யோகதா சத்சங்க இதழ்

யோகதா சத்சங்கம் — உடல், மனம் மற்றும் ஆன்மாவை குணப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பத்திரிகை — ஆன்லைன் முகப்புப் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்; இது உலகின் மிக அதிக காலமாக நடத்தப்பட்டு வரும் யோகா இதழ்களில் ஒன்று ஒரு யோகியின் சுயசரிதம்  ன் ஆசிரியரான பரமஹம்ஸ யோகானந்தரால் உருவாக்கப்பட்ட யோகதா சத்சங்கம் உயர்ந்த உணர்வுநிலையை நாடுபவர்களை, ஆன்மாவைப் பரம்பொருளுடன் ஒன்றிணைத்து, நல்லிணக்கத்துடனும் நலத்துடனும் வாழ்வதற்கான இந்தியாவின் பண்டைய அறிவியல் எனும் யோகத்தின் காலத்தால் அழியாத உலகளாவிய உண்மைகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

2021-ம் ஆண்டில்,  யோகதா சத்சங்கம் 2021-ம் ஆண்டில், யோகதா சத்சங்கம் அச்சு மற்றும் இணையவழி இதழின் கூட்டாக மாறியது. பத்திரிகையின் இந்த புதிய கலப்பின வடிவம் ஒரு செறிவுமிக்க வகைதொகைத் தொகுதிகள் கொண்ட ஆன்லைன் விஷயங்களை மற்றும் ஒரு சிறப்பு வருடாந்திர அச்சுவடிவ மற்றும் டிஜிட்டல் வெளியீட்டை வழங்குகிறது— மேலும் இப்போது இந்தியாவின் யோகதா சத்சங்க சொஸைடி வழங்கும் உத்வேகமூட்டும் மற்றும் அறிவுறுத்தல் வழங்கும் மல்டிமீடியா விஷயங்களைக் கொண்ட பரந்த வரிசையில் ஒன்றாக இடம் பெறுகிறது.

இதழின் பரிணாம வளர்ச்சியின் இந்த அடுத்த கட்டத்தில், யோகதா சத்சங்கம் இதழின் பரிணாம வளர்ச்சியின் இந்த அடுத்த கட்டத்தில், யோகதா சத்சங்கம் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு யோகத்தின் காலங்காலமாக-நிரூபிக்கப்பட்ட உத்திகளையும் பரமஹம்ஸ யோகானந்தரால் வாழ்க்கையைப் பெரிய அளவில் மாற்றவும் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் அவர்களின் உயர்ந்த திறனை அடையவும் கொண்டுவந்த நடைமுறைக்கேற்ற “எப்படி-வாழ-வேண்டும்” ஆன்மீகத்தையும் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள தொடர்ந்து உதவும்.

யோகதா சத்சங்க சஞ்சிகையின் முன்னோட்டம், 2023 வருடாந்திர வெளியீடு

கடந்தகால உள்ளடக்கத்தின் டிஜிட்டல் தொகுப்பு

யோகதா சத்சங்க இதழின் சந்தாதாரர்கள் புதிய ஆன்லைன் நூலகத்தில் தற்போதைய இதழைப் படிக்கலாம்.

மேலும் வரும் மாதங்களில், அவர்கள் பத்திரிகையின் கடந்த இதழ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல வருட உத்வேகமூட்டும் படைப்புகளின் சிறப்பு ஆன்லைன் நூலகத்தை அணுக முடியும். இந்த அபூர்வமான ஞான வளம் பரமஹம்ஸ யோகானந்தர், ஸ்ரீ தயா மாதா மற்றும் கடந்தகால யோகதா சத்சங்க வாசகர்களால் ஆர்வத்துடன் உள்வாங்கப்பட்ட பிற விருப்பமான படைப்பாளர்களின் நூற்றுக்கணக்கான பக்கங்கள் உள்ளடக்கியது – – அத்துடன் அரிய புகைப்படங்கள் மற்றும் ஒய் எஸ் எஸ் செய்திகள் (தற்போது அவை ஒய் எஸ் எஸ் வரலாறு!).

"நான் உங்கள் அனைவரிடமும் பேசுவேன் ..."

இந்தியாவிலிருந்து மேற்கில் வந்து 1920ல் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பை நிறுவிய பிறகு, பரமஹம்ஸ யோகானந்தர் விரைவில் அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களுக்கு பயணம் செய்யத் தொடங்கினார், மற்றும் நவீன காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு அவரது குருமார்களால் பரப்பப்பட்ட ஆன்ம-அனுபூதியின் பண்டைய அறிவியலான கிரியா யோகத்தின் போதனைகள் குறித்த வகுப்புகளை நடத்தினார். யோகானந்தர் தொலைதூர நகரங்களில் உள்ள தனது வகுப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் வழக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக, “நான் இந்த இதழின் பத்திகள் மூலம் உங்கள் அனைவருடனும் பேசுவேன்” என்று கூறியவாறு 1925ல் தனது பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார்.”

இன்று வரை  யோகதா சத்சங்கம் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது ஆன்மீக வாரிசுகள் மற்றும் பிற நெருங்கிய சீடர்களின் யோக தியான அறிவியல், சமச்சீரான ஆன்மீக வாழ்க்கையை வாழும் கலை ஆகியவை பற்றிய முன்னர் வெளியிடப்படாத பேச்சு மற்றும் எழுத்துக்களை வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

பண்டைய ஞானம் மற்றும் நவீன சிந்தனையின் தனித்துவமான ஒரு கலவை

தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளபடி, யோகதா சத்சங்கம் “உடல், மனம் மற்றும் ஆன்மாவை குணப்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பத்திரிகை—சரியான உணவு, சரியான வாழ்க்கை, இறைவனின் எல்லாம்-வல்ல பிரபஞ்ச சக்தியால் உடலை மீண்டும் செறிவூட்டுவது ஆகியவற்றின் மூலம் உடலை நோயிலிருந்து குணப்படுத்துதல்; ஒருமுகப்பாடு, ஆக்கப்பூர்வமான சிந்தனை, உற்சாகம் ஆகியவற்றால் மனத்திலிருந்து இணக்கமின்மை மற்றும் திறமையின்மையை நீக்குதல்; மற்றும் தியானத்தின் மூலம் ஆன்மீக அறியாமையின் தளைகளிலிருந்து என்றும்-முழுநிறைவான ஆன்மாவை விடுவித்தல்.”

யோகதா சத்சங்கம் பரந்த அளவிலான தலைப்புகளின் மீதான நுண்ணறிவை வழங்கும் கவர்ச்சிகரமான மற்றும் தகவல்-நிறைந்த கட்டுரைகளுடன் பழங்கால ஞானம் மற்றும் நவீன சிந்தனையின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. தலைப்புகளில் சில பின்வருமாறு :

  • ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் ஓர் அமைதியான உலகத்திற்காக தியானத்தின் இன்றியமையாத பங்கு
  • எல்லா வயது மக்களுக்கும் தேவையான “எப்படி-வாழ-வேண்டும்” கொள்கைகள்
  • வெளிப்புறச் சிக்கலையும் முரண்பாடுகளையும் தாண்டி சமநிலையையும் எளிமையையும் கண்டறிதல்
  • வாழ்க்கை, மரணம் மற்றும் மறுபிறவி ஆகியவற்றின் இயல்பு
  • உலக நிகழ்வுகள் மற்றும் உலக நாகரிகம் பற்றிய ஒரு ஆன்மீகக் கண்ணோட்டம்
  • மனச் சக்தி, அமைதி, மற்றும் அமோகமான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வளர்த்தல்
  • தெய்வீகத்துடன் ஒரு தனிப்பட்ட உறவை மற்றும் மற்றவர்களுடனும் சுயத்துடனும் ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குதல்
  • நவீன அறிவியல் மற்றும் பண்டைய இந்திய தத்துவத்தின் சந்திப்பு

இதழிலிருந்து கட்டுரைகளின் மாதிரியை படித்து மகிழவும்

யோகதா சத்சங்க பத்திரிக்கையின் மாதிரி இதழைப் படியுங்கள்

ஏப்ரல்-ஜூன் 2020 இதழ்

பத்திரிகையின் சில சமீபத்திய கட்டுரைகளைப் படியுங்கள் (ஆங்கிலத்தில்)

சுவாமி ஆனந்தமோய் கிரியின் “நாம் உண்மையில் ஒரு சிறந்த யுகத்தில் நுழைகிறோமா?”

ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் “நமது அச்சங்களை எதிர்கொள்வதற்கான துணிவு”

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் “யோகம் மற்றும் உணர்ச்சிகள்: உடல்நலம், மகிழ்ச்சி, ஆன்ம-அனுபூதி ஆகியவற்றுக்கான மனவெழுச்சிப் பக்குவம்”

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் “இறைவனின் பேரன்பையும் பேரின்பத்தையும் கொண்டுவரும் யோக சாதனை”

சுவாதி முகர்ஜியின் “நித்தியத்தை வாங்குதல்: நமது ஆன்மீக இலக்குகளை அடைய பொருளாதாரக் கொள்கைகளின் சக்தியைப் பயன்படுத்துதல்”

சுவாமி பக்தானந்த கிரியின் “தெய்வீக இருப்பைப் பயிற்சி செய்தல்”i

எங்கள் இணையதளத்திலிருந்து மேலும் உத்வேகங்கள்

கடந்த இரண்டு தசாப்தங்களில் நமது உலகம், தகவலும் அறிவுறுத்தலும் வெளியிடப்பட்டு உலகளாவிய பார்வையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் வழியில் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது. ஒய் எஸ் எஸ் மாணவர்களுக்கும்—மற்றும் முதல் முறையாக ஒய் எஸ் எஸ் -ஐப் பற்றி அறிபவர்களுக்கும்— பரமஹம்ஸ யோகானந்தர் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் -ன் எதிர்காலத்திற்காகத் திட்டமிட்ட உலகளாவிய ஆன்மீக சமூகத்தையும் கூட்டுறவையும் ஒரு பெரிய அளவில் அனுபவிக்க உதவ ஆன்லைனில் பலவகையான பன்னூடக வழங்கல்களை (multimedia offerings) அதிக அளவில் கொடுத்தவாறு யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பல வழிகளில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது மற்றும் இதிலிருந்து பலனடைந்துள்ளது.

கூடுதலாக, பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோகம், போதனைகளைப் பரப்புவதில் சமீபத்தில் ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது. 2019ம் ஆண்டில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் யோகதா சத்சங்கப் பாடங்களின் கூடுதலாக, பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோகம், போதனைகளைப் பரப்புவதில் சமீபத்தில் ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது. 2019ம் ஆண்டில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, யோகதா சத்சங்கப் பாடங்களின் முழுமையான மற்றும் மேம்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது, இது பரமஹம்ஸரின் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான எழுத்து, சொற்பொழிவு, சாதகர்களுக்கான தனிப்பட்ட அறிவுறுத்தல் ஆகியவற்றின் மொத்தத்திலிருந்து பெருமளவு எடுத்தவாறு, அவரது போதனைகள் மற்றும் உத்திகளின் மிக ஆழமான விளக்கத்தை உள்ளடக்குகிறது.

இந்த அனைத்து நிகழ்ச்சிகளின் வழியாகவும், , 1925ம் ஆண்டில் ஆன்ம-அனுபூதி (யோகதா சத்சங்கம்) பத்திரிக்கையின் முதல் இதழின் வெளியீட்டில் மிதமாகத் தொடங்கிய உத்வேகத்தின் ஓட்டம், பரமஹம்ஸரின் போதனைகளின் ஞானம் நாடுபவர்களுக்கு ஈடு இணையற்ற அளவில், அவர் பத்திரிகையை துவக்கியபோது எத்துணை சாத்தியப்பட்டதோ, அதைவிட மிகப்பெரிய அளவில், கிடைக்கச் செய்தவாறு, அதிவேகமாக விரிவடைந்திருக்கிறது.

எங்கள் தளத்தில் இந்த வழங்கல்களின் எடுத்துக்காட்டுகளைப் பற்றி அறியவும் அவற்றுக்கான இணைப்புகளைக் காணவும் கீழே செல்லுங்கள்.

வழிநடத்தப்படும் தியானங்களுடன் வாராந்திர ஆன்லைன் உத்வேகம் தரும் சேவைகள்

2020ம் ஆண்டில், ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் வழிகாட்டப்பட்ட தியானங்களுடன் வாராந்திர ஆன்லைன் உத்வேகமூட்டும் சொற்பொழிவுகளை வழங்கத் தொடங்கியது; இவற்றில் தற்போதைய ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளுடன் கூடுதலாக பரமஹம்ஸரின் கடந்தகால அன்பான நெருங்கிய சீடர்களான ஸ்ரீ தயா மாதா, ஸ்ரீ மிருணாளினி மாதா, சுவாமி ஆனந்தமோய் கிரி ஆகியோரின் மற்றும் பிறரின் சொற்பொழிவுகளும் அடக்கம். இந்த வீடியோக்கள் எஸ் ஆர் எஃப் மற்றும் ஒய் எஸ் எஸ் இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.

ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து வீடியோ சொற்பொழிவுகள், தியானங்கள் மற்றும் உரியநேரச் செய்திகள்

ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவர்களிடமிருந்து—பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக வாரிசுகள்—சொற்பொழிவுகள் மற்றும் தற்போதைய செய்திகள் யோகதா சத்சங்க பத்திரிகையின் முக்கிய அம்சம். இந்தப் பாரம்பரியம் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவர் சுவாமி சிதானந்த கிரியின் நுண்ணறிவு மற்றும் உத்வேகத்துடன் எங்கள் இணையதளப்பதிவிலும் எங்கள் பத்திரிகையின் வருடாந்திர அச்சு இதழிலும் தொடர்கிறது. கூடுதலாக, சுவாமி சிதானந்த கிரி தலைமையிலான வழிகாட்டப்பட்ட தியானங்களின் வீடியோக்கள் கிடைக்கின்றன.

யோகதா சத்சங்கச் செய்திகள்

பல வருடங்களாக யோகதா சத்சங்க பத்திரிக்கையின் பல வாசகர்கள், பத்திரிகையின் “ஒய் எஸ் எஸ் செய்திகள்” பகுதியைத் தொடர்ந்து படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். எங்கள் வலைப்பதிவின் செய்திப் பிரிவின் வாயிலாக—பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன்—ஒய் எஸ் எஸ் பற்றிய வழக்கமான மேலதிகத் தகவல்களை நீங்கள் பெறலாம். கூடுதலாக, ஆண்டின் சிறப்பம்சங்கள் வருடாந்திர அச்சுப் பத்திரிகைககளில் வெளியிடப்படும்.

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான மையம்

2021ம் ஆண்டில் இந்திய யோகதா சத்சங்க சொஸைடி ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திராவை ஆரம்பித்தது, இது ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் பாட மாணவர்களுக்கான—அத்துடன் தியானத்திற்கு புதிய எவரொருவருக்குமான—கூட்டுத் தியானங்களின் விரிவான தினசரி அட்டவணையை வழங்குகிறது. பெரும்பாலானவை நீண்டகால ஒய் எஸ் எஸ் சாதகர்களால், ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகின்றன. கூடுதலாக, வாராந்திர கூட்டுத் தியானங்கள் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால். வழிநடத்தப்படுகின்றன.

ஒய் எஸ் எஸ் பாடங்கள்

யோகதா சத்சங்கம் இதழின் உத்வேகத்தையும், அத்துடன் ஒரு யோகியின் சுயசரிதத்தில் உள்ள ஆழமான உண்மைகளையும் எடுத்துக்கொண்டு, ஒய்எஸ்எஸ்-ஸின் “எப்படி வாழ வேண்டும்” கொள்கைகளையும் தியான உத்திகளையும் தங்கள் வாழ்வில் முழுமையாக ஒருங்கிணைக்க விரும்புவோருக்கு, பரமஹம்ஸ யோகானந்தர் யோகதா சத்சங்கா பாடங்களை உருவாக்கினார்; இது தியானம் மற்றும் சமநிலையான ஆன்மீக வாழ்க்கை பற்றிய அவரது தனிப்பட்ட மற்றும் ஆழமான அறிவுறுத்தலை வழங்கும் ஒரு விரிவான வீட்டிலிருந்தே பயிலும் கல்வி முறையாகும். இதைப் பற்றி மேலும் அறிய கீழே உள்ள இணைப்பிற்குச் சென்று, ஆனந்தமிக்க இந்தப் பயணத்தைத் தொடங்குங்கள்.

பதிவு செய்ய

தயவுசெய்து கவனிக்கவும்: தற்போது, ஒய் எஸ் எஸ் இதழ் ஆங்கிலம், இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது.

பக்தர் முகப்பு அல்லது ஆன்லைன் புக் ஸ்டோர் மூலம் புதிதாக வெளியிடப்பட்ட முதல் வருடாந்திர இதழுக்கு நீங்கள் சந்தாதாரர் ஆகலாம்