவகமாவான்.

பாரா ஆபரணம்

ஒவ்வொரு மனித இதயத்திலும் ஒரு காலியான இடம் உள்ளது, இறைவன் மட்டும்தான் நிரப்ப முடியும். இறைவனைக் காண்பதை உங்கள் முன்னுரிமையாகக் கொள்ளுங்கள்.

பாரா ஆபரணம்

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும், வேறு எவருமே அங்கு நுழைய முடியாதவாறு ஓர் அமைதியான ஆலயத்தை அகத்தே அளித்துள்ளான். அங்கு நாம் இறைவனுடன் இருக்க முடியும். நாம் அதைப் பற்றி அதிகம் பேச வேண்டிய தேவை இல்லை. மேலும் அது நம் அன்புக்குரியவர்களிடம் இருந்து நம்மை தொலைவில் எடுத்துச் செல்லாது, மாறாக அது நம் அனைத்து உறவுகளையும் இனிமையாக்குகிறது, வலிமையாக்குகிறது மற்றும் கூடுதல் நிரந்தரமாக்குகிறது.

– குழந்தைக்கான பெற்றோரின் அன்பு, பெற்றோருக்கான குழந்தையின் அன்பு, மனைவிக்கான கணவனின் அன்பு, கணவனுக்கான மனைவியின் அன்பு, நண்பன் நண்பனுக்கான அன்பு, அனைத்து அன்புகளும் எங்கிருந்து வருகின்றனவோ அந்தப் பேராதாரத்திற்கு நாம் நேரடியாகச் செல்லும்போது, நம் கற்பனைக்கே எட்டாதவாறு நம்மை திருப்தியுறச் செய்யும் ஒரு நீரூற்றிலிருந்து நாம் அன்பினைப் பருகுகிறோம்.

பாரா ஆபரணம்

மனிதனுக்கு ஒரு மனமும் ஐம்புலன்கள் கொண்ட ஒரு உடலும் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக அவன் வரையறைக்குட்பட்ட இந்த உலகைக் கண்டு அதனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். ஆனால் மனிதன் உடலும் அல்ல, மனமும் அல்ல. அவனது இயல்பு ஆன்மாவாகும். அழிவற்ற ஆன்மா, அவன் எப்பொழுது எல்லாம் தன் புலன் அறிவின் மூலமாக நிரந்தர மகிழ்ச்சியினைத் தேட முயலுகிறானோ, அப்பொழுதெல்லாம் அவனது நம்பிக்கைகள், அவனது உற்சாகம், அவனது ஆசைகளாகிய கப்பல், ஆழ்ந்த வெறுப்பு மற்றும் ஏமாற்றம் என்ற பாறைகளில் மோதி சிதறி விடுகின்றது. இந்த சடப்பொருள் உலகில் உள்ளவை ஒவ்வொன்றும் அடிப்படையில் நிலையில்லாதவை. மற்றும் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பவை. மாறுதலுக்கு உட்பட்ட எதுவும் தன்னுள் ஏமாற்றத்தின் விதைகளை உள்ளடக்கியுள்ளது. ஆதலால் நம் உலக எதிர்பார்ப்புகள் எனும் கப்பல் உடனுக்குடனேயோ அல்லது நாள்பட்டோ நிராசை எனும் மணல் திட்டுகளில் தரை தட்டி விடும். இறைவன், அனைத்து விவேகம், அனைத்து அன்பு, அனைத்து பேரானந்தம், அனைத்து மனநிறைவு ஆகியவற்றின் தோற்றுவாயாக உள்ளதால், நாம் அவனைத் தேட வேண்டும். இறைவன்தான் நம் இருப்பிற்கு மூலாதாரம், எல்லா உயிர்களுக்கும் மூலாதாரம் மற்றும் நாம் அவனுடைய உருவமாகவே படைக்கப்பட்டுள்ளோம். அவனைக் கண்டு கொள்ளும் போது இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்வோம்.

இறைவனுடன் ஓர் அன்பான உறவு முறையை வளர்த்துக் கொள்ளுதல்

இறைவனை ஒரு வார்த்தையாகவோ அல்லது ஒரு அந்நியனாகவோ அல்லது நம்மை கணித்து நம்மைத் தண்டிக்கப் போகும் ஏதோ ஓர் உயர் நபராகவோ எண்ணாதீர்கள். நீங்கள் இறைவனாக இருந்தால் எவ்வாறு நீங்கள் கருதப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவ்வாறு அவனை எண்ணுங்கள்.

பாரா ஆபரணம்

நமது பெரிய பலவீனங்களில் ஒன்று நாம் இறைவனைப் பற்றி ஆசைப்படுவதாகும். நம் ஆன்மாக்களில், நம் இதயங்களில், நம் மனசாட்சிகளில், நம்மை வெகுவாகத் தொல்லைப்படுத்தும் விஷயங்களை நாம் இறைவன் முன் அடையாளம் காண்பதில் அச்சமுறுகிறோம். ஆனால் அது தவறு, உங்களுடைய ஒவ்வொரு பிரச்சனையுடனும் நீங்கள் முதலில் அணுக வேண்டியவன் தெய்வீக அன்பன்தான். . . . ஏன்? ஏனெனில் உங்கள் பலவீனங்களை நீங்கள் அடையாளம் காண்பதற்கு மிகவும் முற்பட்டு அவன் அவற்றை அறிவான். அவனிடம் நீங்கள் புதிதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை. இறைவனிடம் நீங்கள் உங்கள் மன பாரத்தை இறக்கி வைக்கும்போது, ஆன்மாவிற்கு ஓர் அலாதியான விடுதலை கிடைக்கும்.

பாரா ஆபரணம்

இறைவனுடனான ஏன் உறவுமுறையில், அந்த ஒரே தெய்வத்தை அன்னை என்ற அம்சத்தில் எண்ணிப் பார்க்கவே நான் விரும்புகிறேன். தந்தையின் அன்பானது பெரும்பாலும் பகுத்தறிவு மற்றும் குழந்தையின் தகுதி ஆகிய நிபந்தனைக்குட்பட்டதாகிறது. ஆனால் அன்னையின் அன்பு நிபந்தனையற்றது; தன் குழந்தையைப் பொறுத்தவரையில் அவள் அனைத்து அன்பு, கருணை மற்றும் மன்னிப்பின் வடிவமாவாள். . . . ஒரு குழந்தை என்ற முறையில் அன்னை அம்சத்தை நாம் பின்பற்றி, அவனது அன்பை நமது தகுதியைப் பாராமல் உரிமை கோரலாம்.

பாரா ஆபரணம்

நாம் இறைவனை நமது இதயத்தின் அமைதி மையத்திலிருந்து அவனை அறிவதற்கும் அவனது அன்பை உணர்வதற்கும் எளிமையான, உண்மையான ஏக்கத்துடன் அழைத்தால், தவறாமல் நாம் அவனது மறுமொழியை ஈர்க்கிறோம். தெய்வீக அன்பனின் அந்த இனிமையான இருப்பு நமது ஒப்பற்ற மெய்மை ஆகிறது. அது முழுமையான திருப்தியைக் கொணர்கிறது. அது நமது வாழ்க்கையை முற்றிலும் மாற்றுகிறது.

பாரா ஆபரணம்

தெய்வத்திற்கு செலுத்தும் நீண்டநேர பிரார்த்தனைகள் இறைவனது நெஞ்சத்தைத் தொடும் என்ற அவசியமில்லை. ஒரே ஒரு எண்ணம் மட்டுமே ஆன்மாவின் ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் கூறப்பட்டால் அது இறைவனிடமிருந்து மாபெரும் மறுமொழியைத் தருவிக்கிறது. நான் பிரார்த்தனை என்ற சொல்லைக்கூட பயன்படுத்த விரும்ப மாட்டேன்; அது ஒரு சம்பிரதாய, இறைவன் அளிக்கும் ஒருதலைப்பட்ட கோரிக்கையை குறிப்பது போல் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை, இறைவனுடன் ஒரு நெருங்கிய மற்றும் அன்பான நண்பனிடம் பேசுவது போன்ற அவனுடனான உரையாடல் ஒரு கூடுதல் இயல்பான, தனிப்பட்ட மற்றும் பயன்மிக்க பிரார்த்தனை வடிவமாகும்.

பாரா ஆபரணம்

உங்களை இறைவனது குழந்தையாக அல்லது அவனது நண்பனாக அல்லது அவனது பக்தனாக பாவித்துக் கொண்டு அவனுடன் ஒரு கூடுதல் தனிப்பட்ட உறவினை வளர்த்துக் கொள்ளுங்கள். நாம், வாழ்க்கையை, நமது அனுபவங்களை எல்லாம் மிகவும் கனிவான, புரிதல் உள்ள மற்றும் அன்பான அந்த எவரோ ஒருவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு நிலையில் அனுபவிக்க வேண்டும்.

பாரா ஆபரணம்

இறைவனுடனான நமது உறவு ஒவ்வொரு கணத்திலும் அவன் நமக்கு எவ்வளவு நெருங்கியவன் என்பதை நாம் நினைவில் கொள்ள கடுமுயற்சி செய்யும்போது, மிக எளிமை மற்றும் இனிமை நிறைந்தாகிறது. வியக்கத்தக்க சான்று விளக்கங்களையோ அல்லது அற்புதமான தெய்வீகக் காட்சிகளையோ இறைவனுக்கான நம் தேடலில் நாம் நாடினால், எல்லா நேரமும் அவன் நம்மிடம் வரும் பல வழிகளை நாம் கவனிக்கத் தவறலாம்.

பாரா ஆபரணம்

ஒரு நாள் பொழுதில், உங்களுக்கு எவராவது ஒருவர் ஏதாவது உதவி செய்தால் அந்த பரிசு வழங்குதலில் இறைவனது கரங்களைப் பாருங்கள். எவராவது ஒருவர் உங்களைப் பற்றி அன்பாக எதையாவது கூறினால், அந்த வார்த்தைகளுக்குப் பின் இறைவனின் குரலைக் கேளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏதாவது நல்ல அல்லது அழகிய விஷயம் நடந்தால், இறைவனிடமிருந்து அது வருகிறது என்று உணருங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் இறைவனுடன் தொடர்பு செய்து பாருங்கள்.

தியானத்தின் முக்கியத்துவம்

இந்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பலர் என்னிடம் வந்து “உங்களால் எவ்வாறு மணிக்கணக்கில் தியானத்தில் அசைவற்று அமர முடிகிறது? அந்த அசைவற்று இருக்கும் நேரங்களின் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” புராதன இந்தியாவின் யோகிகள் சமய விஞ்ஞானத்தை வளரச் செய்தார்கள். அவர்கள், குறிப்பிட்ட சில விஞ்ஞானப் பூர்வமான உத்திகள் வாயிலாக அமைதியற்ற எண்ணம் எனும் ஓர் சிற்றலை கூட மனத்தை தொந்தரவு செய்யவோ அல்லது அதன் கவனத்தைத் திருப்பவோ முடியாத அளவிற்கு மனத்தை அசைவற்றிருக்க செய்ய முடியுமென்று கண்டுபிடித்தார்கள். அந்த தெள்ளத்தெளிவான உணர்வு நிலை எனும் ஏரியில், நாம் நம் அகத்தே இறைவனின் பிரதிபலிக்கப்பட்ட பிரதி பிம்பத்தைப் பார்க்கிறோம்.

பாரா ஆபரணம்

உலகின் மறைநூல்கள் கூறுகின்றன நாம் இறைவனின் பிரதி பிம்பத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம். இது அப்படியென்றால், ஏன் இறைவனைப் போன்று நாம் மாசற்றவர்கள் மற்றும் அழிவற்றவர்கள் என்று நாம் அறவதில்லை? ஏன் நாம் நம்மை இறைப்பரம்பொருளின் வடிவானவர்கள் என்ற உணர்வின்றி இருக்கிறோம்?. . . . .மேலும், மறைநூல் என்ன கூறுகிறது? “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்.”

நிலையாமான கவனத்துடன் முறைதவறாத யோகத்தியானத்தின் பயிற்சி மூலம், “ஓ நான் இந்த தேகத்தை இந்த உலகுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தினாலும் நான் தேகமல்ல; கோபம், பொறாமை, வெறுப்பு, அமைதியின்மை ஆகியவற்றின் உணர்ச்சி வேகங்களுடன் கூடிய இந்த மனப்பான்மை நானல்ல. நான் அகத்தே உள்ள உணர்வின் அந்த அற்புத நிரை. நான் இறைவனின் பேரின்பம் மற்றும் அன்பு எனும் தெய்வீக பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளேன்” என்று திடீரென்று நீங்கள் உங்களுக்கே சொல்லிக் கொள்ளும் காலம் வரும்.

பாரா ஆபரணம்

நம்மை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு திறன் உள்ளவாறு செய்யவும் அதேசமயம் நமது அமைதி அல்லது சமநிலையை இழந்து விடாமல் செய்யக்கூடிய பல முக்கிய விஷயங்கள் உள்ளன. இவற்றில் முதலாவதானது ஒவ்வொரு நாளையும் ஒரு தியான காலத்துடன் தொடங்குவது. தியானம் புரியாதவர்கள், மனம் மிக ஆழ்ந்து செல்லும் போது எத்தகைய பேரமைதி உணர்வு நிலையை நிரப்புகிறது என்பதை ஒருபோதும் அறிய மாட்டார்கள். உங்களால் அந்த அமைதி நிலையை எண்ணிப் பார்க்க முடியாது; அதே உணர்வு பூர்வமான மனம் மற்றும் எண்ணச் செயற்ப் பாங்குகளுக்கு அப்பால் உறைகிறது. அதனால்தான் பரமஹம்ஸ யோகானந்தர் நமக்கு கற்பித்த யோகத் தியான உத்திகள் மிகவும் அற்புதமாய் உள்ளன; முழு உலகமும் அதைப் பயன்படுத்தக் கற்க வேண்டும். நீங்கள் அவற்றை சரியாக பயிற்சி செய்யும் போது உண்மையிலேயே, அகத்தே ஓர் அமைதிப் பெருங் கடலில் நீந்துவது போல் உணர்வீர்கள். உங்கள் நாளை அந்த அமைதியால் உங்கள் மனத்தை நிலைநிறைத்திய வண்ணம் தொடங்குங்கள்.

பாரா ஆபரணம்

தியானத்துடன் மறக்கும் தன்னை – மறக்கும் தன்மை வருகிறது. அதாவது இறைவனுடன் நமது உறவு மற்றும் மற்றவர்களுக்கு ஆற்றும் சேவையில் இறைவனுக்கே தொண்டாற்றுவது என்ற முறையில் அதிகம் சிந்திக்க முற்படுகிறோம். பக்தன் தன் அழிவற்ற மற்றும் எல்லாவற்றையும் அறியும் இறைவனின் தெய்வீகப் பிரதி பிம்பமாகப் படைக்கப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றால் தன்னுடைய சிறிய ‘நான்’ எனும் அகந்தையை மறக்கவேண்டும். பைபிள் கூறுகிறது, “அசைவற்றிருந்து நானே தேவன் என்று அறிந்துகொள்” இதுதான் யோகம். . . . ஒருவர் தன் உணர்வு நிலையை உயர் ஞான மையங்களுக்கு உயர்த்தினால் மட்டும்தான் அவர் தான் இறைவனின் பிரதி பிம்பமாக படைக்கப்பட்டிருப்பதை உணரமுடியும்.

பாரா ஆபரணம்

மிக ஆவலுடன் அனைவராலும் நாடப்படும் அமைதியும் நல்லிணக்கமும் உலகியல் பொருட்களாலும் அல்லது எந்த புற சூழ்நிலைகளாலும் அடையப்பட முடியாது. . . . உங்கள் வாழ்க்கையின் புறச்சூழ்நிலைகளில் இணக்கத்தைக் கொணரும் இரகசியமானது, உங்கள் ஆன்மா மற்றும் இறைவனின் ஓர் அக இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான். ஒவ்வொரு நாளிலும், சிறிது நேரத்தை என் மனத்தை உலகத்திலிருந்து பின்வாங்கி அதை உள் முகப்படுத்தி இறைவனது இருப்பை உணர முயற்சி செய்யுங்கள். அதுதான் தியானத்தின் நோக்கம். நீங்கள் ஆழ்ந்து தியானித்து உங்கள் உணர்வு நிலையை அகத்தே உள்ள இறைவனது அமைதியுடன் இசைவித்துவிட்ட பிறகு, வெளிப்புற பிரச்சனைகளுக்கு உங்கள் அதிக மன இறுக்கத்தை அளிக்காது என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அவற்றை உங்கள் நிதானத்தை இழக்காமல் மிதமிஞ்சி எதிர்வினை புரியாமல் கையாள உங்களால் முடியும். நீங்கள் பெற்றிருக்கும் அக வலிமை உங்களை இவ்வாறு கூற செய்கிறது, “சரி, நான் இந்த பிரச்சினையை எதிர்கொண்டு அதை வெல்வேன்.”

சமச்சீரான வாழ்க்கை வாழ்தல்

நாம் ஒவ்வொருவரின் அகத்தேயும், உலகத்தின் குழப்பங்கள் தம்முள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்காத ஓர் அமைதி ஆலயம் உள்ளது. நம்மை சுற்றி என்ன நடந்து கொண்டிருந்தாலும், நாம் நம் ஆன்மாக்களின் மௌன புகலிடத்திற்குள் நுழையும் போது நாம் இறைவனின் அருளார்ந்த இருப்பை உணர்ந்து அவனது அமைதி மற்றும் வலிமையை பெறுகிறோம்.

பாரா ஆபரணம்

மன அமைதிக் குறைவுகள், ஏமாற்றங்கள் போன்ற பல பிரச்சனைகளால் எவர்களது மனங்கள் அலைக் கழிக்கப்படுகின்றனவோ, அம்மக்களை நான் காணும் போது, என் இதயம் அவர்களுக்காக மிகவும் வேதனைப்படுகிறது. ஏன் மனிதர்கள் இத்தகைய அனுபவங்களால் தொல்லைப் படுத்தப்படுகிறார்கள்? ஒரு காரணத்திற்காக: அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த தெய்வத்தைப் பற்றிய மறதியினால். நீங்கள் உங்கள் வாழ்கையில் ஒரு குறைதான் உள்ளது, அது இறைவன் தான் என்று உணர்ந்து கொண்டு, அந்தக் குறையை நீக்க, தினசரி தியானத்தில் உங்களை இறை உணர்வு நிலையால் நிரப்புவதற்கு கடும் முயற்சி செய்வதன் மூலம் நடவடிக்கை எடுக்க முற்படும் போது, உங்கள் மன அமைதியை எதுவும் அசைக்க அல்லது குலைக்க முடியாத அளவிற்கு நீங்கள் மிகவும் முழுமையானவராகவும் முற்றிலும் மன நிறைவு பெற்றவராகவும் இருக்கும் காலம் வரும்.

பாரா ஆபரணம்

துன்பமானது நம்மை அழிக்கவோ அல்லது தண்டிக்கவோ வருவதில்லை, மாறாக அது நம் ஆன்மாக்களின் உள்ளே உள்ள வெல்ல முடியாத தன்மையை தட்டியெழுப்ப உதவி புரிய வருகிறது. . . . நாம் அனுபவிக்கும் துன்பம்மிக்க கடும் சோதனைகளெல்லாம் நம்மை ஆசிர்வதிக்கும் வண்ணம் வெளிநீட்டப்பட்ட இறைவனது கரத்தின் நிழல் மட்டுமே. இறைவன், நாம் இந்த துன்பம் மிகுந்த இருமை உலகம் எனும் இந்த மாயையிலிருந்து நாம் வெளியேறுவதில் மிகவும் ஆவலாய் உள்ளான்; நாம் கடப்பதற்காக இறைவன் அனுமதிக்கும் என்ன இன்னல்களெல்லாம் நாம் அவனிடம் திரும்பி செல்வதை விரைவுபடுத்த தேவையாகும்.

பாரா ஆபரணம்

ஆன்மீக சமநிலைப்பட்ட தனிநபர் தான் உண்மையில் வெற்றியாளர். நான் செல்வ ரீதியான வெற்றியைக் குறிப்பிடவில்லை. அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இது என் அனுபவம், மேலும் இது பரமஹம்ஸரின் அனுபவமாகவும் இருந்தது: உலகியல் ரீதியில் வெற்றி அடைந்துள்ள பல மனிதர்களைச் சந்தித்துள்ளேன்; அவர்கள் உணர்ச்சி ரீதியாகவும் ஆனமீக ரீதியாகவும் தோல்வியுற்றவர்களாக உள்ளனர் – மன இறுக்கம் நிறைந்தவர்களாய்; அக அமைதியற்று, அன்பைக் கொடுப்பதிலும், பெறுவதிலும் திறனற்றவர்களாய்; தன் குடும்பத்தினருடனோ அல்லது மற்ற மனிதர்களுடனோ அல்லது இறைவனுடனோ இணக்கமாய் உறவுகொள்ள திறமையற்றவர்களாய் உள்ளனர். ஒரு மனிதரது வெற்றி அவரது உடமைகளால் கணிக்கப்படக் கூடாது, மாறாக அவர் எவ்விதமான மனிதராய் உள்ளார் மேலும் அவரால் மற்றவர்களுக்கு என்ன அளிக்க இயலுகிறது என்பதின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

பாரா ஆபரணம்

தியானம், நமது வெளிப்புற வாழ்க்கையை இந்த உலகத்தில் வேறு எதுவும் செய்ய முடியாதவாறு ஆன்மாவின் உள்ளார்ந்த பண்புகளுடன் ஒழுங்குபடுத்துகிறது. அது நம்மை குடும்ப வாழ்க்கையிலிருந்தோ அல்லது மற்றவர்களுடனான உறவுகளிலிருந்தோ நம்மை பிரிப்பதில்லை; இதற்கு நேர் மாறாக அது நம்மை அதிகம் அன்பு உடையவராய், அதிகம் புரிதல் உள்ளவராய் ஆக்குகிறது – அது நம்மை, நம் கணவன், நம் மனைவி, நமது குழந்தைகள், நமது அண்டை வீட்டார்கள் ஆகியோருக்கு சேவை செய்ய விரும்புமாறு செய்கிறது. உண்மையான ஆன்மீகம், நலமாய் இருக்க வேண்டும் என்ற நம் விருப்பத்தில் மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளும்போது, நமது எண்ணங்களை, “நான், எனது மற்றும் என் சொந்தம் என்பதற்கப்பால் விரிவடைய செய்யும் போது, தொடங்குகிறது.

பாரா ஆபரணம்

பரமஹம்ஸ யோகானந்தரால் நமக்கு காட்டப்பட்ட ஆன்மீகத்துடனான சமநிலைப்பட்ட வாழ்க்கை எவ்வளவு அற்புதமாக, வேறுபட்டதாகவும் மற்றும் மன நிறைவளிப்பதாகவும், உள்ளது. . . . . நீங்கள் இறைவனை நாடும் போது கலகலப்பின்றி மிகவும் பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் கொண்டுள்ளனர். ஆனால் அத்தகைய தவறான புனிதத்தன்மை ஆன்மாவைச் சார்ந்ததல்ல. பரமஹம்ஸரையும் சேர்த்து, நான் சந்தித்து மற்றும் பழைய பல மகான்கள் ஆனந்தமயமாகவும், இயல்பானவர்களாகவும், குழந்தை மனம் படைத்தவர்களாகவும் உள்ளனர். நான் இங்கு குழந்தைக் தனத்தை குறிப்பிடவில்லை – முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற தன்மையை நான் குறிப்பிடுவது குழந்தை போன்ற தன்மை -மிக எளிய இன்பங்களை அனுபவிக்க முடிபவர்களாகவும், மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களாகவும் உள்ளார்கள். தற்காலத்தில், மேல் நாட்டு நாகரீக மக்களுக்கு எவ்வாறு எளிய விஷயங்களை அனுபவிப்பது என்று தெரிவதில்லை. அவர்கள் தங்கள் சுவைகளில் மிகவும் சலிப்புற்று, அவர்களை எதுவும் திருப்திபடுத்துவதில்லை: அகத்தே விரும்பும் பொருட்கள் கிடைக்க பெறாதவர்களாய் ஒன்றும் இல்லாதவர்களாக இருந்துகொண்டு புறத்தே மித மிஞ்சித் தூண்டப் பெற்றவர்களாய் அவர்கள் மன அமைதியின்மையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குடிப்பதற்கோ அல்லது போதை மருந்துகளுக்கோ அடிமையாகின்றனர். சமகாலத்திய நாகரிகத்தின் பண்புகள் நேர்மைக்கும் இயற்கைக்கும் புறம்பானதாக உள்ளன, அதனால்தான் உண்மை உண்மையானவர்கள் சமநிலைபட்ட பல மனிதர்களையும், துண்டு துண்டாக சிதறி போகாத குடும்பங்களையும் உருவாக்காது தவறுகிறது. யோகா குடும்பங்களையும் உருவாக்க அது தவறுகிறது. . . . . வாழ்க்கையின் எளிமையான இன்பங்களுக்கு நாம் மீண்டும் போகவேண்டும்.

அமைதி மற்றும் உலக இணக்கத்திற்கான வழி

அனைவராலும் மிகவும் ஆவலாக நாடப்படும் அமைதி மற்றும் நல்லிணக்கம் உலகியல் விஷயங்கள் அல்லது வெளிப்புற அனுபவங்களால் அடைய முடியாது; அது சிறிது கூட சாத்தியம் இல்லை. ஒருவேளை, அழகிய சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தல் அல்லது மலைகள் அல்லது கடல் பக்கமாக சுற்றுலாச் செல்லுதல் மூலமாக நீங்கள் ஒரு தற்காலிக சாந்தத்தை உணரலாம். ஆனால் மிகவும் மன எழுச்சியூட்டும் சூழ்நிலை கூட, உங்கள் சொந்த இருப்பில் நீங்கள் இணக்கமற்றவராக இருந்தால், உங்களுக்கு அமைதியைத் தராது.

உங்கள் வாழ்க்கையின் புற சூழ்நிலைகளில் இணக்கத்தைக் கொணரும் இரகசியமானது உங்கள் ஆன்மா மற்றும் இறைவனிடம் ஓர் அக இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.

நாடுகளுக்கு இடையே அமைதியைப் பற்றிப் பேசுவது, அந்த நாடுகளிலுள்ள மக்கள் அமைதியாய் இருந்தால், உண்மைக்கு புறம்பானது நம்முடைய அவர்களால் அமைதியுடன் இருக்க முடியவில்லை என்றால் அவர்களால் அண்டை வீட்டுக்காரர்களுடன் சமாதானமாக இருக்க முடியாது – அல்லது சொந்த குடும்ப உறுப்பினர்களுடன் கூட அவர்களால் சமாதானமாக இருக்க முடியாது. அது தனிநபர்களுடன் தொடங்க வேண்டும். என் உலகச் சுற்றுப் பயணங்களின் போது ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்விகளில் ஒன்று, “நான் எவ்வாறு அமைதியைக் காண முடியும்?” நான் அவர்களிடம் கூறுவேன், “அகத்தே இறைவனின் இருப்பிற்குள் செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.” பரமஹம்ஸ யோகானந்தரால் கொணரப்பட்ட இப்பாதையின் போதனையின் அடித்தளமான தினசரி தியானம் தான், துன்பமுறும் தனிநபர்கள் மற்றும் பிளவுபட்ட குடும்பங்கள் வாழ்க்கையில் ஆன்மீகச் சமநிலையை மீட்பதற்கும் மேலும் உலகக் குடும்பம் எனும் பரந்தகன்ற இல்லத்தில் அமைதி மற்றும் இயக்கத்தை ஊட்டும் பண்புகளை மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்குமான, வழியாகும்.

நம்மைச் சுற்றி அறிவுக் கண்கொண்டு நோக்கினால், உலக நன்மைகள் மனித இனத்தை இறைவனுடன் ஒரு நெருங்கியத் தொடர்பினை வளர்த்துக் கொள்ள பலவந்தப்படுத்தப் போவது, வெளிப்படையாகிறது. கடந்த நூற்றாண்டுகளில் மிகவும் பெரிதாகத் தென்பட்ட இந்த பூமி உருண்டை, தற்போது ஒப்பிட்டுப் பார்த்து பேசுகையில் ஒரு ஆரஞ்சுப் பழ அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இனிமேலும் நாம் நம்மை உலகத்தின் மற்ற மக்கள் மற்றும் நாகரிகங்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்துக் கொள்ள முடியாது; நவீன தொடர்பு முறைகள் மற்றும் பயண வடிவங்கள் உண்மையில் நம்மை நேருக்கு நேர் கொணர்ந்து ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அவசியம் செய்ய வேண்டியது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் மற்றும் ஒத்துப்போகவும் செய்வதற்கான ஆன்மீக முதிர்ச்சியை நாம் வளர்த்துக் கொள்ளுதல் முற்றிலும் அவசியமாக்கயுள்ளது. மனித இயல்பின் இரண்டு பெரிய பலவீனங்களான பாரபட்சங்கள் மற்றும் குறுகிய மனப்பான்மை நீக்கப்படவேண்டும்.

முன்னெப்போதையும்விட நாம் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும்: இது ஒரே உலகம். இது வெவ்வேறு விதமான மக்களுடன் அவர்களது பலதரப்பட்ட தேகத் தோற்றங்கள், மனநிலைகள், ஆர்வங்கள் மற்றும் செயல் நோக்கங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவில்லாதது வேறுபடும் மனிதத்தன்மை எனும் மலர்களை இணைக்கும் ஒரு மாயையாக நம்மை சேர்ப்பது போன்ற ஒரு அடிப்படை உண்மை உள்ளது – அது இறைவன் தான். அவனது கண்களில் எவரும் உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவர் இல்லை; நாம் அனைவரும் அவனது குழந்தைகள். இறைவனுக்கு நாம் எங்கு பிறந்துள்ளோம், எந்த மதத்தைப் பின்பற்றுகிறோம் அல்லது நமது தோலின் நிறம் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட அக்கறை இல்லை – நம் ஆன்மாக்கள் சிவப்பு, கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஆடையை அணிவதால் அது எவ்வாறு முக்கியமாகும்? அதைப் பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. ஆனால் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றி அவன் கவலையுறுகிறான். அவன் தன் குழந்தைகளை அந்த ஒரு அடிப்படையின் மீதுதான் கணிக்கிறான். நாம் பாரபட்சங்களால் நிரப்பப்பட்டிருந்தால் நாமும் அதே விதத்தில் வெறுப்பினை பதிலுக்கு பெறுகிறோம். நாம் எந்த குழுவினரிடமோ மிக்க கோபமுற்றிருந்தால், நாம் ஒரு நாள் அறுவடை செய்ய வேண்டிய பகையின் விதைகளை நாம் விதைக்கிறோம் என்பது நிச்சயமாகிறது.

பலதரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு அடித்தளமாக அனைத்து சமயங்களுக்கும் பொதுவான குறிப்பிட்ட ஆன்மீகக் கொள்கைகள் உள்ளன. . . . பரமஹம்ஸர் எப்பொழுதும் பக்தர்களின் கவனத்தை, இந்த உலகளாவிய அடிப்படை உண்மைகளுக்கு, வெறுமனே ஒரு நம்பிக்கை மற்றும் விளக்க உரை விஷயமாக மட்டுமின்றி அவர்களது தினசரி வாழ்க்கையில் பயிற்சி செய்யப்பட வேண்டிய ஒரு நடைமுறை தேவை என்ற முறையிலும் ஈர்க்க முயற்சித்தார். பல யுகங்கள் ஊடாக மனித இனத்தின் மீட்பர்களால் போதிக்கப்பட்ட, இவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று, ஒவ்வொரு தனிநபரும் இறைவனுடன் நேரடியாக சொந்தத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே.

தினசரி தியானம் மூலம் நாம் நமது உண்மை இயல்பை நினைவு கொள்வதற்காக, அந்த உணர்வு நிலையில் உணர்வதற்கு எவ்வளவு அதிகம் கடும் முயற்சி செய்கிறோமோ, அவ்வளவு அதிகம் கிறிஸ்துவிடத்தில் இருந்து, மற்றும் நம் ஒவ்வொருவர் அகத்திலும் இருக்கின்ற அந்த தெய்வீகத்தை நாம் வெளிப்படுத்துவோம். இதுதான் செல்ஃப் ரியலைசேஷன் செய்தி. இது, இந்தியா ஏற்றுக் கொள்ளக்கூடிய, கிறிஸ்துவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் அனைத்து மதவாதிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு செய்தியாகும். இது எந்த மதத்தின் போதனைக்கும் எதிரானது அல்ல.

எண்ணம், மாபெரும் சக்தியை பெற்றுள்ளது: எண்ணத்திலிருந்து அனைத்து செயலும் எழுகின்றன. இந்த வரையறைக்குட்பட்ட உலகத்தில் அனைத்தும் எண்ணத்தினால் விளைகின்றன. இந்த பிரபஞ்சத்தில் இதுதான் அனைத்து உயிர்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களைப் பாதிக்கும் சக்தியுடன் கூடிய மிகவும் வலிமை மிக்க ஆற்றல் ஆகும். ஆகையால் நம் எண்ணங்கள் எதிர்மறையாக இருப்பதற்கு மாறாக நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது எத்தனை முக்கியமாகிறது. இன்று, இலட்சக்கணக்கான மக்கள் ஒரு எதிர்மறை வழியில் எண்ணிக் கொண்டும் செயல் புரிந்து கொண்டும் உள்ளனர். எனவே நம்முடைய மற்றும் நம் முழு உலகத்தினுடைய அக்கறையில் நமது சக மனிதர்களுக்காக பிரார்த்தனை செய்வதால் நாம் அனைவரும் ஒரு தீவிரமான பங்கேற்க வேண்டும். போதுமான ஆன்மாக்கள் பங்கு பெறும் போது அவற்றின் ஒன்றிணைந்த, நம்மை, அன்பு, கருணை மற்றும் நேர்மறையான நடத்தை ஆகியவற்றின் எண்ண – அதிர்வுகள், உலகெங்கிலும் உள்ள உயிர்களை மாற்றவல்ல ஒரு மாபெரும் சக்தியை உருவாக்குகிறது.

குருதேவர்: பரமஹம்ஸ யோகானந்தர் பற்றிய நினைவுகள்.

நான் பதினேழு வயது நிரம்பிய இளம் பெண்ணாக இருந்தேன், வாழ்க்கையானது எங்கும் இட்டுச் செல்லாத ஒரு நீளமான வெற்றுப் பாதையாக எனக்குத் தோன்றியது. என் உணர்வு நிலையினுள், நான் இறைவனை நாடுவதற்கும் மற்றும் அவனுக்கு சேவை புரிவதற்கும் என்னை ஏதுவாக்கும் ஓர் செயல்நோக்கம் மிக்க வாழ்க்கைக்கு என் காலடிகளை அவன் வழிநடத்தக் கோரும் ஓர் இடைவிடாத பிரார்த்தனை, சுழன்று கொண்டிருந்தது.
அந்த இயக்கத்திற்கான விடை, 1931ல் சால்ட் லேக் நகரத்தில் உள்ள பிரம்மாண்டமான கூட்டம் நிறைந்த அரங்கில் நான் நுழைந்து, மேடையில் நான் இதற்கு முன்னால் ஒருபோதும் கண்டிராத அளவில் இறைவனைப்பற்றி அத்துணை அதிகார உரிமையுடன் பரமஹம்ஸர் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட போது, ஓர் உடனடி அனுபூதியாக வந்தது. நான் முற்றிலுமாக அசைவற்று போனேன் – என் சுவாசம், எண்ணங்கள், காலம் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தோன்றின. இறை அருள் ஆசிகள் என் மேல் பொழிந்துக் கொண்டு இருந்ததைப் பற்றிய ஓர் அன்பான நன்றி மிக்க புரிதல், அத்துடன் என்னுள் எழுந்து கொண்டிருந்த ஓர் ஆழ்ந்த நம்பிக்கையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை கொணர்ந்தது:  “இந்த மனிதர், நான் இறைவனை என்றுமே நேசிக்க ஏங்கியது போல், அவனை நேசிக்கிறார். இவர் இறைவனை அறிந்தவர். இவரை நான் பின்பற்றுவேன்.”
நான் பரமஹம்ஸருடன் இருக்க ஆசீர்வதிக்கப்பட்டிருந்த பல வருடங்கள் ஊடாக, நான் அவரை ஒருபோதும் வெறுமனே ஒரு மனிதனாக மட்டும் பார்த்ததே இல்லை. அவர் அத்துணை தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்; இந்த ஒரே வழியில் தான் நான் அவரை விவரிக்க முடியும். . . . . அவர் எனக்கு மறை நூலின் பக்கங்களில் இருந்து நேராக வெளிவந்த ஒருவரைப் போன்று தோன்றினார். அத்தகைய இறை போதையுற்ற, அன்பான உலகளாவியத் தன்மை! கிரியா யோகம் என்று நாம் அழைக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் விஞ்ஞானத்தை மேல் நாட்டிற்கு மற்றும் உலகிற்குக் கொணர்தல். மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகள்  யோகதா சத்சங்க பத்திரிகை மற்றும் எங்கள்  இணையதள புக் ஸ்டோரில் கிடைக்கப்பெறும் பின்வரும் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை

இதைப் பகிர